Saturday, April 28, 2012

மீட்டிங் என்கிற முரட்டு காமெடி

நான் கார்பரேட் நிறுவனம் வந்து சுமார் ஓராண்டு முடிந்தாகி விட்டது.அவ்வப்போது மீட்டிங் நடத்துவது எல்லா இடங்களிலும் வழக்கம் தான்.மீட்டிங்உடனான என்னுடைய அனுபங்கள் படு காமெடியாவை.

நான் எழாம் வகுப்பில் வகுப்பு தலைவனாக இருந்ததில் இருந்து இன்று வரை பல வகையான மீட்டிங்களை பார்த்திருக்கிறேன்.

பொதுவாக மீட்டிங் என்பவை கட்சி பொதுக்குழுவை போன்றது தான்.தலைவர்(?) மட்டுமே பேசுவார் அல்லது பெரிய ஆசாமிகள் பேசுவார்கள்.மற்றவர்கள் அதை “ஆ” என்று வாயை பிளந்து வைத்துக்கொண்டு கேட்டே ஆக வேண்டும்.



பெரும்பாலும் மீட்டிங்கை ஏற்பாடு செய்யும் பெரும் புள்ளி(?), நடந்த தவறுகளுக்கு நான் காரணமில்லை என்பதை போல, மற்றவர்கள் மீது பழி சுமத்தி மற்றவரை பலிகெடாவாக்குவார்.

மற்றவர்களுக்கும் ஆமாம் சாமியாக, அவரை எதிர்த்து பேச திராணி அற்றவர்களாக அமைதியாக கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.இதை பார்த்த மீட்டிங் நடத்தும் பெரும்புள்ளி, நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார்.அவர்களும் அதை கேட்டு கொள்வார்கள்.எவனாவது மாற்று கருத்தை முன் வைத்தால் அவன் தொலைந்தான்.

நமக்கு எதிரி இவன் தான்..என அந்த மீட்டிங் நடத்தும் பெரும் புள்ளி அவனை மைண்டில் குறித்துவைத்துகொள்வார், சரியான நேரம்போது வரும் அதற்கான தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதே அதன் அர்த்தம்.
பள்ளி மீட்டிங்குகள் படு காமெடியானவை.

குறிப்பாக ஒரு உதாரணம்..

“உங்கள் வகுப்பாசிரியர் மீது ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள்” என்பார் தலைமை ஆசிரியர், அதுவும் வகுப்பாசிரியரின் பாட வேளையின் போது.

வகுப்பாசிரியர் நம்ம எதிரிலேயே இருப்பார்.”எனக்கு முன்னாடி எவனாவது எழுந்திரிப்பான்” என்ற பெருமிதம்(?!) அவர் கண்களில் தெரியும்.எவனுமே எழுந்திருக்க மாட்டன்.

“அப்புறம் தனியாக்கூட வந்து சொல்லலாம் தப்பில்லை” என்பார் தலைமை ஆசிரியர்.”அடிச்சி கூட கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாத” ரகம் இது.
அவரை நம்பி தனியாக சென்று மேட்டரை கக்குகிறவன், பிறகு வகுப்பாசிரியரின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தபடுவான்.
குறிப்பாக விடுதிகளில் நடக்கும் மீட்டிங்கள், விடுதிக்குறைபாடு தொடர்பானவை.அதில் சாப்பாடு முக்கியப்பங்கு வகிக்கும்.சாப்பாட்டில் உப்பில்லை, காரம் குறைவு, புதுசா இந்த டிஷ் போடுங்க, கறி குறைவா போடறாங்க.சாதம் வேகவே இல்லை,ரசத்துல ஈ இருந்துச்சி, மோர்ல பெருச்சாளி மெதந்துச்சி என்ற குறைபாடுகள் பெரும்பாலும் முன் வைக்கப்படும்.

அந்த மீட்டிங்கை நடத்தும் ஆசாமி, கலைஞர் பொதுக்குழுவில் கட்டும் அதே சப்பை கட்டை நம்மிடமும் கட்டுவார்.

“ஹாஸ்டல் என்பது இரண்டாவது வீடு.(இருக்குமோ??)இங்கே சமைக்கிரவர்கள் உங்கள் அம்மாவை போன்றவர்கள்.வீட்டு சாப்பாட்டில் குறைபாடு என்றால் பொறுத்துகொள்வதை போல இங்கேயும் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என ப்ளேடு போடுவார்.

அவர் அந்த மீடிங் நடத்துவதன் பின்னணியில், நமக்கு எதோ ஒரு ஆப்பு இருப்பது புலனாகும்.குறிப்பாக அது நம்முடைய சுதந்திரத்திற்கு வெடி வைப்பதாகவோ.நம் உரிமைகளை பரிப்பதாகவோ இருக்க கூடும்.சில சமயம் அண்டபுளுகு ஆகாசபுளுகுகளை கூட அள்ளி விடுவார்.

வகுப்பறைகளில் வகுப்பாசிரியரால் நடத்தப்படும் மீட்டிங்கள் நம் ப்ராக்டிகல் மார்கோடு தொடர்புடையவை.நிறுவனங்களில் நடத்தப்படும் மீட்டிங்குகள் நம்முடைய ரேட்டிங்கையும் சம்பளத்தையும் பதம் பார்ப்பவை.
அதனால் எதற்கு வம்பு, வாயை கொடுத்து மாட்டிக்குவானேன், என்று எண்ணுபவர்கள் மொவுனமாக இருப்பார்கள்.

ஆனால் என்னை பொறுத்த வரை மீட்டிங் என்பது ஆர்குமென்ட்(Argument) என்ற தளத்தில் இருந்து discussion என்ற தளத்திற்கு பயணப்பட வேண்டும்.காரணம் ஆர்குமென்ட், நீ யோக்கியமா நான் யோக்கியமா வகையை சேர்ந்தவை.இதன் நோக்கம் எவன் மீதாவது குற்றம் சாட்டி, அவன் தலையில் மொளகாய் அரைத்து தான் தப்பித்து கொள்ளும் அயோக்கிய மனப்பான்மையின் வகையினது.

ஆனால் டிஸ்கசன் என்பது ஆரோக்கியமாது.ஒரு முடிவை எட்டக்கூடியது.யார் தவறு என்று பொத்தாம் பொதுவாக சொல்லாமல் எங்கு தவறு என்று தெளிவாய் காட்டுவது.

ஆர்குமெண்டை டிஸ்கஸ்சன் ஆக்குவதில் இருவருக்குமே பங்கு உள்ளது.இதுவே உட்கட்சி ஜனநாயகம் ஆகும்.

குறிப்பு : இந்த கட்டுரை யாரையும் புண் படுத்தும் நோக்கத்தோடோ, என் சொந்த செலவில் எனக்கு நானே வைத்துக்கொள்ளும் வெடியோ அல்ல..பொதுவாச் சொன்னேன்