Sunday, May 31, 2015

க.சீ.சிவகுமார் பற்றி

நேற்று வித்தியாசமான நாள். ஒரு இலக்கியக்கூட்டம்.. என்னை பேச அழைத்திருந்தார்கள்.. “க.சீ.சிவகுமார் படைப்புகள் ஒரு பார்வை” என்ற தலைப்பு.
ஆதிமங்கலத்து விஷேசங்கள் பற்றி நான் பேசியபோது
எனக்கு அவர் யாருண்ணே தெரியாதே.. என்ன பேசுவேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இணையத்தில் அவர் யாரென தேடிப்பார்த்த போது ஒரு முறை அவரை நீயா நானாவில் பார்த்ததாக நினைவு.. விகடனில் அவர் பெயரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்!
“ஆதிமங்கலத்து விஷேசங்கள்” என்ற அவரின் புத்தகம் பற்றி பேச சொல்லியிருந்தார்கள்..
அந்த புத்தகம் ஜூ.வியில் தொடராக வந்த ஒன்று. ஜாலியான புத்தகம். பஸ்,கார்,கரண்ட்,டார்ச் லைட், டிவி, சினிமா கொட்டாய் இதெல்லாம் இல்லாத ஊர்களில் இவை முதல் முதலில் நுழைந்த போது, ஊர்காரர்கள் அதை அணுகிய விதத்தை நகைச்சுவையாக பதிவு செய்திருந்தார்!
கவித்துவமான எழுத்து..இலக்கிய ஆசாமியாக இருப்பார் போல.. எதாவது பேசி தேத்திடுவோம் என்று தான் நிகழ்வுக்கு சென்றேன்! அவர் மொத்தமே 7 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அவற்றின் பிரதிகள் இப்போது எந்த அச்சிலேயும் இல்லை. எப்போதோ முதல் பதிப்பு கண்டவை. சமீபகாலமாக அவர் எழுதுவதே இல்லையாம். மன உளைச்சலுக்கு ஆளாகி நிறுத்திக்கொண்டாராம்.
க.சீ.சிவகுமார்
அவருடைய பல கதைகள் அரங்கில் பேசப்பட்டது. நல்ல நகைச்சுவை, கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அரங்கமே சிரித்துக்கொண்டிருந்தது! அவர் காலத்து எழுத்தாளர்களெல்லாம் சினிமாவில், சீரியலில் எழுதி காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். “நீங்க ஏன் எதுவுமே பண்ணல” என்ற கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் சுருக்குன்னு இருக்கு! என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாக சிரித்தார்!
அவர் அவரை பற்றி பேசியதை கூட சிரித்துக்கொண்டே, நைய்யாண்டியோடே பேசினார். அவரின் சிரிப்புக்குப்பின் ஒரு மெல்லிய சோகம் இருப்பதை பார்க்க முடிந்தது!
விழா முடிந்து தூரத்தில் நண்பர்களோடு டீ கடையில் தம்மடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்!
யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளன் என் மனதில் ரொம்பநாள் நிற்கப்போவதற்கான அறிகுறி தென்பட்டது!

2 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Unknown said...

மிகவும் அருமை sir