Tuesday, October 18, 2011

அங்கீகரிக்கப்பட்ட தீபாவளி





சென்ற தீபாவளிக்கு முந்தைய நாட்களை என்னால் மறக்கவே முடியாது.குறிப்பாக எப்பொழுதுமே தீபாவளிக்கு முந்தைய சில நாட்களிலேயே பணபற்றாகுறை துவங்கி விடும்.காரணம் டிரஸ் எல்லாம் எடுத்து, கண்ட மேனிக்கு வெளியூர் சென்று, என்று ஒரே கும்மாளம் தான்.ஆனால் சென்ற தீபாவளியில் தான் நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்திருந்தேன்.ஆனால் இரண்டு மாத சம்பள பாக்கி.பய புள்ள குடுக்கமாட்டேனுடானுங்க.நானும் சும்மா இல்லாம "நானா சம்பாதிச்ச காசுல தான் டிரஸ் வாங்குவேன்ன்னு” ஒரு பிட்ட வேற வீட்டுல போட்டுருந்தேன்..எங்க அப்பா பதிலுக்கு "அப்ப இந்த தீபாவளிக்கு டிரஸ்ஏ எடுக்க போறது இல்லையா?" என்று வெந்த புண்ணில் வேலை வேறு பாய்ச்சினார்.

தீபாவளி நெருங்க நெருங்க, அவர் சொன்னது உண்மை ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு லேசாக வர துவங்கி இருந்தது.தீடீரென எனக்கு எங்கள் கல்லூரி தமிழ் துறை தலைவரிடமிருந்து கால் "வைத்தி.. நாம ரொம்ப நாலா பட்டிமன்றம் போடலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தோம்ல. நமக்கு சரியான அடிமைகள் சிக்கிடாங்க"...

தலைப்பு "அதிக சந்தோசத்தை தருவது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையா? திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையா?" நான் "திருமணத்திற்கு முந்தைய வாழ்கையே" என்பதை தேர்ந்தெடுக்கலாம் என்று எத்தனித்த வினாடியே என்னை "திருமணத்திற்கு பிந்தைய வாழ்கையே" என்ற அணியில் சேர்த்திருந்ததாக அவர் கூறி கடுபெற்றினார்.“அய்யயோ தோத்து போயிடுவோமே, கைல பாயிண்டே இல்லையேஎன்று தான் யோசித்து கொண்டிருந்தேன்..ஆனால் நான் கலக்கபோவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளுக்காக தயாரித்து வைத்திருந்த காமெடிகள் கைகொடுத்தன( நான் கலக்கபோவது யாரில் பங்கு கொள்ளவெல்லாம் இல்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலக்க போவது ஜூனியர் தேர்வு நடந்த போது சீனியர்கும் சேர்த்தே ஆள் எடுத்தார் Directot தாம்சன்..சீனியர்ஐயும்,ஜூனியர்ஐயும் மோத விடுவதாக பிளான்..ஆனால் ஏனோ திட்டம் ரத்தானது.என்னையும் அழைக்கவில்லை)

சரி பட்டிமன்றத்திற்கு வருவோம்..ராசிபுரம் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பட்டிமன்றம்.பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட எல்லோருமே mphil படித்தவர்கள்.அதனால் பத்திரிகையில் என் பெயருக்கு அருகிலும் mphil சேர்த்திருந்தார்கள்."எதுக்கு சார் இப்படி" என்று கேட்டதற்கு.."என்சாய்" என்றார்.நான் இன்று வரை bca வை வைத்தே காலம் தள்ளி வருகிறேன் என்பது வேறுவிசயம்.ஆனால் வெளியில் யாராவது கேட்டால் "இன்ஜினியரிங் என கூறி கொள்ள தவறுவது இல்லை"..

திருமணத்திர்க்கு பிந்தைய வாழ்கையே மகிழ்ச்சிகரமானது என்ற தலைப்பில் நான் பேசியதாவது.."பாருங்க... எல்லாம் கல்யாணம் பண்ணி ஒரே குஜாலா இருக்காங்க.ஆனா கேவலம்.. எங்களால லவ்கூட நிம்மதியா முடியல.மனச திறந்து பேச ஒரு பொண்ணு நம்ம கூட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
திருமணத்திற்கு முன்பு உங்களுக்கு அப்பா..ஆனா திருமணத்திற்கு பின்பு நீங்களே அப்பா.திருமணத்திற்கு முன்பு வயிறு நிறைய நீங்கள் சாப்பிட்டாலும் கிடைக்காத சந்தோசம், திருமணத்திற்கு பின்பு, நீங்கள் பசியோடு தூங்கி "ஹப்பாடா நம்ம பையன் வயிறு நிறைய சாப்பிட்டு தூங்குகிறான்" என்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான்.திருமணத்திற்கு பின்பு தான் நீங்கள் புத்தர், திருமணத்திற்கு பின்பு தான் நீங்கள் ஸ்ரீராமர்..என்று கூறி எங்கள் அணிக்கு வலு சேர்த்தேன்"நாங்களே வென்றோம்.

இந்தபட்டிமன்றம் தான் என்னுடைய முதல் பட்டிமன்றம்.அதற்கு முன்பு பள்ளி  கல்லூரிகளில்  பல பட்டிமன்றங்களில்பங்கு பெற்றிருந்தாலும், பொது வெளியில் மக்கள் மத்தியில் இது தான்முதல் முறை.அவர்கள் எனக்கு சால்வைஅணிவித்து நினைவு பரிசு வழங்கி  கவுரவித்தது என் வாழ்நாளின் மிகப்பெரிய அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.இருபது வயதில் இவ்வளவு பெரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்ததை என்னால் எழுபது வயதிலும் மறக்க முடியாது.
கடைசியில் அவங்கள் கொடுத்த ஐநூறு ரூபாய் தான் நான் கலை உலகில் கால்பதித்து பெற்ற முதல் பரிசு.எத்தனையோ கல்லூரிகளில் பேச்சுபோட்டியில் மூன்றாவது பரிசு கூட வாங்க முடியவில்லையே என ஏங்கி தவித்த காலங்களை எல்லாம் அந்த ஒரே ஒரு நொடி காலி செய்து விட்டது எனலாம்.


 எப்பொழுதுமே தீபாவளியில் நான் ஊரில் இருப்பேன் என் கையில் காசு இருக்காது,கொண்டாட முடியாது.ஆனால் இப்பொழுது காசு இருக்கிறது.நான் ஊருக்கு செல்ல முடியாது.கொண்டாட முடியாது.."என்ன வாழ்க்கடா"