Wednesday, June 22, 2011

Tancet Result 2011 Not released today(22-06-2011)

எல்லா செய்தி இணைய தளங்களும் பொய் சொல்லுகிறார்களோ என்றே தோன்றுகிறது..கடுப்பேத்தரானுங்க மை லார்ட்..நான்கைந்து நாள் முன்னாடி தினகரன் நாளிதழ் பார்த்தேன்.

அதில் திங்கள் கிழமை tancet result வரும் னு போட்டுருந்தாங்க திங்கள் கிழமை இல் இருந்து இப்பொழுது வரை பார்க்கிறேன் அண்ணா வெப்சைட்இல்...... கடுப்பு மட்டுமே வருகிறது..ரிசல்ட்அ காணோமே..

எனக்கு ஆச்சரியம் என்ன வென்றால் இந்தியா டுடே வில் போட்டிருந்தார்கள் இன்று   வரும் என்று..அவர்கள் கூடவா தப்பான செய்தி வெளியிடுவார்கள்?

எதுக்கு பிரச்சன? அண்ணா யுனிவர்சிட்டி வெப்சைட்ல போன் நம்பர் இருக்கும் அதுக்காவது பேசி தெரிஞ்சிகுவோம் னு பாத்தா..உலகத்துலேயே போன் நம்பர்ரே பதிவு செய்யாமல் ஒரு இணைய தளம் இருக்கும் என்றால் அது நிச்சயமாக அண்ணா யுனிவர்சிட்டி தளமாக தான் இருக்கும் போல..

கூகிள் முகப்பில் தோன்றும் நம்பர்களுக்கு போன் அடித்தேன் யாருமே எடுக்கல..

நான் நொந்து போய்டேன்..சில தளங்களில் ரிசல்ட் பார்க்க வெளியிட்டு இருக்கும் தளத்தின் லிங்க்கே தவறு..இவர்கள் செய்தி மட்டும்  உண்மையாகவா  இருக்கும்?

தமிழகத்தில் பணிரண்டாம் வகுப்பு முடிக்கும் அதனை மாணவனின் கனவும் அண்ணா யுனிவர்சிட்டிஇல் படிக்க வேண்டும் என்பது தான்..ஆனால் அவர்களாலேயே தங்கள் தகவலை சரியாக வெளியே சேர்க்க தெரிய வில்லை என்பது வேதனை அளிக்கிறது..

communication skills மாணவர்களுக்கு மட்டுமல்ல பல்கலைகழக ங்களுக்கும் கூட முக்கியம் தான்..

Wednesday, June 15, 2011

இலவச லேப்டாப் தேவையா?


தமிழக அரசு இலவச லேப்டாப் திட்டம் பற்றி அறிவித்தவுடனே பலதரப்பிலிருந்தும் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளன..
நான் இந்த திட்டத்தை ஆதரிக்கிறேனா இல்லையா என்பதை கடைசியில் சொல்கிறேன்..
முதலில் இலவச லேப்டாப் சாத்தியமா என்பதை பார்ப்போம்..
நிச்சயம் சாத்தியமே.இங்கே சாத்தியமா இல்லையா என்பது முக்கியமே அல்ல..அதன் தரம் தான் முக்கியம்.நிச்சயமாக தரமான லேப்டாப்பாக இது இருக்குமா என்பது சந்தேகமே..

காரணம் அதிகம் செலவு செய்து கொடுக்கும் அளவுக்கு தமிழக அரசிடம் நிதி இல்லை..குறைவான விலைக்கு ஆடர் பண்ணும் போது தரமும் குறையத்தான் செய்யும்.Batteryயின் தரமும் தான்.

நான் நாற்பதாயிரம் செலவு செய்து வாங்கிய லப்டோப்பே பல முறை செலவு வைத்துவிட்டது..அப்படியிருக்க இவர்கள் ஏனோ தானோ என்று கொடுக்கும் லேப்டாப் ஏகப்பட்ட செலவு வைக்க தான் போகிறது..ஆனால் பாவம் இது இலவச கலர் டிவி போல் அல்ல.

டிவி பளுதாகிவிட்டால் “திருமதி செல்வம் பார்த்தேஆக வேண்டும்” என அப்பாவின் சோற்றில் அம்மா கைவைத்த காரணத்தினால் அது பழுது பார்க்கப்பட்டிருக்கலாம்..ஆனால் லேப்டாப் மகன் கணக்கு..எனவே அப்பாக்கள் செலவுக்கு பணம் தர மாட்டார்கள்..இலவச டிவி இருநூறு ரூபாய் செலவு வைக்கும் என்றால்..இலவச லேப்டாப் இரண்டாயிரம் செலவு வைக்கும்.

எனவே செலவு செய்ய யோசிப்பவர்கள் அதை வந்த விலைக்கு விற்கலாம் அல்லது வீட்டில் ஒரு மூலையில் எறிந்து விடலாம்..
இந்த லேப்டாப்ஐ நம்ம பசங்க எப்படி பயன்படுத்துவார்கள்?..
வழக்கம் போல facebook இல் chat பண்ணுவதற்கும் ஆர்குட்டில் அரட்டை அடிப்பதற்கும்..பிட்டு படம் பார்க்கவும்,திருட்டு விசிடி போட்டு படம் பார்க்கவும் அதிகபட்சம் ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கும்..இன்னும் சில ப்ளஆ  ப்ளஆக்களுக்கும் மட்டுமே பயன்படும் என்பது என் தாழ்மையான கருத்து..இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம்..

இவை எல்லாம் வேண்டுமானால் நெட் connection வேண்டும்..கேபிள் connection கொடுக்க தயங்காத அப்பாக்கள் இதற்கு வெடி வைக்க வாய்ப்புகள் அதிகம்..

ஆனாலும் நான் இந்த இலவச லேப்டாப் திட்டத்தை ஆதரிக்கிறேன்.ஏன் என்றால்..கணினி அவசியம் தேவை என்கிற மாணவர்களுக்கு இது நிச்சயம் பயன்படும். 

Facebook செல்லும் தம்பிகள் நிச்சயம் monster.com செல்வார்கள்..இதனால் தேர்வுகள் இணையமயம் ஆகும்.கல்லூரிக்கு நோட்டு புத்தகம் எடுத்து சென்ற மாணவர்கள் மடிக்கணினி எடுத்து செல்வார்கள்.கல்லூரியே wifi இணைப்பு கொடுக்க முன்வரும்.இணையம் கிராமங்களை சென்றடையும்.

நான் என் தம்பிகளை நம்புகிறேன்..
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் பொசியலாம்..அது விதி..நமக்கு நெல் தான் முக்கியம்..  

Sunday, June 12, 2011

புதியதலைமுறை பத்திரிக்கையில் நான்..


என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை..நான் புதியதலைமுறையின் மூலம் பத்திரிக்கையாளன் ஆனேன் என்பதை..ஜூனியர் விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்துக்கு இரண்டு முறை விண்ணப்பித்து வெற்றி வாய்ப்பை இழந்தவன் நான்..

(குறிப்பு:முதல் சுற்றுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை)

புதிய தலைமுறை மாணவ பத்திரிகையாளர் திட்டம் 2010ஆம் ஆண்டு அறிவிக்க பட்ட போது அதில் பங்குகொள்ளும் தகுதிகூட எனக்கு இல்லை..
ஆச்சரியமான விஷயம் இதுவரை நான் எழுதிய எந்த கவிதை,கட்டுரை,கதையும் எந்த நாளிதழிலோ,வார,மாத இதழ்களிலோ வந்தது கூட இல்லை.ஏன் நான் எழுதிய வாசகர் கடிதம் கூட பிரசுரம் ஆனதில்லை...

ஒரே ஒரு முறை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கட்டுரைபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன் (அதுவும் இரண்டே பேர் கலந்துகொண்டதில்..என்று யாரும் கலாய்க்க வேண்டாம்..அது 30பேர் கலந்துகொண்ட போட்டி)

இது மட்டுமே என் எழுத்துக்கு இது வரை கிடைத்த வெற்றி..நான் நன்றாக எழுதுவேன் என்ற நம்பிக்கை அந்த பரிசு வாங்கும் வரை எனக்கு இல்லை.
புதியதலைமுறையில் பயிற்சி பத்திரிகையாளருக்கான விண்ணப்பம் வெளியாகி நான் அதற்கு விண்ணப்பித்த போது.. என் அம்மா “உன்ன விட ரொம்ப நல்லா எழுதரவங்கல்லாம் இதுல கலந்துக்குவாங்க..அவங்களலாம் விட நீ நல்லா எழுதிடுவையா” என்று தர்க்கம் பண்ணினார்.. நல்ல சகுனம்.ஆனா நாம என்னிக்கி அம்மா அப்பா பேச்சலாம் கேட்ருக்கோம்..

ஆனா முதல்சுற்றில் வெற்றி பெற்றேன்..இரண்டாம் கட்ட தேர்வில் மனதுக்கு தோன்றியதை எல்லாம் கட்டுரையில் எழுதிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்.
அடுத்து நேர்முக தேர்வு..

நேர்முக தேர்வுக்கான கடிதமே எனக்கு வரவில்லை.போன் பண்ணேன்..”அதனால் என்ன?.. சொன்ன தேதிக்கு ஆபீஸ்கு வந்து கலந்துகொள்ளுங்கள்” என்றது போனை எடுத்த குரல்..9 மணிக்கு நேர்முக தேர்வாம்..ஆனால் பாருங்கள் நேர்முக தேர்வு நடந்த அன்று நான் இரவு நேர பணி முடித்து காலை வந்து அலாரம் வைத்துவிட்டு குட்டி தூக்கம் போட்டேன்..

ஆனால் என் அதிர்ஷ்டம் நான் வைத்த அலாரம் அடிக்கவே இல்லை நானே 10 மணிக்கு தான் எழுந்தேன்..பிறகு அவசர அவசரமாக ஆபீஸ்கு போன் பண்ணி..11.30க்கு நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன்..நல்லவேலை நிறைய பேருக்கு ஒரு மணிக்கு நேர்முக தேர்வு என்று கேள்விபட்டேன்.

நேர்முக தேர்விலும் எனக்கு மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசினேன்.ஆனால் தேர்வாகி விட்டேன்.
இரண்டு நாள் பயிற்சி நடந்தது..அதிஷா,யுவகிருஷ்ணா,மாலன்,பத்ரி சேஷாத்ரி போன்ற பலரை பார்த்தேன்.

கம்பெனிஇல் பொழுது போகாததால் சமீப காலமாக தான் வலைத்தளத்தில் அதிஷா,யுவகிருஷ்ணா தளங்களை மேய்ந்தேன்.
அதிஷாவின் சமீப பதிவுகளை பற்றி, குறிப்பாக எனக்கு பிடித்த “மதில் மேல் காமம்”,”சம கால பிட்டுகள்”, “ரஜினி என்னும் அசுரன்” ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்..

எங்கள் கம்பெனிஇல் யுவகிருஷ்ணா தளத்தை பிளாக் செய்துவிட்டதால் அவர் பதிவுகளை அதிகம் படித்ததில்லை.ஆனாலும் புதிய தலைமுறையில் அவர் எழுதிய அணைத்து கட்டுரைகளையும் படித்து இருக்கிறேன். இப்பொழுது தான் அவர் வலை தளம் பார்வை இட ஆரம்பித்து இருக்கிறேன்..

புதிய தலைமுறை வழங்கிய பயிற்சி மிக அற்புதமாக இருந்தது.என் எழுத்து நடையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை முதல் நாள் பயிற்சி முடிந்தவுடனே எடுத்து விட்டேன்..நிறைய கற்றுகொண்டேன்.பேட்டி எப்படி எடுப்பது..எழுதுவது எப்படி என்பதிலிருந்து நிறைய..

முக்கியமாக நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.புதிய தலைமுறை உபசரித்த விதம் மிகவும் பிடித்திருந்தது.பயிற்சி நடந்த இடத்திற்கு முதல் நாள் நான் வந்த போது என்னை பார்த்தவுடனே “தம்பிக்கு ஒரு டீ சொல்லு” என்றார் எடிட்டர்..ரொம்ப பெரிய சந்தோசம்.(ஆனால் கடைசிவரை டீ வர வில்லை).

முக்கியமாக ஒரு விஷயம்.என் போட்டோ இந்தவார புதிய தலைமுறையில் வந்திருக்கிறது..பாருங்கள்.அதில் அழகாக இருப்பேன்(சிரிக்க வேண்டாம்)

இரண்டாம் நாள் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி வந்திருந்தார்.அவரிடம் ஒரு கேள்வி கேட்டுவிட்டேன்..

“பத்தே நாளில் oracle என்று சமீப காலமாக கணினி தொடர்பாக தமிழில் வருகிற புத்தகங்கள் தரமானதாக இல்லையே” என்றேன்..

“தரமானவர்கள் எழுதாததால்” என்றார் ஒரே வரியில்..

மொத்தத்தில் புதிய தலைமுறை நடத்திய பயிற்சி முடிந்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம் ஒன்று தான்..

“மிக சரியான இடத்தில் தான் இருக்கிறேன்”

Wednesday, June 8, 2011

வெற்றி போலியான நண்பர்களை கொடுக்கிறதா?

நான் என்னுடைய தளத்தின் முகப்பில் “வெற்றி போலியான நண்பர்களையும், உண்மையான எதிரிகளையும் கொடுத்து இருக்கிறது” என்று எழுதி இருந்தது பார்த்து நண்பர் அதற்கான விளக்கம் கேட்டார்..
அவருக்கு நான் கொடுத்த விளக்கத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..ஓர் ஆண்டுக்கு முன்னர் கல்லூரியை முடித்து வெளியே வந்தவன் நான்..
கல்லூரி மேடையில் இருபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று,பரிசு பெற்ற காரணத்தால் எனக்கு கல்லூரியின் பல்வேறு பாட பிரிவுகளில் பயிலும் மாணவர்களை நண்பர்களாக கிடைக்கும் வாய்ப்பின்னை பெற்றேன்..

நான் ஓராண்டுகள் நாமக்கல் லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவமும் உண்டு..எனக்கு இதனால் பல்வேறு நண்பர்கள் பல வட்டாரங்களில் கிடைத்தார்கள்..

கல்லூரி ஹீரோவாகவே என்னை நான் நினைத்த காலங்கள் உண்டு..எத்தனையோ நண்பர்கள் என்னிடம் பேசும் போது, என்னமோ காதலிகிட்ட சொல்லற மாறி “உனக்காக என் உயிரையே கொடுப்பேன்..நாமல்லாம் அப்டியாடா பழகிட்டோம்,”என்றெலாம் பிட்டு போடுவார்கள்..
இன்று நிலைமையே வேறு.. கல்லூரி முடிந்து அவரவர் மேற்படிப்புக்காக வேறு கல்லூரியில் சேர்ந்து அங்கே நண்பர்களை உருவாக்கி கொண்டார்கள்..நானாக அவர்களுக்கு போன் பேசினால், மெசேஜ் அனுப்பினால் உண்டு..

தினமும் காலையில் தூங்கி எழுந்தால் மெசேஜ்களாலும் மிஸ்ட் கால்களாலும் நிரம்பி வழிகிற என் மொபைல் போனும் என்னை போல வெறுமையாகவே காட்சி அளிக்கிறது.. 

எனக்கு இப்பொழுது தான் வாழ்கையின் மிக முக்கிய பக்கங்களை எல்லாம் படித்த உணர்வு வருகிறது..நமக்கு எங்கு போனாலும் அங்கு ஒரு நண்பர் தேவைப்படுகிறார்..

கல்லூரியில் நாம் லீவ் என்றால் வகுப்பில் சொல்லவும்,நமக்கு தேர்வு காலங்களில் கூட உட்கார்ந்து படிப்பதற்கும்,படத்திற்கு செல்வதற்கும்,பொழுது போகவில்லை என்றால் அரட்டை அடிப்பதற்கும்..ஒரு நண்பர் எப்பொழுதும் தேவைப்படுகிறார்..
கல்லூரி மாறும் பொழுது இதே தேவைகளுக்காக வேறொரு இடத்தில் நாம் நண்பர்களை உருவாக்கி கொள்ள தயங்குவதே இல்லை..இதில் நீங்களும் நானும் விதி விலக்கல்ல..

தேர்தலில் தோற்ற கலைஞரை போல பழைய நண்பர்கள் படிப்படியாக மறக்கப்படுகிறார்கள்..
லீவு வேண்டும் என்பதற்காக ஒரு கம்பெனியில் இருக்கும் போது ஒரு டீம் லீடரை நண்பராக்கி கொள்ளும் நாம்..வேறு நிறுவனம் மாறும் போது வேறு டீம் லீடரை மாற்ற தயங்கியதே இல்லை..

தேவை மாறும்போது நண்பர்களும் மாறுகிறார்கள்..ஆனால் எப்பொழுதும் நமக்குன்னு ஒரு அடிமை சிக்குகிறார்கள்..நாமும் ஒருவருக்கு அடிமையாக சிக்குகிறோம்..

ஆனால் உண்மையான எதிரி என்று சொன்னாயே..அது என்ன உண்மையான எதிரி..என்று மடக்கினார் என் நண்பர்(அவர் புத்திசாலியாம்)..எதிரியில் உண்மை,போலி என்ற வித்தியாசமெல்லாம் இல்லை..

கல்லூரியில் நம்முடன் ரோட்டில் சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்ட ஒருவன் நம்மை எங்கு எப்பொழுது பார்த்தாலும் கண்டுகொள்வதே இல்லை..பார்த்தும் பார்க்காத மாதிரி போய்விடுகிறான்..

அவன் தான் உண்மையான எதிரி..நம்முடைய நண்பர்களை போல் அவனுக்கு மாற தெரியவில்லை..
"I don’t know the word friend had an end.."

Thursday, June 2, 2011

சில தவறுகள் நியாயபடுத்த படுகிறது(ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதில் உங்கள் பங்கும்)

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் உங்களுக்குமே தொடர்பு இருக்கிறது..நீங்கலுமே கைதுசெய்யப்படவேண்டியவர் தான்..கோவப்படாதீங்க..இந்த கட்டுரையை முழுவதும் படித்துவிட்டு திகார் செல்ல தயார் ஆகுங்கள்..
எனக்கு சமீபகாலமாக பேப்பரில் ஸ்பெக்ட்ரம் ஊழல், அந்த ஊழல் இந்த ஊழல் என்றெல்லாம் பார்க்கும் போது சில கடந்த கால  நினைவுகள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்..அந்த நிகழ்வுகள் நடந்த சமயத்தில் பெரிதாக நான் அலட்டிக்கொண்டதே இல்லை.. ஆனால் இப்பொழுதோ அப்படி இல்லை..


அந்த நிகழ்வு...


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..நான் அப்பொழுது பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..எங்கள் வகுப்பு தலைவனுக்கான தேர்தல் நடந்தது..
தேர்தல் என்றால் என்னவோ பெருசா நெனசிடாதீங்க.. வகுப்பாசிரியர் அவர் பாடவேலையின் போது வந்து "தம்பி யாருப்பா கிளாஸ் லீடர் ஆக ஆசை படறீங்க??" அப்டின்னு கேக்கறது தான் எங்க ஸ்கூல்லலாம் தேர்தல்..

முதல்ல  வகுப்பாசிரியர் சொன்னதும் எல்லோரும் பண்ணுகிற ஒரு வேலை பின்னாடி திரும்பி பாக்கறது தான்..வேற எதுக்கு..எந்த அடிமை எழுந்திரிக்க போவுதுன்னு பாக்க தான்..
கொஞ்ச நேரம் ஆளாளுக்கு ஒர்த்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துக்குவோம்..ஒரு பயலும் எழுந்திரிக்கல..


தெரியாத்தனமா நான் எழுந்திரிச்சி தொலைச்சிட்டேன்..பசங்கல்லாம் ஒரே சத்தம்..அதுவரைக்கும் நமக்கு போட்டியா ஒருபய இருக்க மாட்டானுங்க..நாம எழுந்திரிச்ச உடனே போட்டிக்கி ஒருத்தன் என்திரிச்சிட்டான்..


உடனே வகுப்பாசிரியர் "யாரெல்லாம்  வைத்திக்கு ஆதரவு தர்றீங்களோ..அவங்கல்லாம் கைய தூக்குங்கபா.."னு சொல்ல நம்மள நம்பி எதோ நாலஞ்சி பேர் மட்டும் கை தூக்குனானுங்க..ஒன்ன சொல்ல மறந்துட்டேன்..அப்பல்லாம் கிளாஸ்ல எதாவது பேச்சுபோட்டின்னா நான் தான் கலந்துக்குவேன்..கொஞ்சம் சுமாரா பேசுவேன்..


மொக்கை ஜோக்கா பேசுனாலும் காமெடின்னு நம்புற  ஒரு குருப் நமக்கு நண்பர்களானார்கள்..அவனுங்கல்லாம் நமக்கு ஆதரவா கை தூக்குனானுங்க..அப்புரம் அவனுங்கள பாத்து அஞ்சுபேர், அப்புரம் ஒரு அஞ்சுபேர்னு எப்டியோ நமக்கு பெரும்பான்மை கிடைச்சிது..


நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டேன்..(பெரிய அமெரிக்க அதிபர் தேர்தல்)..எனக்கு போட்டியா நின்னவன துணை தலைவனா அறிவிச்சிடானுங்க..எனக்கு ஒரே சந்தோசம்..பார்ரா நம்மளையும் இந்த உலகம் தலைவனா எத்துகுதுன்னு..


எப்படியோ அந்த பாடவேளை முடிந்தது..எல்லோரும் வெற்றிகரமாக படை பரிவாரங்களோடு கான்டீன் நோக்கி புறப்பட்டோம்..என்னுடன் வந்த ஒரு அடிமை வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காம "நாங்கல்லாம் உனக்கு ஒட்டு போட்டு உன்ன கிளாஸ் லீடர் ஆக்குனதுக்கு, நீ கேண்டீன்ல எங்களுக்கு பஜ்ஜி போண்டா வாங்கி தரனும் என்றான்"..


இங்கு தான் நாம் யோசிக்க வேண்டும் நம்ம பொது தேர்தலிலும் இதே தான் நடக்கிறது..நாம் தேர்தலுக்கு முன்னாலேயே அவர்களிடம் பெரிதாக எதிர்பார்க்கிறோம்..தேர்தலில் பணம் கொடுக்கும் முறையை என்னமோ அழகிரியே ரூம் போட்டு யோசித்து கண்டுபிடித்ததாக எண்ணி விட வேண்டாம்..

நாம் நம் வீட்டுக்கு மளிகை சாமான் வர வேண்டும் என்றால் எனக்கு எதாவது நான் தீனி வாங்கிப்பேன் என்று அம்மாவிடம் மூணாம் கிளாஸ் படிக்கும் போது சொன்னதிலிருந்தே துவங்கிய ஒன்று தான்.. இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது..


விளைவு..நீங்கள் உங்கள் தகுதியான பத்து ரூபாய் தீனியை லஞ்சமாக பெறுகிறீர்கள்..உங்கள் ஊர் கவுன்சிலர் பத்தாயிரம் எதிர் பார்க்கிறார்..அமைச்சர் கோடிகளில் எதிர்பார்க்கிறார்..அவ்வளவு தான் தகுதி மாறும்போது எல்லாமுமே மாறுகிறது..லஞ்சம் மட்டும் மாறாமல் அப்படியே!!


எனவே லஞ்சம் மூணாம் கிளாஸ்லையே துவங்கிவிட்டது..நாம் தான் நம்மை மாற்றி கொள்ளவும் நம் தவறை ஒப்புக்கொள்ளவும் தயாராக இருந்ததே இல்லையே..தயாநிதியும்,ராஜாவுமா ஒப்புக்கொள்ள போகிறார்கள்..உங்கள் மகனுக்கு அரசு உத்தியோகம் வாங்கித்தர நினைக்கும் உங்கள்  முயற்சி சரியென்றால், கருணாநிதி தன் மகன் அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கி தந்ததும் சரியே..


"சில தவறுகள் இங்கே நியாயப்படுத்தப்படுகிறது.. சில தவறுகள் இங்கே காயப்படுத்தபடுகிறது.."
                                                                                                                       - பாரதிராஜா


நியாயத்துக்கும் காயத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஸ்பெக்ட்ரம்..இது முடிவு அல்ல..
    
குறிப்பு: "நான் கருணாநிதியின் கையாள் இல்லை"