Tuesday, January 13, 2015

இது கூட தெரியாதா?

அவசரமாக என் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் OS போட வேண்டி இருந்தது, நண்பர் ஒருவரிடம் இருந்தது. ஹாக்கிங்க் பற்றியெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் OS போட தெரியாது.காரணம் என்கிட்ட ரொம்ப வருடமாக சிஸ்டம் இல்லை.ஒரு ஹார்டுவேர் இன்ஸ்ட்யூட் போனேன். அவங்க சொல்லி குடுத்தாங்க. அதெல்லாம் மறந்து போச்சு.

இன்ஸ்ட்யூட்களில் எதெதோ வித்தையெல்லாம் காட்டினார்கள். ஆனால் கையில் எதையுமே கொடுக்க மாட்டார்கள். இதுக்குன்னே ஒரு நாள் ஒதுக்கி ஒவ்வொருத்தரா OS இன்ஸ்டால் பண்ண வைக்க போறேன் என்றார். அந்த ஒரு நாளுக்குள் நான் அந்த இஸ்ட்யூட் போவதை நிறுத்திக்கொண்டேன். எனக்கு வேலை கிடைச்சிருச்சி.

கல்லூரியில் என் நண்பன் ஹார்டுவேர் எஞ்ஜினியர். ஒரு நாள் வா கத்துதறேன் என்றான். அந்த ஒரு நாள் அமையவே இல்லை. இப்படி பல ஒரு நாள் போயிடுச்சி. அதென்ன ஒரு நாள்?

“OS இன்ஸ்டால் பண்ண ஒரு நாள் முழுக்க ஆகும்” இது தான் எனக்கு எல்லோருமே சொன்னது. கேட்டா driver install பண்ணனும். அது வேணும் இது வேணும். சிஸ்டம் performance, ram speed என்று எதெதோ சொல்லி குழப்புவார்கள்.

நேற்று நண்பர் வீட்டுக்கு அதுக்காகவே காலை சீக்கிரமே கிளம்பிவிட்டேன். அவர் மதியம் 1 மணி வரை தான் இருப்பாராம். அதுக்குள்ள வேலையை முடிச்சிடணும் என திட்டமிட்டுக்கொண்டேன். அவர் வீட்டுக்கு சென்றேன். அவர் ஜூஸ் குடுத்தார், ஸ்னாக்ஸ் கொடுத்தார், “யோவ் நான் கேட்டத தவிர எல்லாம் குடுக்கறான் பாரு. மொதல்ல வந்த வேலைய பாப்போம்” என்று நினைத்துக்கொண்டேன்.

பெண்ட்ரைவ் சின்னது. அதில் குளறுபடி என்று நேரமாகிக்கொண்டே போனது. கடைசியில் 12.30 ஆகிவிட்டது. இன்னைக்கும் போச்சா என்று நினைத்துக்கொண்டேன். பெண்ட்ரைவை தூக்கி கம்ப்யூட்டரில் போட்டு ரெண்டு ஓகே பட்டனை அழுத்தினால் windows 7 பக்காவாக ஏறி என் கணினியில் உட்கார்ந்துகொண்டது.இருபது நிமிடத்திற்குள் வேலை முடிந்தது.

ஒரு நிமிடம் நான் ஸ்தம்பித்துவிட்டேன். “பூரா பயலும் ஒரு நாள் முழுக்க ஆகும்னு சொன்னாய்ங்க. இது என்னடா புதுசா இருக்கு” என்று.

windows xp தான் ஒரு நாள் முழுக்க எடுத்துக்கொள்ளுமாம்.windows 7 அவ்ளோ நேரம் எடுத்துக்காதாம். அதுவும் சிடி போட்டால் எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட usb installation ரொம்ப ஸ்பீடாக இருக்குமாம்.

bca முடித்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது எனக்கு இதை தெரிந்துகொள்ள. இதுதானாய்யா உங்க டக்கு என்று வியந்துகொண்டேன். பெரும்பாலும் கற்றுக்கொடுப்பவர்களிடம் இருக்கிற பிரச்சினையே அவர்கள் எல்லாத்தையும் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

“இதுல கைய வைக்காத வெடிச்சிடும். அதுல கை வைக்காத பொகஞ்சிடும். அத தொட்டன்னா அவ்வளவு தான். சென்னையை சுத்தி 48 கிலோ மீட்டர் கொளோஸ்” என்று எதாவது பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் கற்பது என்பது trial and error சார்ந்தது.

நாமாக எதையாவது கற்பதென்பது ரிஸ்க் தான். ஆனால் அது கொடுக்கிற அனுபவம் அலாதியானது.

No comments: