Friday, January 2, 2015

எதாவது ஒரு துறைய choose பண்ணிக்கோ

"எதாவது ஒரு துறைய choose பண்ணிக்கோ. அதுல எக்ஸ்பர்ட் ஆகு" என்று சின்ன வயதிலிருந்து நிறைய பேர் எனக்கு சொல்லியிருக்கிறார்கள். அம்மா நறுக்கு தரித்த மாதிரி இதை சொல்வார். "நாய் வாய வச்ச மாதிரி அங்க ஒருவாய் இங்க ஒருவாய்ன்னு வைக்காத" என்று.

ஆனால் அம்பானியை எடுத்துக்கொண்டால், ஒரு பக்கம் பெட்ரோலிய நிறுவனம் வைத்திருக்கிறார், எலக்ட்ரிகல்ஸ், டெக்ஸ்டைல்.. இந்தியாவில் பல பொருட்கள் யுனிலிவருடையது.
அவர்களுக்கெல்லாம் அவங்க அம்மா அப்பாவோ, நண்பர்களோ ஒரே துறைய மட்டும் தேர்ந்தெடுங்க தம்பி என்று அறிவுறுத்தியிருக்கவே மாட்டார்களோ என்று தோன்றுகிறது.

நோக்கியா கம்பெனிய நம்பி மட்டுமே வேலை பார்த்து வேலையிழந்தவர்களுக்கு வேறு எதாவது தெரிஞ்சிருந்தா வேலை போன உடனே கவலைப்படாம எதாவது செய்திருப்பார்கள். நம்மூரில் ஐடியில் வேலை போன பல பேர் அவதிப்படுவதற்கு காரணமே ஒரு துறையில் எக்ஸ்பர்ட் ஆகும் உத்தி தான் காரணம் என்று தோன்றுகிறது.

உதாரணமாக நான் பிசினஸ் என்று இறங்கிய போது, நானே மார்கெட்டிங்கும் செய்து, வேலையும் செய்து, கணக்கு வழக்கும் பார்த்து, வசூலிப்பதில் துவங்கி, புதிய பிசினஸ்களை கண்டு பிடிப்பது துவங்கி நானே செய்தேன். அது கொடுத்த பார்வை விசாலமானது.

"ஹாங்காங்கில் சில நாட்கள்" என்று ஒருவர் எழுதிய புத்தகத்தில் படித்தேன். ஹாங்காங்கில் அவர் இருந்த போது,பைப் ரிப்பேருக்கு ஆள் தேவைப்பட்டிருக்கிறது, இளைஞன் ஒருத்தன் வந்திருக்கான், வேறு எதெதோ உதவி தேவைப்பட்ட போதும் அந்த பையனே வந்திருக்கான். அவனுக்கு பல வேலைகள் தெரிந்தது, சீனாவில் இது போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்!

No comments: