Friday, January 2, 2015

justdial அலப்பறைகள்

கடந்த சில நாட்களாக தீவிர பிசினஸ் ப்ரொமோசனில் இருந்தேன். அதன் ஒரு பகுதியாக justdialல் நிறுவனம் பற்றிய தகவலை ஏற்றி வைத்தேன்.

தகவல் சரிபார்ப்பதற்காக கஸ்டமர் கேரில் இருந்து பேசினார்கள். என் தகவலை எல்லாம் சரிபார்த்துவிட்டு நைசாக, "சார் உங்களுக்கு செம்மயான ஒரு கேட்டகரில மொதல்ல வச்சி தர்றோம். வேற யாரும் அந்த இடத்துல விளம்பரம் வச்சிக்கறதுக்கு முன்னாடி நீங்க வச்சிக்கோங்க"

"இல்ல மேடம் இப்போதைக்கி ஐடியா இல்ல."

"இல்ல சார்.. உங்க நிறுவனத்துக்கு எங்க மூலமா நிறைய பிசினஸ் வரும். உங்களோட வளர்ச்சிக்காக தான் சொல்றேன்"

நான் எப்படி பேசினாலும் என்னை கார்னர் செய்து, "இல்ல சார். உங்க வளர்ச்சி, நிறுவன வளர்ச்சி" என மோடி மாதிரி ஒரே வார்த்தையே பேசிக்கொண்டிருந்தார்!

"சரி மேடம், நான் டிஸ்கஸ் பண்ணிட்டு திங்கள் கிழமை சொல்றேன்" என்றேன்.

"இல்ல சார் திங்கள் கிழமைக்குள்ள அந்த இடம் வேற யாருக்காவது போயிடும்"

"பரவாயில்லை.. மேடம்" என்று சொல்லி எப்படியோ கால் கட் செய்து பெருமூச்சு விட்டேன்.

திங்கள் கிழமை கால் செய்தார். எடுக்கவில்லை. வேறு எண்ணிலிருந்து கால் செய்தார். எடுத்தேன். வழக்கம் போலவே "சார் உங்க வளர்ச்சி சார்.. நிறுவன வளர்ச்சி சார்" என்றார்
காலில் விழாத குறையாக கெஞ்சி தப்பித்தேன்.

இன்று கால் செய்தார். போனை எடுத்தேன் பழைய படி "உங்க வளர்ச்சி" என்றார்..

"அட்சுவலா மார்க்ஸ் என்ன சொல்றாருங்கறத இங்க பொறுத்தி பார்க்க வேண்டி இருக்கு.. இன்னைக்கி முதலாளிகளெல்லாம் அசுர வேகத்துல வளர்ந்துகிட்டு இருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் முதல். முதல் என்ன பண்ணும்னா?..."

"சார் புரியல" என்றார்!

"சரி புரியற மாதிரியே சொல்றேன். நேற்றைக்கு கூட சல்மான்கான் இலங்கை போய் கொலைகாரன் ராஜபக்சேவுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணி இருக்கான். இதற்கு காரணம் யார்? இன்னொரு கொலைகாரன் மோடி" என்றேன்.

போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இனி எவனாவது வந்தீங்க? ஸ்டாலின்லாம் என்ன மாதிரியான தலைவர்!

No comments: