Monday, January 5, 2015

SEO ஒரு அலசல்

நேற்று என் நிறுவனத்திற்காக மார்கெட்டிங்க் சென்றிருந்தேன். client ஒருத்தர் நிறைய கேள்வி கேட்டார். பொதுவாகவே மார்கெட்டிங் செல்லும்போது கூடவே லேப்டாப்பையும் எடுத்து சென்றுவிடுவேன். அப்போது தான் நான் ஏற்கனவே SEO செய்த தளங்களையும் காட்ட வசதியாக இருக்கும்.

என்னிடம் வருவதற்கு முன்னால் அவர்களின் வெப்சைட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள், என்னிடம் வந்ததற்கு பின்னால் எத்தனை பேர் வந்தார்கள் என டெமோ காட்ட வேண்டும்.இதை website traffic என்பார்கள். சில நிறுவனங்கள் இதை போலியாக உருவாக்குவார்கள். "உனக்கென்னய்யா.. மாசம் ஆயிரம் பேர் உன் வெப்சைட்டை பாக்கணும்? அவ்ளோ தானே.. ரைட்டு விடு" என்று வேலையை காட்டிவிடுவார்கள். 

இதற்கென பிரத்யேகமாக சில டூல்கள் இருக்கின்றன. அதை bot என்று சொல்லுவார்கள். வேறு வேறு ip addressகளில், வேறு வேறு நாடுகளில் இருந்து அந்த bot ஒரு தளத்தை பார்வையிடும். "என்னய்யா ஆயிரம் பேர் வெப்சைட்டுக்கு வர்றான். ஆனா ஒருத்தனும் பொருள் வாங்க மாட்டிகிறானே" என client ஒரு நாள் உசார் ஆவார்.

"நீங்க தானே சொன்னீங்க உங்க வெப்சைட்டுக்கு ஆள் வரணும்"னு.. வந்துட்டான்ல? பிசினஸ் நடக்கலன்னு வந்து என்னைய கேட்டா? என்று நம்மாட்களும் கையை விரித்து விடுவார்கள். இதை black hat SEO என்பார்கள். இதனால் பாதிக்கபட்ட பலரும் SEO என்றாலே தெறித்து ஓடிவிடுவார்கள். நான் மார்கெட்டிங்க் போன இடத்தில் பல பேர் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் இதில் clientகளிடமும் தவறு இருக்கிறது. உதாரணமாக ஒரு தளத்திற்கு SEO செய்தால், அது அடுத்த நாளே கூகிளின் முதல் பக்கத்தில் வந்து ஆயிரம் பேர் பார்வை செய்வார்கள் போல, என அவர்களாகவே ஒரு கற்பனை செய்திருப்பார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல.
ஒரு தளத்தை கூகிளில் submit செய்தால், அது indexஆக 48 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு அது keyword competition அடிப்படையில் வரிசைபடுத்தப்படும்.

அதென்ன keyword?

உதாரணமாக உங்கள் நிறுவனத்தின் பெயர் kumar software solutions என்று வைத்துக்கொள்வோம். "kumar software solutions" என்று கூகிளில் டைப்பினால் உங்கள் தளத்தினை காட்டும். ஆனால் இது அல்ல SEO. நாம எதுவுமே செய்யாமல் கூட கூகிள் இந்த தளத்தை முதல் பக்கத்தில் எடுத்துக்கொள்ளும். ஆனா இந்த SEO company என்ன பண்ணிடறாய்ங்க. "kumar software company"னு அடிச்சா முதல் பக்கத்தில் வரும் பாரு என்று காசு பிடுங்கி விடுகிறார்கள்.

உண்மையில் கூகிளில் தேடுபவர்கள் "sofware companies in chennai" என்று தான் தேடுவார்கள். அந்த categoryல் ஆயிரக்கணக்கான ஆட்கள் இருப்பார்கள். அந்த இடத்தில் நம் clientன் தளத்தை கொண்டுவர சில மாதங்கள் தேவைப்படும், அதீத உழைப்பு தேவைப்படும். குறிப்பா செலவாகும்.

இவ்வளவு விளக்கம் சொன்னா தான் என் மீது clientக்கு நம்பிக்கை வரும்.
(குறிப்பு : எவ்வளவு நம்பிக்கை வந்தாலும் வீட்டு போங்க கால் பண்றேன்னு தான் சொல்லுவாங்க )

No comments: