Saturday, January 10, 2015

சமைப்பது எளிதா?

புதுசா சமைக்க ஆரம்பித்த பொழுது அம்மாகிட்ட சொல்லுவேன். “ஆமா.. சமைக்கறது என்ன பெரிய கஷ்டம்? அதெல்லாம் ஒரு வேலையா? ”

“வெங்காயம் தக்களிய வதக்கி உப்பு மொளகா தூள் எல்லாம் போட்டா தக்காளி தொக்கு.. அது மேல புளிய ஊத்துனா குழம்பு, இதுவே பருப்பு வேக வெச்சி கலந்தா சாம்பார். இதுக்கு இவ்ளோ சீனு” என்பேன்.

இப்போது ஒரு நாளைக்கு இரண்டு வேளையாவது சமைத்து சாப்பிடுகிறேன். உண்மையில் சமைப்பதென்பது சாம்பார் வைப்பதோ, ரசம் வைப்பதோ அல்ல.
கடைக்கு போய் காய்கறி வாங்குவதில் இருந்து துவங்குகிறது, பின் அதை நறுக்க வேண்டும், பிறகு சாதம் வைத்து, சமைக்க வேண்டும், முழு concentration இதிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் உப்பு கூட போனாலும் வாயிலேயே வைக்க முடியாது.

இதை சாப்பிடுவதோடு வேலை முடிவதில்லை, அடுத்து பாத்திரம் தேய்க்க வேண்டும். இதெல்லாம் முடியும்போது அடுத்த உணவு வேளை நெருங்கும். அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்காவது ஆபீஸில் ஓபி அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது, இல்லன்னா லீவ் போட்டுக்கலாம்.
வயித்துக்கு ஏதுப்பா லீவு? உண்மையில் சமைக்கும் பெண்கள் தெய்வம்யா!

No comments: