Monday, August 10, 2015

கூகிளின் புதிய CEO ஒரு தமிழன் - சுந்தர் பிச்சை

கூகிளின் புதிய CEOவாக சுந்தர் பிச்சையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஜவஹர் வித்யாலயாவில் படித்தவர். பின் ஐஐடி காரக்பூரில் பொறீயியல் முடித்து பின் ஸ்டான்ஃபோர்டில் எம்.எஸ் படித்தார்!

முன்பு மைக்ரோசாஃப்ட் CEO போட்டியில் சத்யாவோடு மோதினார். கூகிளில் 2004ல் வேலைக்கு சேர்ந்தார். கூகிள் க்ரோம் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.

”2008 சமயத்தில் ஒரு alternative browser எல்லோருக்கும் தேவைப்பட்டது. அப்போது google chrome ஐ மிகச்சிறப்பாக வடிவமைத்து. இன்று ஒரு மில்லியன் பயனாளர்களுக்கும் மேல் பயன்படுத்துவதற்கு முக்கியக்காரணம் சுந்தர் தான்” என கூகிளின் முந்தைய CEOவான லேர்ரி பேஜ் இவரை பற்றி தன் வலைதளத்தில் குறிப்பிடுகிறார்!

2011ல் டிவிட்டர் இவரை உற்று நோக்கி எங்க கம்பெனிக்கு வைஸ் பிரெசிடெண்டா வர்றீங்களா என கேட்டுக்கொண்டது.. ஆனால் அப்போது கூகிளிலேயே இருக்கப்போவதாக தெரிவித்தார். அது மிகச்சிறப்பான முடிவு. அதனால் தான் இன்று CEO அளவுக்கு உயர்ந்திருக்கிறார்!

தமிழன் ஒருவன் உலகின் தலைசிறந்த தேடுபொறி நிறுவனத்தில் CEO ஆகியிருப்பது தமிழர்களுக்கு பெருமை.. அவருக்கு வாழ்த்துக்கள்! 

Sunday, May 31, 2015

க.சீ.சிவகுமார் பற்றி

நேற்று வித்தியாசமான நாள். ஒரு இலக்கியக்கூட்டம்.. என்னை பேச அழைத்திருந்தார்கள்.. “க.சீ.சிவகுமார் படைப்புகள் ஒரு பார்வை” என்ற தலைப்பு.
ஆதிமங்கலத்து விஷேசங்கள் பற்றி நான் பேசியபோது
எனக்கு அவர் யாருண்ணே தெரியாதே.. என்ன பேசுவேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இணையத்தில் அவர் யாரென தேடிப்பார்த்த போது ஒரு முறை அவரை நீயா நானாவில் பார்த்ததாக நினைவு.. விகடனில் அவர் பெயரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்!
“ஆதிமங்கலத்து விஷேசங்கள்” என்ற அவரின் புத்தகம் பற்றி பேச சொல்லியிருந்தார்கள்..
அந்த புத்தகம் ஜூ.வியில் தொடராக வந்த ஒன்று. ஜாலியான புத்தகம். பஸ்,கார்,கரண்ட்,டார்ச் லைட், டிவி, சினிமா கொட்டாய் இதெல்லாம் இல்லாத ஊர்களில் இவை முதல் முதலில் நுழைந்த போது, ஊர்காரர்கள் அதை அணுகிய விதத்தை நகைச்சுவையாக பதிவு செய்திருந்தார்!
கவித்துவமான எழுத்து..இலக்கிய ஆசாமியாக இருப்பார் போல.. எதாவது பேசி தேத்திடுவோம் என்று தான் நிகழ்வுக்கு சென்றேன்! அவர் மொத்தமே 7 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அவற்றின் பிரதிகள் இப்போது எந்த அச்சிலேயும் இல்லை. எப்போதோ முதல் பதிப்பு கண்டவை. சமீபகாலமாக அவர் எழுதுவதே இல்லையாம். மன உளைச்சலுக்கு ஆளாகி நிறுத்திக்கொண்டாராம்.
க.சீ.சிவகுமார்
அவருடைய பல கதைகள் அரங்கில் பேசப்பட்டது. நல்ல நகைச்சுவை, கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அரங்கமே சிரித்துக்கொண்டிருந்தது! அவர் காலத்து எழுத்தாளர்களெல்லாம் சினிமாவில், சீரியலில் எழுதி காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். “நீங்க ஏன் எதுவுமே பண்ணல” என்ற கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் சுருக்குன்னு இருக்கு! என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாக சிரித்தார்!
அவர் அவரை பற்றி பேசியதை கூட சிரித்துக்கொண்டே, நைய்யாண்டியோடே பேசினார். அவரின் சிரிப்புக்குப்பின் ஒரு மெல்லிய சோகம் இருப்பதை பார்க்க முடிந்தது!
விழா முடிந்து தூரத்தில் நண்பர்களோடு டீ கடையில் தம்மடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்!
யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளன் என் மனதில் ரொம்பநாள் நிற்கப்போவதற்கான அறிகுறி தென்பட்டது!

Wednesday, February 25, 2015

consumercomplaint.in பக்கத்தில் இருந்து புகாரை நீக்குவது எப்படி?

நண்பரின் நண்பர் ஒருவர் சென்னை அரும்பாக்கத்தில் நிறுவனம் வைத்திருக்கிறார். அவரின் நிறுவனத்தை பற்றி consumercomplaints.inல் யாரோ புகார் எழுதியிருக்கிறார். நண்பரின் நிறுவனப்பெயரை கூகிளில் அடித்தாலே consumercomplaints பக்கம் தான் முதலில் வருகிறதாம். அதனால் பிசினஸ் ஹெவியா அடி வாங்கிருச்சி. எங்ககிட்ட business பேசற பூரா பயலும் “உங்கள பத்தி ஒரு கம்ப்ளெயிண்ட் ஒண்ணு கேள்வி பட்டோம்? அதை பத்தி என்ன நினைக்கறீங்க?”ன்னு எதோ குங்குமம்ல பேட்டி எடுக்கறவன் மாதிரி எடுத்துருக்காய்ங்க

நண்பர் அந்த தளத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.. பதிலில்லை. அந்த போஸ்டை போட்டவன் பத்தி எந்த விபரமும் தெரியாது. நீங்க எதாவது பண்ணி அதை கூகிள்லேர்ந்து தூக்க முடியுமா? என்றார்!

அந்த consumercomplaints தளத்தை நடத்துபவன் அமெரிக்காவில் இருக்கிறான். ஏற்கனவே அவன் பெயரில் மும்பை சைபர் செல்லில் கம்ப்ளெயிண்ட் இருக்கு. consumercomplaintsல் யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் எந்த அவதூறையும் எழுதலாம்.. உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களும் எழுதியிருக்கிறார்கள். எனவே எது உண்மை எது பொய் என தெரியாது. இது மாதிரியான பிரச்சினைகளை கையாள்வதற்கு பெயர் reputation management services என்பார்கள்.

யார் புகார் கொடுத்தாரோ அவரிடம் பேசி அவருக்கு இழப்பீடு பெற்று தந்து, அந்த பதிவை நீக்க செய்வோம். அல்லது அந்த தளத்தின் webmaster உடன் பேசி ரிமூவ் செய்யலாம். இரண்டுக்குமே கணிசமான பணம் செலவாகும்.எரியற வீட்டுல புடுங்குனது லாபம்னு நடந்துக்குவாய்ங்க.

ஆனால் இந்த consumercomplaints ஆசாமியை தொடர்புகொள்ளவே முடியாது. பலரும் முயற்சித்து பார்த்திருக்கிறார்கள். 

இன்னொரு உத்தி இருக்கு. கூகிளின் முதல் பக்கத்தில் இருந்து consumercomplaintஐ தூக்கி 3வது 4வது பக்கத்தில் தள்ளிவிட்டால் போதும். பெரிய அளவில் அடி இருக்காது. மற்றவற்றை ஒப்பிடும்போது இதற்கு செலவு குறைவு. பெரு நிறுவனங்கள் இதைத்தான் செய்கிறார்கள். 

Thursday, February 19, 2015

டெல்லி வேலை!

ஒராண்டுக்கு முன் டெல்லி வந்திருந்தேன்.. சும்மா சுத்தி பாக்க.. ஒரு அஞ்சு நாள் இருந்தேன்..ஓரளவு சுத்தி பார்த்தேன் என்றாலும், ஒரு எண்ணம். “கொஞ்ச நாள் இங்கயே இருந்தா நல்லா இருக்கும்ல” என்று!

ஆனால் அது எப்படி சாத்தியம்? நண்பரிடம் சொல்லி வைத்திருந்தேன். “யோவ் நமக்கு எதாவது வேலை இருந்தா சொல்லுயா” என்றேன்.

பொதுவாகவே எல்லா வேலைகளும் permenant என்று சொல்லப்படுகிற நிலையான தோற்றமுடையவை! என்னவோ நாம அதே கம்பெனிலயே கடைசி வரைக்கும் வேலை பாத்து CEO ஆக போற மாதிரி தான் effect குடுப்பாய்ங்க!

திடீரென ஒரு நாள் கால் செய்தார்! “யோவ் ஒரு offer வந்துருக்கு.. worldcup அப்ப டெல்லில இருக்கணும்.. ரெண்டு மாசம் தான் வர்றியா?” என்றார்!

தங்குமிடம் குடுத்துருவாய்ங்க.. சாப்பாடும் குடுத்துருவாய்ங்க.. சம்பளமும் குடுத்துருவாய்ங்க (முதலாளி கூட உக்காந்துகிட்டே தான் வேலை பாப்பாரு..நாம படுத்துகிட்டே வேலை பாக்கலாம் :D)

கேக்கவே ரொம்ப கிளுகிளுப்பாக இருந்தது. முப்பது ரூவா கூட குடுத்தா மூணு நாள் கண்ணு முழிச்சி வேலை பாப்பேண்டா என்று அடுத்த ட்ரெயினை பிடித்து டெல்லி வந்தேன்!

இங்கே ஒரு ஹோட்டல்ல எனக்குன்னு தனி ரூம் குடுத்துருக்காய்ங்க.. டீவி, ப்ரிட்ஜ், ஏசி.. நாள் முழுக்க கிரிக்கெட் பார்க்கணும். பத்து ஓவருக்கு ஒருக்க வாய்ஸ் அப்டேட் கொடுக்கணும் தமிழில்!

கிரிக்கெட் உலகில் வர்ணனையாளராக 20 வருடங்களாக இருக்கும் ராமன் பனாட்டின் அலுவலகம் இது! ( அவர் டிடி, நியோ ஸ்போர்ட்ஸ், செட் மேக்ஸ் போன்ற பல தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார்)

நேற்று மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ராமன் பனாட் என் கேபின் வந்தார்! “howz going vaithee"என்றார்!

“கோயிங்க் சூப்பர் சார்” என்றேன்!

”நீ தமிழ் கமெண்ட்ரி குடுப்பியா” என்றார்!

ஒரு நிமிடம் திகிலாகிவிட்டேன். இதெல்லாம் உண்மையா என்ற எண்ணம்! “இல்ல சார். ஆனா ப்ராக்டீஸ் பண்ணி பாத்தேன்.. முடியும்னு தான் தோணுது” என்றேன்!

“சீக்கிரம் ரெடியாகு. அடுத்து நீ தமிழ் கமெண்ட்ரி தான் பண்ண போற” என்றார்!

நல்ல கனவு ஒன்று போய்க்கொண்டிருக்கிறது.. யாரும் எழுப்பாதவரை நலம்!

Tuesday, January 13, 2015

இது கூட தெரியாதா?

அவசரமாக என் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் OS போட வேண்டி இருந்தது, நண்பர் ஒருவரிடம் இருந்தது. ஹாக்கிங்க் பற்றியெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் OS போட தெரியாது.காரணம் என்கிட்ட ரொம்ப வருடமாக சிஸ்டம் இல்லை.ஒரு ஹார்டுவேர் இன்ஸ்ட்யூட் போனேன். அவங்க சொல்லி குடுத்தாங்க. அதெல்லாம் மறந்து போச்சு.

இன்ஸ்ட்யூட்களில் எதெதோ வித்தையெல்லாம் காட்டினார்கள். ஆனால் கையில் எதையுமே கொடுக்க மாட்டார்கள். இதுக்குன்னே ஒரு நாள் ஒதுக்கி ஒவ்வொருத்தரா OS இன்ஸ்டால் பண்ண வைக்க போறேன் என்றார். அந்த ஒரு நாளுக்குள் நான் அந்த இஸ்ட்யூட் போவதை நிறுத்திக்கொண்டேன். எனக்கு வேலை கிடைச்சிருச்சி.

கல்லூரியில் என் நண்பன் ஹார்டுவேர் எஞ்ஜினியர். ஒரு நாள் வா கத்துதறேன் என்றான். அந்த ஒரு நாள் அமையவே இல்லை. இப்படி பல ஒரு நாள் போயிடுச்சி. அதென்ன ஒரு நாள்?

“OS இன்ஸ்டால் பண்ண ஒரு நாள் முழுக்க ஆகும்” இது தான் எனக்கு எல்லோருமே சொன்னது. கேட்டா driver install பண்ணனும். அது வேணும் இது வேணும். சிஸ்டம் performance, ram speed என்று எதெதோ சொல்லி குழப்புவார்கள்.

நேற்று நண்பர் வீட்டுக்கு அதுக்காகவே காலை சீக்கிரமே கிளம்பிவிட்டேன். அவர் மதியம் 1 மணி வரை தான் இருப்பாராம். அதுக்குள்ள வேலையை முடிச்சிடணும் என திட்டமிட்டுக்கொண்டேன். அவர் வீட்டுக்கு சென்றேன். அவர் ஜூஸ் குடுத்தார், ஸ்னாக்ஸ் கொடுத்தார், “யோவ் நான் கேட்டத தவிர எல்லாம் குடுக்கறான் பாரு. மொதல்ல வந்த வேலைய பாப்போம்” என்று நினைத்துக்கொண்டேன்.

பெண்ட்ரைவ் சின்னது. அதில் குளறுபடி என்று நேரமாகிக்கொண்டே போனது. கடைசியில் 12.30 ஆகிவிட்டது. இன்னைக்கும் போச்சா என்று நினைத்துக்கொண்டேன். பெண்ட்ரைவை தூக்கி கம்ப்யூட்டரில் போட்டு ரெண்டு ஓகே பட்டனை அழுத்தினால் windows 7 பக்காவாக ஏறி என் கணினியில் உட்கார்ந்துகொண்டது.இருபது நிமிடத்திற்குள் வேலை முடிந்தது.

ஒரு நிமிடம் நான் ஸ்தம்பித்துவிட்டேன். “பூரா பயலும் ஒரு நாள் முழுக்க ஆகும்னு சொன்னாய்ங்க. இது என்னடா புதுசா இருக்கு” என்று.

windows xp தான் ஒரு நாள் முழுக்க எடுத்துக்கொள்ளுமாம்.windows 7 அவ்ளோ நேரம் எடுத்துக்காதாம். அதுவும் சிடி போட்டால் எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட usb installation ரொம்ப ஸ்பீடாக இருக்குமாம்.

bca முடித்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது எனக்கு இதை தெரிந்துகொள்ள. இதுதானாய்யா உங்க டக்கு என்று வியந்துகொண்டேன். பெரும்பாலும் கற்றுக்கொடுப்பவர்களிடம் இருக்கிற பிரச்சினையே அவர்கள் எல்லாத்தையும் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

“இதுல கைய வைக்காத வெடிச்சிடும். அதுல கை வைக்காத பொகஞ்சிடும். அத தொட்டன்னா அவ்வளவு தான். சென்னையை சுத்தி 48 கிலோ மீட்டர் கொளோஸ்” என்று எதாவது பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் கற்பது என்பது trial and error சார்ந்தது.

நாமாக எதையாவது கற்பதென்பது ரிஸ்க் தான். ஆனால் அது கொடுக்கிற அனுபவம் அலாதியானது.

Monday, January 12, 2015

டிசிஎஸ் ஊழியரின் கடைசி நிமிடங்கள்

டிசிஎஸ் HR, அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கடைசியாக பேசும் ஆடியோ எனக்கு whatsappல் வந்தது. formalityயாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என அவர் பேசுகிறார்.
இதை ரெக்கார்ட் செய்தவர் ஒரு பெண் என தெரிகிறது.

அவர் "ஏன் என்னை பணி நீக்கம் செய்கிறீர்கள் என்ற காரணத்தை சொல்ல முடியுமா?" என்கிறார்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. "ur performance,rating, ur attitude,team management,knowledge, உங்க பைக்ல பெட்ரோல் போடாதது என்பது மாதிரி மொக்கையாக என்னென்னவோ சொல்கிறார்"

இந்த பெண்மணி சுமார் 9 ஆண்டுகளாக பணிபுரிபவர்.. இதுவரை b அல்லது c ரேட்டிங்க் தான் பெற்றிருக்கிறார். ஒரு போதும் d ரேட்டிங்க் பெற்றதில்லை. 4 வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்திருக்கிறார். clientகளிடம் இருந்து நிறைய அப்ரைசல் வாங்கியிருக்கிறார். பல certification முடித்திருக்கிறார்.

"நான் அமெரிக்கால என் கணவரோட இருக்கப்போ maternity லீவ் எடுக்க வேண்டி இருந்துது. அதை கூட எடுக்காம சமாளித்தேன். அதனால் சரியா perform பண்ணாதது தான் ரீசன்னு சொல்லி என்னைய காயப்படுத்தாதீங்க" என்கிறார்!

"performance தான் காரணமென்றால் உங்க லிஸ்ட்ல top performer கூட இருக்காங்களே" என அந்த பெண்மணி கார்னர் செய்தபோது, "உங்க performance தான் காரணம் என நான் எங்கயுமே சொல்லல. அதுவும் ஒரு காரணம். இது மாதிரி பல விசயம் இருக்கு" என்கிறார்..
"அது என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்ற போது ஒரு பெண்மணி குறுக்கிட்டு..

"அதெல்லாம் ரொம்ப confidential data. வெளிய சொல்ல முடியாது. individual பத்தி எந்த டீடெயிலும் எங்ககிட்ட இருக்க டீடெயில்ல இல்ல." என்கிறார்
"சரி எங்க கையெழுத்து போடணும்னு சொல்லுங்க" என்று இந்த பெண்மணியும் கையெழுத்து போட்டு வெளியேறிவிடுகிறார்.

குறிப்பு : திறமை இல்லன்னா யாரா இருந்தாலும் வேலைய விட்டு அனுப்பதான் செய்வாங்க என்று என்னிடம் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி சண்டை போட்ட IT நண்பர்களுக்கு இந்த ஆடியோவை சமர்பிக்கிறேன்.
https://soundcloud.com/fiteorg/tcsliesexposed01

Saturday, January 10, 2015

சமைப்பது எளிதா?

புதுசா சமைக்க ஆரம்பித்த பொழுது அம்மாகிட்ட சொல்லுவேன். “ஆமா.. சமைக்கறது என்ன பெரிய கஷ்டம்? அதெல்லாம் ஒரு வேலையா? ”

“வெங்காயம் தக்களிய வதக்கி உப்பு மொளகா தூள் எல்லாம் போட்டா தக்காளி தொக்கு.. அது மேல புளிய ஊத்துனா குழம்பு, இதுவே பருப்பு வேக வெச்சி கலந்தா சாம்பார். இதுக்கு இவ்ளோ சீனு” என்பேன்.

இப்போது ஒரு நாளைக்கு இரண்டு வேளையாவது சமைத்து சாப்பிடுகிறேன். உண்மையில் சமைப்பதென்பது சாம்பார் வைப்பதோ, ரசம் வைப்பதோ அல்ல.
கடைக்கு போய் காய்கறி வாங்குவதில் இருந்து துவங்குகிறது, பின் அதை நறுக்க வேண்டும், பிறகு சாதம் வைத்து, சமைக்க வேண்டும், முழு concentration இதிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் உப்பு கூட போனாலும் வாயிலேயே வைக்க முடியாது.

இதை சாப்பிடுவதோடு வேலை முடிவதில்லை, அடுத்து பாத்திரம் தேய்க்க வேண்டும். இதெல்லாம் முடியும்போது அடுத்த உணவு வேளை நெருங்கும். அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்காவது ஆபீஸில் ஓபி அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது, இல்லன்னா லீவ் போட்டுக்கலாம்.
வயித்துக்கு ஏதுப்பா லீவு? உண்மையில் சமைக்கும் பெண்கள் தெய்வம்யா!

Monday, January 5, 2015

SEO ஒரு அலசல்

நேற்று என் நிறுவனத்திற்காக மார்கெட்டிங்க் சென்றிருந்தேன். client ஒருத்தர் நிறைய கேள்வி கேட்டார். பொதுவாகவே மார்கெட்டிங் செல்லும்போது கூடவே லேப்டாப்பையும் எடுத்து சென்றுவிடுவேன். அப்போது தான் நான் ஏற்கனவே SEO செய்த தளங்களையும் காட்ட வசதியாக இருக்கும்.

என்னிடம் வருவதற்கு முன்னால் அவர்களின் வெப்சைட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள், என்னிடம் வந்ததற்கு பின்னால் எத்தனை பேர் வந்தார்கள் என டெமோ காட்ட வேண்டும்.இதை website traffic என்பார்கள். சில நிறுவனங்கள் இதை போலியாக உருவாக்குவார்கள். "உனக்கென்னய்யா.. மாசம் ஆயிரம் பேர் உன் வெப்சைட்டை பாக்கணும்? அவ்ளோ தானே.. ரைட்டு விடு" என்று வேலையை காட்டிவிடுவார்கள். 

இதற்கென பிரத்யேகமாக சில டூல்கள் இருக்கின்றன. அதை bot என்று சொல்லுவார்கள். வேறு வேறு ip addressகளில், வேறு வேறு நாடுகளில் இருந்து அந்த bot ஒரு தளத்தை பார்வையிடும். "என்னய்யா ஆயிரம் பேர் வெப்சைட்டுக்கு வர்றான். ஆனா ஒருத்தனும் பொருள் வாங்க மாட்டிகிறானே" என client ஒரு நாள் உசார் ஆவார்.

"நீங்க தானே சொன்னீங்க உங்க வெப்சைட்டுக்கு ஆள் வரணும்"னு.. வந்துட்டான்ல? பிசினஸ் நடக்கலன்னு வந்து என்னைய கேட்டா? என்று நம்மாட்களும் கையை விரித்து விடுவார்கள். இதை black hat SEO என்பார்கள். இதனால் பாதிக்கபட்ட பலரும் SEO என்றாலே தெறித்து ஓடிவிடுவார்கள். நான் மார்கெட்டிங்க் போன இடத்தில் பல பேர் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் இதில் clientகளிடமும் தவறு இருக்கிறது. உதாரணமாக ஒரு தளத்திற்கு SEO செய்தால், அது அடுத்த நாளே கூகிளின் முதல் பக்கத்தில் வந்து ஆயிரம் பேர் பார்வை செய்வார்கள் போல, என அவர்களாகவே ஒரு கற்பனை செய்திருப்பார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல.
ஒரு தளத்தை கூகிளில் submit செய்தால், அது indexஆக 48 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு அது keyword competition அடிப்படையில் வரிசைபடுத்தப்படும்.

அதென்ன keyword?

உதாரணமாக உங்கள் நிறுவனத்தின் பெயர் kumar software solutions என்று வைத்துக்கொள்வோம். "kumar software solutions" என்று கூகிளில் டைப்பினால் உங்கள் தளத்தினை காட்டும். ஆனால் இது அல்ல SEO. நாம எதுவுமே செய்யாமல் கூட கூகிள் இந்த தளத்தை முதல் பக்கத்தில் எடுத்துக்கொள்ளும். ஆனா இந்த SEO company என்ன பண்ணிடறாய்ங்க. "kumar software company"னு அடிச்சா முதல் பக்கத்தில் வரும் பாரு என்று காசு பிடுங்கி விடுகிறார்கள்.

உண்மையில் கூகிளில் தேடுபவர்கள் "sofware companies in chennai" என்று தான் தேடுவார்கள். அந்த categoryல் ஆயிரக்கணக்கான ஆட்கள் இருப்பார்கள். அந்த இடத்தில் நம் clientன் தளத்தை கொண்டுவர சில மாதங்கள் தேவைப்படும், அதீத உழைப்பு தேவைப்படும். குறிப்பா செலவாகும்.

இவ்வளவு விளக்கம் சொன்னா தான் என் மீது clientக்கு நம்பிக்கை வரும்.
(குறிப்பு : எவ்வளவு நம்பிக்கை வந்தாலும் வீட்டு போங்க கால் பண்றேன்னு தான் சொல்லுவாங்க )

Friday, January 2, 2015

எதாவது ஒரு துறைய choose பண்ணிக்கோ

"எதாவது ஒரு துறைய choose பண்ணிக்கோ. அதுல எக்ஸ்பர்ட் ஆகு" என்று சின்ன வயதிலிருந்து நிறைய பேர் எனக்கு சொல்லியிருக்கிறார்கள். அம்மா நறுக்கு தரித்த மாதிரி இதை சொல்வார். "நாய் வாய வச்ச மாதிரி அங்க ஒருவாய் இங்க ஒருவாய்ன்னு வைக்காத" என்று.

ஆனால் அம்பானியை எடுத்துக்கொண்டால், ஒரு பக்கம் பெட்ரோலிய நிறுவனம் வைத்திருக்கிறார், எலக்ட்ரிகல்ஸ், டெக்ஸ்டைல்.. இந்தியாவில் பல பொருட்கள் யுனிலிவருடையது.
அவர்களுக்கெல்லாம் அவங்க அம்மா அப்பாவோ, நண்பர்களோ ஒரே துறைய மட்டும் தேர்ந்தெடுங்க தம்பி என்று அறிவுறுத்தியிருக்கவே மாட்டார்களோ என்று தோன்றுகிறது.

நோக்கியா கம்பெனிய நம்பி மட்டுமே வேலை பார்த்து வேலையிழந்தவர்களுக்கு வேறு எதாவது தெரிஞ்சிருந்தா வேலை போன உடனே கவலைப்படாம எதாவது செய்திருப்பார்கள். நம்மூரில் ஐடியில் வேலை போன பல பேர் அவதிப்படுவதற்கு காரணமே ஒரு துறையில் எக்ஸ்பர்ட் ஆகும் உத்தி தான் காரணம் என்று தோன்றுகிறது.

உதாரணமாக நான் பிசினஸ் என்று இறங்கிய போது, நானே மார்கெட்டிங்கும் செய்து, வேலையும் செய்து, கணக்கு வழக்கும் பார்த்து, வசூலிப்பதில் துவங்கி, புதிய பிசினஸ்களை கண்டு பிடிப்பது துவங்கி நானே செய்தேன். அது கொடுத்த பார்வை விசாலமானது.

"ஹாங்காங்கில் சில நாட்கள்" என்று ஒருவர் எழுதிய புத்தகத்தில் படித்தேன். ஹாங்காங்கில் அவர் இருந்த போது,பைப் ரிப்பேருக்கு ஆள் தேவைப்பட்டிருக்கிறது, இளைஞன் ஒருத்தன் வந்திருக்கான், வேறு எதெதோ உதவி தேவைப்பட்ட போதும் அந்த பையனே வந்திருக்கான். அவனுக்கு பல வேலைகள் தெரிந்தது, சீனாவில் இது போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்!

justdial அலப்பறைகள்

கடந்த சில நாட்களாக தீவிர பிசினஸ் ப்ரொமோசனில் இருந்தேன். அதன் ஒரு பகுதியாக justdialல் நிறுவனம் பற்றிய தகவலை ஏற்றி வைத்தேன்.

தகவல் சரிபார்ப்பதற்காக கஸ்டமர் கேரில் இருந்து பேசினார்கள். என் தகவலை எல்லாம் சரிபார்த்துவிட்டு நைசாக, "சார் உங்களுக்கு செம்மயான ஒரு கேட்டகரில மொதல்ல வச்சி தர்றோம். வேற யாரும் அந்த இடத்துல விளம்பரம் வச்சிக்கறதுக்கு முன்னாடி நீங்க வச்சிக்கோங்க"

"இல்ல மேடம் இப்போதைக்கி ஐடியா இல்ல."

"இல்ல சார்.. உங்க நிறுவனத்துக்கு எங்க மூலமா நிறைய பிசினஸ் வரும். உங்களோட வளர்ச்சிக்காக தான் சொல்றேன்"

நான் எப்படி பேசினாலும் என்னை கார்னர் செய்து, "இல்ல சார். உங்க வளர்ச்சி, நிறுவன வளர்ச்சி" என மோடி மாதிரி ஒரே வார்த்தையே பேசிக்கொண்டிருந்தார்!

"சரி மேடம், நான் டிஸ்கஸ் பண்ணிட்டு திங்கள் கிழமை சொல்றேன்" என்றேன்.

"இல்ல சார் திங்கள் கிழமைக்குள்ள அந்த இடம் வேற யாருக்காவது போயிடும்"

"பரவாயில்லை.. மேடம்" என்று சொல்லி எப்படியோ கால் கட் செய்து பெருமூச்சு விட்டேன்.

திங்கள் கிழமை கால் செய்தார். எடுக்கவில்லை. வேறு எண்ணிலிருந்து கால் செய்தார். எடுத்தேன். வழக்கம் போலவே "சார் உங்க வளர்ச்சி சார்.. நிறுவன வளர்ச்சி சார்" என்றார்
காலில் விழாத குறையாக கெஞ்சி தப்பித்தேன்.

இன்று கால் செய்தார். போனை எடுத்தேன் பழைய படி "உங்க வளர்ச்சி" என்றார்..

"அட்சுவலா மார்க்ஸ் என்ன சொல்றாருங்கறத இங்க பொறுத்தி பார்க்க வேண்டி இருக்கு.. இன்னைக்கி முதலாளிகளெல்லாம் அசுர வேகத்துல வளர்ந்துகிட்டு இருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் முதல். முதல் என்ன பண்ணும்னா?..."

"சார் புரியல" என்றார்!

"சரி புரியற மாதிரியே சொல்றேன். நேற்றைக்கு கூட சல்மான்கான் இலங்கை போய் கொலைகாரன் ராஜபக்சேவுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணி இருக்கான். இதற்கு காரணம் யார்? இன்னொரு கொலைகாரன் மோடி" என்றேன்.

போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இனி எவனாவது வந்தீங்க? ஸ்டாலின்லாம் என்ன மாதிரியான தலைவர்!

நன்றி 2014

2014ல் காதலில் தோற்றேன். அவர் என்னை விட்டு சென்றுவிட்டார், facebookல் ப்ளாக் செய்துவிட்டார், மொபைல் எண்ணை மாற்றிவிட்டார். தொடர்பு முழுக்க துண்டிக்கப்பட்டது.
என்ன செய்வதென தெரியவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. ராத்திரி 2 மணி வரை அவளோடு தான் பேசிக்கொண்டிருந்தேன். அவள் போன பிறகு தூக்கம் வரவில்லை.போர் அடித்தது.

"ஜிம்முக்கு போனா தூக்கம் நல்லா வரும்" என்றார்கள். சென்றேன். தூக்கம் வந்தது.ஆறு கிலோ ஏத்தினேன். ஆனால் எதையோ இழந்த வெறுமை.

உட்கார்ந்து யோசித்து பார்த்ததில் நான் அவளை காதலித்தேன் என்பதை விட அவளுக்கு addict ஆகியிருந்தேன் என்பதே உண்மை. நாள் முழுவதும் அவளோடு பேசுவது, பின் பேசியதை நினைத்து சிலாகிப்பது. உண்மையில் அவளைத்தாண்டி என் சிந்தனையில் எதுவும் இல்லை. நம்மூரில் காதலிக்கிற எல்லோருமே இப்படி தானிருப்பதாக புரிந்துகொள்கிறேன். அதனால் தான் காதலில் தோற்ற உடனேயே எல்லாம் போயிருச்சு என துவண்டுவிடுகிறோம்.

அவள் போன பின் எனக்கு நிறைய நேரம் இருந்தது. ஹார்ட் டிஸ்கில் நிறைய படம் வைத்திருந்தேன். நாள் முழுவதும் அதை பார்த்தேன். இணையத்தில் தேடித்தேடி நிறைய குறும்படங்கள் பார்த்தேன். பேஸ்புக்கில் அவளோடு அதிக நேரம் செலவிட்டேன். அந்த பழக்கத்தால் facebook addict ஆகிவிட்டிருந்தேன். அவள் ப்ளாக் செய்திருந்தாலும் வேறு வேறு ஐடிகளில் சென்று லவ் டார்ச்சர் கொடுத்தேன்.

உண்மையில் நம்மை பிடிக்காதவர்களை நாம் என்ன செய்தும் திரும்ப பெற முடியாது என்பதை புரிந்துகொண்டேன். facebook addictionஐ கட்டுபடுத்த சில நாட்கள் பேஸ்புக்கை விட்டு விலகி இருந்தேன். அது நல்ல பலனளித்தது. அதே நேரம் வண்டலூரில் இருந்து உடனடியாக காலி செய்து சோழிங்கநல்லூருக்கு. இடமாற்றம் நல்ல மனமாற்றமளித்தது.

எனக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதில் நேரம் செலவிட முடிவெடுத்தேன். பல்வேறு இடங்களுக்கு சென்றேன்.நண்பர்களோடு அரட்டை அடித்தேன். எனக்கு பிடித்த விசயங்கள் பற்றி தகவல் சேகரித்தேன். பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று நானும் நண்பர் Bharathi Kannanனும் மக்களை சந்தித்தோம்.

மீத்தேன் ஆவணப்பட திரையிடல்,பாலஸ்தீன எதிர்ப்பு கூட்டம், கல்விக்கான போபால் பயணம், அதையொட்டிய சைக்கிள் பயணம் என பலவற்றில் பங்கெடுத்தேன். போபால் பயணம் என் மனதில் நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அரசியல் ரீதியான பார்வை மாறி இருக்கிறது.
போபால் பயணத்தை ஒட்டி நண்பர்களை அணுகி ப்ரொபைல் போட்டோ, கவர் போட்டோ மாற்ற சொல்லி கேட்டுக்கொண்டேன். நான் யோசித்துக்கூட பார்க்கவில்லை, பெரிய பெரிய பிரபலங்களெல்லாம் ஆதரித்தார்கள். யாருமே என்னை கலாய்க்கவில்லை. இதை என் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்பதாக தான் புரிந்துகொள்கிறேன்.ஏனென்றால் தினம் தினம் நம் chat பாக்ஸில் யார் யாரோ எதெதோ கேட்கிறார்கள். அதையெல்லாம் நாம் கண்டுகொள்கிறோமா என்ன?

இடையில் ஹாக்கிங் தொடர்பாக படிக்கத்துவங்கி இருந்தேன். வெற்றிகரமாக பக்கத்துவீட்டு wifiஐ ஹேக் செய்தேன். அடுத்து இணையதளங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு பற்றி ஆராய்ச்சி செய்தும் படித்தும் வருகிறேன்.அடுத்து என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்பது என் கண் முன்னே தெரிகிறது

உண்மையில் காதலைத்தவிர எவ்வளவோ இருக்கிறது என்று கற்றுகொடுத்த ஆண்டு 2014.
2015ல் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. Because journey is more imporant than destination என்ற புரிதல் வந்திருக்கிறது