Thursday, July 28, 2011

சந்திர மண்டலத்தில் சரவணகுமார்

எனக்கு மூணாப்பு படிக்கும் போதுலேர்ந்தே சந்திரமண்டலம் மேல் அளவு கடந்த ஆர்வம்..ஏன்..வெறி..பாட்டி சுட்ட கதை கேட்ட போதிலிருந்தே என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் அங்கே நாய் இருக்குமே..அது என்னை துரத்துமே..அதை பற்றி எந்த கவலையும் இல்லை.என்னிடம் பிஸ்டல் இருக்கு..
இந்தியன் ஒருவன் சந்திரமண்டலம் செல்வது இது தான் முதல் முறை.அதுவும் அயோக்கியபுரத்தை சேர்ந்தவன் செல்வது வரலாற்றிலேயே முதல் முறை என இந்திய மீடியாக்கள் கொக்கரித்தன.

போதாததுக்கு எங்க அம்மா வேற.பக்கத்து வீட்டு பத்மாவிடம் பலதும் சொல்லி இருந்தார்.அவர் என்கிட்டே என்னனவோ கேட்டார்.. “எய்யா உனக்கு சம்பளம் எவ்வளவு குடுப்பாங்க? உனக்கு எல்லாமே பிரியாமே..அப்படியா? அப்ப வாங்கற சம்பளத்த எல்லாம் பாங்க்ல போட்டுட்டு நிம்மதியா இருப்ப தானே..சொர்க்க வாழ்க்கையா உனக்கு” என்றார்..

நாளை காலை நாசாவில் வண்டி ஏறணும்.. வேற என்ன ராகேட் தான்..எனக்கு எங்க அப்பா சைக்கிள் கூட வாங்கி தந்தது இல்ல..நான் சொந்தமாக சைக்கிள் கூட வைத்திருக்க வில்லை.ஆனால் இன்று ராக்கெட்டில் செல்ல போகிறேன் என்றால் அது சாதாரண சாதனை இல்லை..என எதோ ஒரு நாளிதழில் படித்ததாக நினைவு..

இந்த செய்தி எனக்கே இப்பொழுது தான் தெரியும்..இந்த பேப்பர் காரங்களே இப்படி தான்..அள்ளி விடுவானுங்க..
இதை படித்த எங்க அப்பாவே என்கிட்டே வந்து கேட்டார்..”எண்டா நம்ம தெருவுலே முதல் முதல்ல சைக்கிள் வாங்குனது நீ தான்டா.வாங்கி தந்தது யார் தெரியுமா?  சாட்சாத் நானே தான்..மூனுக்கு போற திமுருல ஆடாத டா”.என்று கடுப்பேத்தினார்..

நான் அவர் பேச்ச என்னிக்குமே கேட்டது இல்ல.அவர் பேச்ச கேட்டுருந்தேன்னா இந்நேரம் நம்ம  ஊர் ரயில்வேல எனக்கு கணக்கு எழுதற வேல கிடைச்சிருக்கும்.
அய்யயோ போன் அடிச்சத கவனிக்கவே இல்லையே. அச்சச்சோ எட்டு மிச்சுடு கால். வேற யாரா இருக்கும்.சமந்தா தான்..

சமந்தா ரொம்ப சமத்து.எனக்கு ஏழாவது படிக்கும் போதுலேர்ந்து அவள தெரியும்.அப்பலாம் அவ அவ்வளவு அழகு இல்ல.நாங்க ரெண்டு பெரும் காலேஜ் ஜாயின் பண்ணும் போது அவ செகப்பு கலர் சூடில இருந்த அழகு.அவ கல்யாணத்தன்னிக்கி கூட இல்லன்னா பாத்துக்கோங்க.
எஸ்..அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சி.ஏன் குழந்த கூட இருக்கு.இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. அதெல்லாம் வேற கதை.(அதை இங்கே பிரசுரிக்க இயலாது.ஏனெனில் அன்று பார்க்கில் நடந்த பலதும் இங்கே பகிர வேண்டி வரும்.வேணாமே ப்ளீஸ்..)

இன்னும் சிலமணி நேரங்களில் flight புறப்பட போகிறது.என் மொபைலை ஆப் பண்ணினேன்.இனி இந்தியாவுக்கு எப்போது வருவேன் என தெரியாது. ஏன் வராமலே கூட போகலாம்.

எனக்கு ஏனோ அழுகையா வந்துது. நான் முதல் முதல்ல ஸ்கூல்க்கு போகும் போது கூட இவ்வளவு அழுதது இல்ல.”சார் வாட் ஹப்ப்ஸ்…ஹவ் யு  எனி ப்ரோப்லேம்.” என்றார் ஏர் ஹோஸ்டஸ்.. பரவால்ல உண்மைலேயே அவங்க அழகு தான்.
கட்டுனா இது மாறி புள்ளயா கட்டனும்..சீ.. என்னனமோ தோணுது.
நான் போய் workout  பண்ணனும்.பாடி செக் பண்ணனும்.
நரையா பேர் வாழ்த்துக்கள் சொன்னார்கள்.சந்தோசமா தான் இருக்கு.நான் இப்படி வருவேன்னு நினைக்க கூட இல்ல. நான் சமந்தாவ பிரிஞ்சதும் எவ்வளவோ நடந்துடுச்சி.
ச்சி அத சொல்ல மாட்டேன். யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு நான் அவளுக்கு சத்தியம்  பண்ணிருக்கேன்.

flight தரை இறங்கி விட்டது.இன்னும் சில மணி நேரங்களில் ராக்கெட்டில் போக போகிறேன்.அதுக்குள்ள trainer கூப்டு மொக்க போடுவாரு..அவருக்கு தான்  நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என்னை தேர்ந்தெடுத்ததற்காக..
சரி நான் உடை மாற்ற புறப்படுகிறேன்..உடை மாற்றும் அறையில் இருக்கும் ஒவ்வொருத்தவனும் ஒவ்வொரு மூட்ல இருப்பானுங்க..அவனுங்க குடுக்கற சேட்ட தாங்க முடியாது..

அமெரிக்க அதிபர் எங்களிடம் பேச வேண்டுமாம்..என்ன பேசிவிட போகிறார்.”இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது.அமெரிக்கனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்”..அவர் வாயை திறந்தாலே அமெரிக்க புகழ் தான் பாடுவார்.

இன்னும் சில நிமிடங்களில் ராக்கெட் புறப்பட போகிறது. நான் மேலே போக போகிறேன்.”வழியில் தேவர்கள், பிரம்மா விஷ்ணு எல்லாம் இருப்பாங்க..கன்னத்துல போட்டுக்கோடா.ஜென்ம சாபல்யம் அடைஞ்சுடலாம்.”..பல்லு போன என் பாட்டியின் பரிந்துரை தான் இது.. இவனுங்க எப்ப தான் திருந்தா போறானுங்களோ!!..

ராக்கெட் புறப்பட்டு விட்டது..கண் மூடி திறப்பதற்குள் பூமியை விட்டு பல மையில் தொலைவு கடந்து விட்டது. மிக நீண்ட உயரத்தை நான் அடைந்து விட்டேன். ஐ மீன் ராகேட் ரொம்ப தூரம் மேல வந்துடுச்சி..

உடம்பெல்லாம் ஒரே அசதி..ஆனாலும் தூங்க போவது இல்லை..வெளியில் வேடிக்கை பார்க்க வேண்டும்..சீன பெருஞ்சுவர் தெரியுமாம். இந்தியா தெரியும்..அதுல இமய மலை தெரியும்..அதன்மேல் தாடி வைத்த சாமியார் தெரியுவார்
என்றெல்லாம் அள்ளி விட்டானுங்க..ஒன்னும் தெரியல..ஒரு மண்ணும்..
எனக்கு ஒரு தம் பத்த வைக்கலாம் போல இருக்கு.ஆனா கிடைக்காதே..பசித்தாலும் சாப்பிட எதுவும் கிடைக்காது.ஒரு மாத்திரை தான்..
“உடம்பு வீனா போய்ட போகுது பா..”அம்மா சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது..எப்பொழுது தூங்கினேன் என எனக்கே தெரிய வில்லை..

நின்னுக்கிட்டே தான் தூங்கினேன்.சொல்ல போனால் பறந்துகிட்டே தூங்குனேன்.சூப்பர்மென்  மாதிரி.
சந்திரனை அடைந்து விட்டிருந்தோம்..
 
(சில நாட்கள் கழித்து)





நான் சந்திரன் வந்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது. எனக்கு சந்திரன் பிடிக்க வில்லை..இங்கே தண்ணீர் இருந்தாலும் மனிதன் வாழ முடியாது. ஏனெனில் ஒரு டீகடை கூட இல்லை.ஒரு பஜ்ஜி போண்டாவுக்கு கூட வழி இல்லை.

டீக்கடையும்,பஜ்ஜி போண்டாவும் இல்லாத இடத்தில் சைட் மட்டும் அடிக்கவா முடியும்..
இங்கே ஒரு வேளை தண்ணீர் இருந்தாலும் அதை மனிதன் வேறு யாருக்கும் தர மாட்டான் .. கர்நாடகா  மாதிரி பிரச்சன பண்ணுவான்.


ஒருவேளை சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த சந்திரனுமே அமெரிக்காவுக்கு தான் சொந்தம் என அமெரிக்கன் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுவான். பத்தாதுக்கு சீனா காரனும் போட்டிக்கு வந்துவிடுவான்.
“நான் இருபது வருடம் முன்பே கூறினேன் சந்திரனில் தண்ணி இருக்கு,,மனுஷன் வாழலாம் னு” என்று நம்ம ஊர்ல ஏதாவது ஜோசியக்காரன் மீடியா கவனம் ஈர்க்க புளுகுவான்..
சொல்ல போனால் சந்திரன் வந்தது வேஸ்ட்..இதனால் யாருக்கும் நயாபைசா புரியோஜனம் இல்ல..இன்னமும் இரவு உணவு உண்ணாமல் உலகம் முழுவதும் எத்தனையோ சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த பணத்தை செலவிட எந்த அமெரிக்கனுக்கும் மனம் வராது.

Sunday, July 17, 2011

நான் அமெரிக்க ஜனாதிபதி ஆக போகிறேன்..

சென்ற வாரம் செய்தி சேகரித்து வீடு வரும் வழியில் வித்தியாசமான அனுபவம் நேர்ந்தது.

நான் சென்னைக்கி வேலை தேடி வந்த போதே எங்க அப்பா சொன்னார்..நம்ம ஊர் மாறி இல்லடா சென்னை.."ஒரு நாயும் உன்ன கவனிக்காது.நீ என்ன பண்ணாலும் கேக்க நாதி இருக்காது.உனக்கொரு பிரச்சனனா ஒரு பய வர மாட்டானுங்க" என்றெல்லாம் சென்னை பற்றிய அருமை பெருமைகளை அள்ளி வீசினார்.

அவர் பேச்சை கேக்காதது என் தவறு தான்.நான் செய்தி சேகரித்து விட்டு வீடு வர கிட்ட தட்ட பதினோரு மணி இருக்கும்.நான் லோக்கல் சேனல்ல வேலை பார்த்த அப்பலாம் கூட மிக சாதரணமாக ராத்திரி பனிரெண்டு மணிக்கு பஸ் பிடித்து வீடு வந்திருக்கிறேன்.

சென்னைல பஸ் கிடையாதாம்.அதனால் ஆட்டோ பிடித்து வந்தேன்.ஆட்டோவும் உங்க தெரு வரைக்கும்லாம் போக மாட்டோம் இங்கயே இறங்கிக்கோங்கனு பாதி வழில இறக்கி விட்டுட்டான்.

"ஒரு நாள் நடுத்தெருவுல நிப்ப அன்னிக்கி உனக்கு தெரியும் இந்த அப்பாவோட அருமை பெருமை எல்லாம்.அன்னிக்கே அப்பா பேச்ச கேட்டுருந்தா இந்த மாதிரிலாம் நடந்துருக்காதுல்ல" என்று எப்பொழுதோ என் அப்பா என்னை திட்டியது நினைவுக்கு வந்து வெறுப்பேற்றியது.

ஆட்டோ காரனை திட்டியவாரே நடைய கட்டினேன்.வேற வழி!! நான் வரும் வழியில் தான் போலீசின் செக் போஸ்ட் இருக்கிறது.ஆகா போலீஸ்! மாட்னோமா?

சந்தேக கேஸ்ல புடிச்சிட்டு போய் உள்ள உக்கார வச்சி ஜட்டியோட கும்மி புடுவாங்களோ!! என்கிற பயம் அடி வயிற்றில் ஏற்பட்டாலும்."பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?" என்று மனதுக்குள் கூறியவாறே.போலீசிடம் என்ன சொல்லலாம் என்று எண்ணியவாறே போலீசை நெருங்கினேன்.

"சார் நான் ரிப்போர்ட்டர்.சென்னைல ராத்திரி நேரத்துல என்னலாம் நடக்குதுங்கறது பத்தி ஒரு கட்டுரை எழுதலாம்னு பிளான் அதான்!!" என்று சொல்லலாமா?

அல்லது உண்மையை சொல்லி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகி விடலாமா என்றெல்லாம் யோசித்தேன்.

நல்ல வேலை போலீஸ் என்னை கண்டுக்கவே இல்லை.நானும் அவங்கள பாக்காத மாதிரியே நடித்து அப்பீட் ஆனேன்.

"இனி இப்படி எதுவும் நடக்காம பாத்துக்கணும்.இல்லனா கொலை கேஸ் ஆகிருக்குமா இல்லையா? ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கற" என்று  என் மனம் என்னை கேள்வி கேட்டது..

"இப்படிலாம் இல்லனா நாளைக்கி எப்படி துப்பறியும் தொடர்கள் லாம் எழுதரதாம்?பத்திரிக்கையாளன்னா பயமே இருக்க கூடாது.அதுவும் தன்னம்பிக்கை பத்திரிக்கையாளர் ஆகரதுன்னா சும்மாவா? நாங்களும் கோ படம் ஜீவா மாறி ஆவோம்ல!" என்று மனதுக்கு பதில் கூறியவாறே வந்தேன்.
தூரத்தில் இருந்து ஒரு நாய் என்னை நோக்கியே குரைத்த வாறு ஓடி வந்தது.நாங்க போலீஸ்க்கே டிமிக்கி குடுத்தவைங்க. யாரு கிட்ட? ஓடலாமா என்று ஒரு கணம் எண்ணினேன்.

"நாய பாத்து நாம ஓடற வரைக்கும் தான் அது நம்மள துரத்தும்.அதே நாய திரும்பி ஒரு பார்வை பாத்த..அந்த நாய்க்கு பயம் வந்து ஓடும்" என ரன் படத்துல ரகுவரன் பேசிய வசனம் நினைவுக்கு வந்தது.
திரும்பி ஒரு பார்வை பார்த்தேன்..... பாக்கணுமே!
பாவிங்களா..எங்க இருந்தோ வந்த இரண்டு நாய்கள் இந்த நாயோடு சேர்ந்து கொண்டு என்னை பார்த்து திரும்பவும் குரைக்க ஆரம்பித்தது.    
என்னுடைய எல்லா அஸ்திரங்களும் வீணாயின.கடைசி அஸ்திரமாக என் செல் போனை எடுத்தேன். காதில் வைத்தேன்.

"சொல்லு மாப்ள! ஏண்டா காலேஜ் போய்ட்டன்னா  போனே பண்ண மாட்டாயா? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ? இரு உன் ஆள நான் கரெக்ட் பண்ணிடறேன்.அப்பவாவது உனக்கு புத்தி வருதா பாப்போம்."
"இல்லடா மெசேஜ் கார்டு போடல டா...அதான்."

என்று கைவசம் இருந்த அத்தனை வசனங்களையும் போனில் பேசியவாறு அந்த நாய்களை கண்டு கொள்ளாதது போலவே மிக சாதாரணமாக நடந்தேன்.நாய்களும் நம்பி விட்டன.

என்னுடைய நடிப்பு திறமையை  முழுவதுமாக அன்று தான் உணர்ந்தேன்.
"தமிழ் திரையுலகில் சிவாஜிக்கான இடம் காலியாகவே இருக்கிறது" என்று எப்பொழுதோ யாரோ சொன்னதாக நினைவு.

அந்த இடத்தை நான் நிரப்ப போகிறேன்.இன்னும் பத்து வருடங்கள் நடித்துவிட்டு அதற்குள் ரசிகர் மன்றத்தை டெவலப் பண்ணனும்.அப்ப தான் அடுத்த இருபது வருடத்துக்குள் ஆச்சிய பிடிக்க முடியும். ச்சி.. ஆட்சியை பிடிக்க முடியும்.

நான் அமெரிக்க அதிபர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஒரு கருப்பன் அமெரிக்க அதிபர் ஆகும் போது நிச்சயமாக ஒரு தமிழன் ஆக முடியும்.

Saturday, July 9, 2011

என் ஹாஸ்டல் வாழ்க்கை - 2

நான் திருப்பராய்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் சேர்ந்த கதை ரொம்ப சுவாரஸ்யமானது.முதலில் அந்த ஹாஸ்டல் பற்றி அறிந்து கொண்டால் தான் உங்களுக்கு திஹார் ஜெயிலின் உண்மை முகம் தெரியும்.நான் செத்து போன எங்க பாட்டி மீது ஆணையாக கூறுகிறேன் எந்த பயலையும் போட்டு தள்ளல..


அது ஒரு விசித்திரமான பள்ளி.தமிழகத்திலேயே ஞாயிற்று கிழமை பள்ளி நடத்தும் ஒரே பள்ளி அது தான்.(விசித்திரம் புரிந்துருக்குமே!!)

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகில் இருக்கிறது அந்த ஜெயில் சாரி ஸ்கூல்..காவிரி ஆற்றங்கரை ஓரமாக அமைந்து இருக்கிற வித்யாவன தாய்(அப்டி தான் ஒவ்வொரு ஆண்டுவிழா அன்றும் சொல்வார்கள்)..
காலைல நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுவாங்க..

உடனே போய் பல்லு வழக்கணும்..பேஸ்ட் பிரஷ்லாம் வச்சிக்க கூடாதுனு ஒரு கண்டிஷன் வேற.ஆனா பல் பொடி வச்சிக்கலாம்..பல்லு துலக்கி முடிச்ச கையோட ஸ்டடி வச்சிடுவானுங்க..படிக்கனுமாம்..எல்லா பயலும் தூங்குவானுங்க..

தூங்குனா மிதி உண்டு.டம் டிம் என்று சத்தத்தில் முழிச்சி பாத்தா அடி நமக்கு தான் விழுந்திருக்கும்..இங்கே முக்கியமான கண்டிஷன் யாரும் கையில் பணம் வச்சிக்க கூடாது.பேஸ்ட் பிரஷ் அறவே கூடாது.போட்டுக்க கலர் டிரஸ் வச்சிக்க கூடாது..முக்கியமானது   எல்லோருமே விடுதியில் தான் தங்க வேண்டும்..

போனா போகுதுன்னு மூணு மாசத்துக்கு ஒரு தடவ தீபாவளி பொங்கலுக்கு லீவ் உடுவாங்க.அவ்ளோ தான்.எதாவது தப்பு பண்ணி மாட்டுனா அதுவும் கிடையாது..ஆனா சாப்பாடு விசயத்துல ஒரு பய அடிச்சிக்க முடியாது..
கை குத்தல் அரிசி.தான்..களி மாறியே இருக்கும்..ஒரு உதாரணம்..

ஒரு தடவ பையன பாக்க வந்த அப்பா மத்தியானம் சாப்பாடு சாப்பட வந்துருகாரு..அவருக்கு சாதம் பரிமாரிட்டு சாம்பார் எடுத்துவர உள்ளே போனவங்க வந்து பாத்த அப்ப ஒரே ஆச்சர்யம்.அவர் இலை காலியாக இருந்தது..கேட்டா "பொங்கல் அருமையா இருந்துது பா" என்கிறார்..(அட எரும!!அது சாதம் யா..நல்லா கெலப்பராய்ங்க பீதிய!!)

வாரம் ஆனா சனிக்கிழமை விடுமுறை.சண்டே பள்ளி உண்டே!!ஆங்கிலேய எதிர்ப்பை இப்படி வெளிப்படுத்தராய்ங்கலாம்..முக்கியமான ஒன்று பசங்க தான் கூட்டணும் பெருக்கணும் எல்லாம்..

எந்த திகார் ஜெயிலிலும் இல்லாத வாழ்க்கை..நமக்கு நாமே திட்டம்..பேன் கிடையாது.டிவி கிடையாது.ஏன் மூஞ்சிக்கி பவுடர் கூட போட கூடாது.இப்படிப்பட்ட ஒரு வாழ்கையை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியுமா உங்களால்?

அம்மா அப்பா வருஷத்துக்கு  இரண்டே முறை தான் வந்து பசங்கள பார்க்க முடியும்..சாமியார்களால் நடத்தப்படும் பள்ளி..அம்மா அப்பா வந்து பார்த்தால் பசங்களுக்கு பாசம் வந்து..அம்மா நியாபகம் வந்து அழுவார்கள்..அது கூடாது என்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடு..

இங்கு தான் ஒரு சிங்கம் சிக்கியது..வேற யாரு நான்தே! ஆத்தி..இங்க அடிக்கறது எப்படி னு சொல்லலையே நாலு பேரு தெனற தெனற அடிப்பாய்ங்க..சத்தமே வர கூடாது வந்தா அதுக்கு தனி கவனிப்புகள்..
என்ன மாரி பல பச்சை பிள்ளைகளை இல்லாததும் பொல்லாததும் சொல்லி..சனியன் ஒளிஞ்சா சரி னு.."திருவிழா கடைல புள்ளய தொலைக்கற மாறி" கொண்டாந்து சேத்து விட்டுட்டு அம்மா அப்பா அவர்கள் பாட்டுக்கு போய்டுவாங்க..

இங்கே சேருவது கூட அவ்வளவு லேசுபட்ட காரியம்  அல்ல..என்ட்ரன்ஸ் எழுதணும் பாஸ்.இங்கே சேரவும் முட்டி மோதும் கூட்டங்களை பார்க்க வேண்டுமா?நான் காட்டறேன்..

நான் நுழைவு தேர்வு எழுதும் முன்பே எங்க அப்பா  ஒன்றை  சொல்லி என்னை  தயார் படுத்தி இருந்தார்..அவை பின் வருமாறு

"நம்ம ஊர்ல நல்ல ஸ்கூலலே இல்ல..ஹை ஸ்கூல் ல சேரர பயலாம் ஸ்கூல்லேயே உக்காந்து சிகரெட் குடிப்பனுங்க..தண்ணி அடிப்பானுங்க.கெட்ட வார்த்த பேசுவானுங்க..இந்த நுழைவு தேர்வுல நுழையலனா நீ டீ ஆத்த தான் போகணும்.எனக்கு தெரிஞ்ச டீ கடைல சேத்து விட்டுடுவேன்.."
(அடப்பாவிங்களா..யார் வம்பு தும்புகாச்சும் போயிருப்பேன்!)

இங்கே நடக்கும் நுழைவு தேர்வு எந்த பத்திரிக்கையிலும் வந்திருக்காது..இந்த பள்ளி பற்றி எந்த  செய்தித்தாளிலும் நீங்கள் படித்திருக்க முடியாது..இவர்களுக்கு விளம்பரம் பிடிக்காது..

காரணம்  -- எந்த மலரும் விளம்பரம் செய்வதில்லை..வண்டுகள் தான் நாடி வர வேண்டும்..என்பதாம்

வேறு எங்கும் இல்லாத விசேசம் இங்கு இருக்கிறது..இங்கு சேரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பெரிய பெரிய பணக்காரர்களின் பிள்ளைகள்..

இவர்கள் இங்கு சேர முட்டி மோத காரணம் நிச்சயம் இருக்கிறது..
                                                                                             
-----------அவை அடுத்த பதிவில்.. 

Thursday, July 7, 2011

என் ஹாஸ்டல் வாழ்க்கை

காலை அதிஷாவின் பதிவு ஒன்றை படித்தேன்..அதிலிருந்து எனக்கு என் பழைய ஹாஸ்டல் பற்றிய எண்ணமே மனதில் ஓடியது.. இனி தொடர்ந்து ஒரு என் ஹாஸ்டல் சுவாரஸ்யங்களை பற்றி எழுதலாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன்..

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து நான் ஹாஸ்டல்ல தான் இருந்தேன்..அதாவது அஞ்சாவது படிக்கும் போதே அடிச்சி சேத்து விட்டுட்டாங்க..ஹாஸ்டல்க்கு வந்து சேருகிறவர்களுக்கு பின்னால் உள்ள கதை மிகுந்த சுவாரசியமானது..

வீட்ல அடங்காதவன்,சொல் பேச்சு கேக்காத பயல்,உள்ளூரில் சிறந்த கல்வி வாய்க்கப்பெறாதவர்கள்..எல்லோரும் வந்து கூடும் இடம் தான் ஹாஸ்டல்..ஹாஸ்டல் வாழ்க்கையை பற்றி ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு எனக்கு அனுபவம் உண்டு..பத்து வருடங்களுக்கும் மேலாக விடுதியில் தங்கி வளர்ந்தவன் நான்..

என்னை கேட்டால் வீட்ல இருக்கறத விட விடுதி தரும் அனுபவங்கள் சுவையானவை..ஆனால் கெட்டு போவதற்கான வாய்ப்புகள் வீடுகளை  விட விடுதிகளிலேயே அதிகம்.. ஆனாலும்  சுஜாதாவிலிருந்து அப்துல்கலாம்கள் வரை பலரை பெற்றெடுத்த பெருமை விடுதிகளை மட்டுமே சேரும்..
காரணம் இருக்கிறது..வீடுகளில் இருப்பது போல டிவி,ரேடியோ போன்ற பொழுது போக்கு சாதனம் எல்லாம் இங்கு கிடையாது.இங்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு.."புத்தகம்"..வேறு வழியே இல்லை..

சண்டே ஆனால் வாரமலருக்காக நாங்கள் தவம் இருப்போம்..குமுதமும் ஆனந்த விகடனும் தான் எங்களுக்கு குதுகலம் அளிக்கும்..
விடுதியில் இருக்கிறவன் வாழ்க்கை மெஸ்சை சுத்தியே சுழலும்.சப்பாத்திகளுக்காக சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்டது..முட்டைகளுக்காக முட்டி மோதியது..என அத்தனையும் அவ்வளவு சுவாரஸ்யமானவை.. 

நான் ஹொஸ்டல் இல் சேர்ந்த கதை ரொம்ப சுவாரஸ்யமானது..வீட்டுக்கு அடங்காத பிள்ளை நான்...

அப்ப நான் நாலாவது படிச்சிகிட்டு இருந்தேன்.ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து.. வீட்டு வாசல்ல இருந்தே வீட்டுக்குள்ள பைய்ய விசிரி எரிஞ்சிட்டு போனேன்ன்னா.. வீடு வர  ராத்திரி எட்டு ஒம்போது மணி ஆகும்..  அதுவரைக்கும் ஊரை சுற்றுவது மட்டுமே என் பொழுது போக்கு..
வெளியூர்லேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து எங்க தாத்தா(அம்மாவோட அப்பா) கொஞ்சநாள் எங்க வீட்ல தங்கி இருந்த காலம் அது..

அவருக்கு எட்டு மணிக்கு நியூஸ் பாக்கணும்..எனக்கு வேற சேனல் பாக்கணும்..எங்களுக்குள்ள சண்டை வந்து ரத்த ஆறே ஓடும்.."உனக்கு நியூஸ் பாக்கணும்னா உங்க வீட்ல போய் பாரு..இது எங்க வீடு" - - இது நான்..வாய் ரொம்ப ஜாஸ்தி..

"இவன திருப்பராய்துறைல கொண்டு போய் சேத்தா தான் இவனுக்கு புத்தி வரும்" -- இது அவர்..

திருப்பராய்துறையா? அது எங்க இருக்கு..அங்க என்ன பண்ணுவாங்க நம்மள..அடிப்பாய்ங்களோ!!அடிச்சா சும்மா விட்ட்ருவோமா..என்றவாரெல்லாம் என் மனதில் எண்ண ஓட்டம்..
அவர்கிட்ட திருப்பராய்த்துறை பத்தி கேட்டேன்.."அங்க போனா நல்லா பாடம் சொல்லி தருவாங்க..டெய்லி வடை பாயசத்தோட சாப்பாடு..நல்லா ஜாலியா இருக்கலாம்"..என்றார் அவர்..

அப்படியா? வடை என்றதும் என் வாயிலிருந்து வாட்டர் பால்ல்ஸ் வடிந்ததை அவர் பார்த்திருக்க கூடும்..வடைக்கு ஆசைப்பட்டு வலையில் விழுந்த எலியின் கதையானது என் கதை..
                        ---------அது பற்றி அடுத்த பதிவில் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

Sunday, July 3, 2011

ரஜினியை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை..

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.நான் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகனும் அல்ல.படமே அதிகம் பார்க்க மாட்டேன் கார்பரேட் உலகுக்குள் வந்த பிறகு தான் அதிக படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.என்னுடைய ஒரே நோக்கம் அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டி காட்டுபவர்கள் தங்கள் முதுகுக்கு சோப்பு காட்ட வேண்டும் என்பதே.

நான் நீண்ட மௌனத்திற்கு பிறகு வாய் திறக்கிறேன்.வேறு வழி எனக்கு தெரியவில்லை.அதிஷாவின் "ரஜினி என்னும் அசுரன்" பதிவிற்கு சிலர் அடித்த கமெண்ட்கள் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி தான் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சிகரெட் அறிமுக படுத்தி வைத்ததை போல் என் நண்பர்கள் பேசும் போதெல்லாம் நான் சென்ட்ரல் ஜெயிலுக்கு போய் விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் ஏற்படுகிறது.

அவர்களுக்கெல்லாம் என் பதில் ஒன்று தான் "சமீப காலமாக ரஜினி எந்த திரைப்படத்திலும் சிகரெட் குடிப்பதில்லை.ஆனால் கடந்த  5 வருடங்களில் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை முன்னை காட்டிலும் உயர்ந்து விட்டதாகவே சர்வேக்கள் சொல்கின்றன".

சரி அதை விடுங்கள்..ரஜினி ஏன் அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டுகிறார்.. தைரியம் இருந்தால் வர வேண்டியது தானே .. என்கிறார்கள்..நீங்கள் உங்கள் ஊர் கவுன்சிலர் எலெக்சன்னுக்காவது நின்னுருகீன்களா? இல்லைல.. காரணம் பயம்..தோத்து போய்டுவோமோ என்கிற பயம்.அது ரஜினிக்கும் உண்டு..

ரஜினி கர்நாடகாவை எதிர்த்து பேசி பிறகு எதற்காக உடனே மாற்றி பேச வேண்டும்? இதற்கு பதில் ஒன்று தான்..ரஜினிக்கு தன் படம் ஓடாததை பற்றி எந்த கவலையும் இல்லை..ஏன் என்றால் அவர் சம்பளம் அவருக்கு வந்து விடும்.. என்ன கொஞ்சம் அதில் குறையலாம் அதை அவரின் அடுத்த படம் சரி கட்டி விடும்..

ஆனால் அவருடைய படத்தை நம்பி வயிற்றை கழுவும் கூட்டம் இங்கே அதிகம்.அவர்களுக்காக வாவது தன்னுடைய ஈகோ வை இழக்க வேண்டும் என்பதே அவர் நிலை பாடு..

இவ்வளவு பேசறீங்களே..என்றாவது ஒரு நாள் "அநியாய கொள்ளை அடிக்கும் பள்ளி கூடத்துக்கு எதிராக சத்தம் போட்டு இருக்கிறீர்களா? உங்கள் கல்லூரியில் வகுப்புக்கு சரியான நேரத்திற்கு வராத ஆசிரியரை மடக்கி கேள்வி கேட்டிருக்கிறீர்களா? உங்கள் ஊர் கவுன்சிலரிடம் எதுக்கு ரோடு போடலனு கேட்டு இருக்கிறீர்களா?" இவை எல்லா வற்றுக்கும் உங்கள் பதில் "இல்லை" என்பதாகவே இருக்கும்..

காரணம் பள்ளி கூடம் கொள்ளை அடிப்பதை தட்டி கேட்டால் பையன் படிப்பு பாதிக்க படும்.கல்லூரி ஆசிரியரை மடக்கி கேட்டால் பிராக்டிகள் மார்க்கில் வெடி வைத்து விடுவார்கள். கவுன்சிலரிடம் கேள்வி கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ வரும்..

என்ன சார் "உங்களுக்கு வந்தா ரத்தம்! அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?"