Thursday, January 16, 2014

புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள்

புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள் 

1) பதிப்பாளர் மேல கை வைக்க கூடாது - பதிப்பாளரை பத்தி எந்த சூழ்நிலையிலும் வாய திறக்கவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது.. காரணம் அவங்க தான் நம்ம புக்கை வெளியிடறாங்க..அதனால நோ அட்டாக் நோ ஸ்டேட்டஸ்

புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள்
புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள்
2) கவிதை எழுத கூடாது - கவிதை புக்கெல்லாம் விக்கறதேயில்லங்கறதால பதிப்பாளர்களெல்லாம் ரொம்ப தெளிவா இருக்காங்க.. அதனால நோ கவிதை

3) கில்மா - முடிஞ்ச வரைக்கும் கில்மாவா எதாவது எழுத முடியுமான்னு பாக்கணும்.. காலம் காலமா கருத்து பேர்வழிகளோட புக்க படிச்சு எல்லாரும் தெளிவா இருக்காங்க

4) நோ பிடி.எஃப் - புக்கு நெனச்ச சமயத்தில வெளியானாலும் வெளியாகாட்டியும் ராயல்டி குடுத்தாலும் குடுக்காட்டியும் நம்ம புக்க எக்காரணம் முன்னிட்டும் pdfஆக்கி நெட்டுல போட்டுட கூடாது. அப்பறம் உன்னையாரு பிடிஎஃப் அப்லோட் பன்ண சொன்னதுன்னு நம்மள அட்டாக் பண்ணுவாங்க..அதனால நோ வன்முறை!

5) குறிப்பா ராயல்டி கேக்க கூடாது - மொதல்ல நம்ம புக்கு விக்குமா விக்காதான்னே தெரியாது.. அதனால ராயல்டி கேட்டா புக்கு விக்கலன்னு சொல்லிடுவாங்க..புக்கா போட்டதே பெரிய விசயம்னு நினைச்சி அவங்களா குடுத்தா வாங்கிக்கணும்!

பிஸினஸ் ஆலோசனை

நண்பர் ஒருவர் நைட்டு போன் செய்திருந்தார்.. புதுசா பிஸினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. என்ன பண்ணலாம் என்று கேட்டார்.. ”பதிப்பகம் ஸ்டார்ட் பண்ணு மச்சி.. இப்போ அது தான் செம்ம பிஸினஸ்” என்றேன்..

நான் எதோ காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு “நீ ஃபேஸ்புக்ல பேசற மாதிரி காமெடி பண்ணாத.. சீரியஸா தான் கேக்கறேன்” என்றார்..

நான் செம்ம காண்டாகி கத்தி உட்டுடேன்.. நீங்க ஒரு பெரிய ஐடி கம்பெனி வச்சிருந்தா கூட உங்கள டிவில கூப்டு பேச வைக்க மாட்டாய்ங்க.. பதிப்பாளரதான் கூப்டுவாய்ங்க.. ராயல்டி தரத்தேவையில்லை.. 1000 பிரிண்ட் போடறேன்னு சொல்லி 5000 பிரிண்ட் போட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள்..

கேட்க வேண்டிய ஆசாமிகளே.. எதிர்காலத்துல நம்ம புக்க போட இந்தாளை தான் கேட்க வேண்டி இருக்கும் என அடக்கி வாசிப்பார்கள்.. பெரிய பெரிய அரசியல்வாதிகளின் தொடர்பு.. நாளைக்கே யாராவது கைது செய்தாலும் “I support குப்புசாமி” என பேஜ் துவங்கி அதை ஒரு ஆயிரம் பேர் லைக் பண்ணுவாய்ங்க.. மூடிட்டு போனை வை! என்று கட் பண்ணிட்டேன்

சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி

1996ஆ 97ஆ சரியாக தெரியவில்லை..அப்போது சன்டிவியில் பொங்கலை முன்னிட்டு ஒரு போட்டி நடத்தினார்கள்.. ”மூன்று நாள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை உன்னிப்பாக பாருங்கள்..இடையிடையிடையே கேட்கப்படும் கேள்விக்கு பதிலெழுதி அனுப்பினால்... தேர்ந்தெடுக்கப்படும் நேயர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு” என்பதாக..

நிறைய பேர் எழுதி அனுப்பினார்கள்..இரண்டு மூன்று மாதங்கள் கழித்து சரியான விடையெழுதிய 200 குடும்பங்களை(அதாவது வீட்டுக்கு நான்கு பேர்) ஒரு ட்ரெயினில் ஏத்தி தமிழ்நாட்டின் சில பல ஏரியாக்களுக்கு (கிஷ்கிந்தா என்பதாக நினைவு) ட்ரெயினிலேயே சுத்தி காட்டினார்கள்.. இரண்டு நாள் சுற்றுலா என்பதாக நினைவு.. 

சாப்பாடு.. தங்குமிடம் எல்லாம் சன் டிவியே பார்த்துக்கொண்டு.. போகிற வழியில் டீ காபி ஸ்னாக்ஸ் என்றெல்லாம் கொடுத்து கடைசியில் 2வது நாள் முடியும் போது எல்லோர் கைகளிலும் சாக்லேட்,பிஸ்கட் , மளிகைச்சாமான் என பரிசாக கொடுத்து வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிட்டார்கள்..

அந்த ரெண்டு நாள் நடந்த கொண்டாட்டங்களை ஷூட் செய்து டிவியில் ஒளிபரப்பினார்கள். நான் டிவியில் அதை பார்த்த போது அடுத்த வருடம் நடந்தால் போகணூம் என்பதாக நினைத்துக்கொண்டேயிருந்தேன்.. அடுத்த வருடம் அதே நிகழ்ச்சி வரவில்லை.. அதன் பிறகு யாரும் அது போல முயற்சிக்கவேயில்லை!! இனி முயற்சிப்பார்களா என்றும் தெரியவில்லை!!

Tuesday, January 14, 2014

இணைய மார்கெட்டிங்க் என்பது யாதெனில்

இன்னைக்கு வெப்சைட் வைத்திருப்பது ரொம்ப ஃபேஷனாயிடுச்சி.ஆளாளுக்கு விசிட்டிங்க் கார்டில் போட்டுக்கொள்கிறார்கள்.”இண்டர்னெட் போனீங்கன்னா நம்ம வெப்சைட்ட பாருங்க. செம்மயா இருக்கும்” என்பார்கள்.

இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு வெப்டிசைனிங்க் கம்பெனி வைத்திருக்கிறார்கள். யாரை கேட்டாலும் “வெப் டிசைனிங்க் பண்ணி தர்றோம்..” என்கிறார்கள்.குடிசைத்தொழில் போல ஆகிவிட்டது.இது ஒரு பக்கமென்றால் ஏற்கனவே தங்கள் அலுவலகத்துக்கு வெப்சைட் வாங்கி,பெருமைக்காக விசிட்டிங்க் கார்டில் மட்டும் போட்டுக்கொண்டு “எங்குளுக்கும் வெப்சைட் இருக்குல்ல” என காலர் தூக்கிவிட்டு சுத்திக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் வெப்சைட்டை யார் பார்க்கிறார்கள் என விசாரித்து பார்த்தால், அவர்கள் மட்டுமே பார்ப்பதாக தான் தகவல்.அதுவும் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ.. அப்பப்ப யாராவது நண்பர்கள் பார்க்கலாம்.யாருமே பாக்காத வெப்சைட்டை யாருக்காக துவங்கி வைத்திருக்கிறார்கள்?

வெப்சைட் துவங்குவதோடு வேலை முடிந்துவிட்டதாக நம்மில் பலர் நினைத்துக்கொள்கிறோம். வெப்சைட் என்பது வெறுமனே வெப்சைட் மட்டுமல்ல. அது ஒரு பிசினஸ். நம்ம பிசினஸ் நமக்கு மட்டுமே தெரிந்திருந்தால் போதுமா? நாம் ஒரு ஹோட்டல் பிசினஸ் செய்வதாக வைத்துக்கொள்வோம். நம்ம கடை நமக்கு மட்டுமே தெரிந்து நாம மட்டுமே நாலு வேளை மூக்கை பிடிக்க சாப்பிட்டால் போதுமா? இல்லை நம்ம நண்பர்கள்.. சொந்த காரங்க மட்டும் சாப்பிட்டால் போதுமா? நமக்கு தெரியாத யார் யாரோ வந்து நம் கடையில் சாப்பிட்டால் தான் நமக்கு போணி ஆகும், பணம் வரும், கல்லா கட்டலாம். நிறைய பேர் வரும்போது பிசினஸும் டெவலப் ஆகும். வெப்சைட்டும் அதே போல தான்.  நமக்கு தெரியாத யாரோ பார்க்க வேண்டும்.

நமக்கு சம்பந்தமே இல்லாத, நம் பிசினஸ் தேவைப்படும் ஒருவருக்கு தெரிந்தால் தான் நமக்கு அதனால் லாபம்.
இல்லையென்றால் எதற்காக சில ஆயிரம் செலவு செய்து ஒரு வெப்சைட் துவங்கணும்.வேஸ்ட் இல்லையா? ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கும் போனையே அடித்து துவைத்து சுக்கல் சுக்கலாகும் வரை பயன்படுத்துகிறோமே.. அந்த போனை வைத்து மெசேஜ் அனுப்பறோம், பாட்டு கேக்கறோம்,பொழுதுக்கும் யாருக்கோ போன் பேசறோம்,என்னவெல்லாம் முடியுமோ எல்லாம் செய்து பாடாய் படுத்தறோம். நம் வெப்சைட்டை மட்டும் எதுக்கு வெட்டியா வச்சிருக்கணும்?

இனி நம் வெப்சைட்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்யப்போகிறோம்.அடித்து துவைத்து கசக்கி பிழிந்து எடுக்க போகிறோம்.சரி இதெல்லாம் வெப்சைட் வைத்திருக்கிறவர்களுக்கு.. இல்லாத நாங்க என்ன பண்றது? என குரூப் கேட்பது என் காதில் விழுகிறது. வெப்சைட் இல்லாதவர்கள் அவங்கவங்க ஆபீஸ்க்கு வெப்சைட் துவங்குங்கள்.
இணையதளம் மற்றும் இணைய மார்கெட்டிங்க் பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த கட்டுரை. காரணம்.மார்கெட்டில் சகட்டுமேனிக்கு வெப்சைட் துவங்கித்தருபவர்கள் இருக்கும் இந்த நேரத்தில், இணையதளம் துவங்கித்தருபவர்களிடம் நாம் எதிர்பார்க்க வேண்டியது என்னென்ன. வெப்சைட் வாங்கிவைத்துக்கொள்வதால் மட்டும் வேலை முடிந்துவிட்டதா? அதை அடுத்தவரிடம் கொண்டு செல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டும் என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறைந்த பட்ச அக்கறை. அவ்வளவே!

 நீங்கள் இன்வெர்ட்டர் விற்கும் கடை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கடையை பற்றி யார் யாருக்கெல்லாம் தெரியும்? உங்கள் தெருவில் இருப்பவர்,பக்கத்து தெருவில் இருப்பவர்,அதிகபட்சம் உங்கள் ஊரில் இருப்பவர்.பத்து ஊர் தாண்டி இருக்கும் ஒருவர் இன்வர்டர் வாங்க வேண்டி கடையை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் ஊரில் ஆளே இல்லையென வைத்துக்கொள்வோம்.அவருக்கு உங்களை தெரிய வேண்டுமென்றால் நீங்கள் இணையத்தில் இருந்தாகவேண்டியது அவசியம்.

உலகம் சுருங்கிவிட்டது.எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது.ஜட்டியிலிருந்து ஜமுக்காளம் வரை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் இதே ஜட்டியும் ஜமுக்காளமும் நம்ம தெருவோரத்திலிருக்கும் கடையிலேயே கிடைத்துவிடுகிறது.ஆனால் எங்கிருந்தோ கொண்டு வந்து கொடுப்பவன் நம்ம தெருகாரனை விட 10 ரூபாய் கம்மியாக கொடுக்கிறான். கொடுக்க முடிகிறது என்றால் அதற்கும் ஒரே காரணம் இணையம்.
யோசித்துப்பார்த்தால்..இன்னும் பத்து ஆண்டுகளில் நம் தெருவில் கடையே இருக்கப்போவதில்லை..அப்போது நாம் மட்டும் கடை வைத்திருந்தால் போனியாகுமா.. நாமும் அட்வான்ஸ்டாக யோசித்தாக வேண்டியிருக்கிறது.யோசிச்சிகிட்டே இருங்க. அடுத்த வாரம் பாப்போம்!

இணைய மார்கெட்டிங்க் -2

நன்றி - அரக்கோணம் டைம்ஸ் (ஜனவரி 12 2014)

Wednesday, January 8, 2014

ஜில்லா ரிலீஸ் தள்ளி போகுமா?

ஜில்லா என்பது Jilla என ஆங்கிலத்தில் வருகிறது.. “J" means ஜெயலலிதா.. ஜெயலலிதா இல்லா.. என்ற பொருள் வருகிறது.. தமிழக முதல்வரும் ஆ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளருமான மாண்புமிகு முதல்வர் அம்மாவை காலி செய்யும் நோக்கோடு திரைப்படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கில் சமீபத்தில் அரசல்புரசலான சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது!!

விஜய் ஆம் ஆத்மியில் சேர்ந்து நாடாளுமன்றத்தேர்தலில் ஆ.தி.மு.கவுக்கு கடும் சவாலாக இருப்பார் என்ற வதந்தியை தொடர்ந்து இந்த வதந்தி பரவியிருக்கிறது..கடந்த முறை தலைவா தடை செய்யப்பட்ட போதும் அம்மா கொடநாட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!! #jilla #ஜில்லா


ஜில்லா ரிலீஸ் தள்ளி போகுமா
ஜில்லா தொடர்பாக ஃபேஸ்புக்கில் உலாவும் காமெடி

Friday, January 3, 2014

ஒரு ஊர்ல ஒரு தொழிலதிபராம்!

ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தாராம்.. அவர் எப்பவுமே பயங்கர பிஸி..வீட்டிலேயே இருக்க மாட்டார்.. எப்ப பாத்தாலும் ஆபீஸ்.. எங்காவாது க்ளையண்ட் மீட்டிங்க் அல்லது க்ளப்.. பார்ட்டி என்றே இருப்பார்.. 

ஒரு வேளை வீட்டில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், அவருடைய ப்ரத்யேக ரூமில் உட்கார்ந்து அலுவலக வேலையை பார்ப்பார்! work from home தான்!! 

அவருக்கு ஒரு மனைவி.. ஒரு குழந்தை!! மனைவிக்கு தொழிலதிபர் மீது செம்ம காண்டு.. இந்தாள கல்யாணம் பண்ணிகிட்டு என்னத்த கண்டேன் என்பதாக.. என்னத்த என்ற இடத்தில் 18+ ஐ யோசித்துக்கொள்ளவும்!

”என்னடா ஞாயித்துகிழம கூட அப்பா வீட்டுல இருக்க மாட்டேங்குறே.. நம்ம கூட வெளாட மாட்ராறே” என அந்த குட்டிப்பாப்பாவுக்கும் செம்ம காண்டு!

ஒரு ஞாயிற்றுக்கிழமை அர்ஜண்டா ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருந்த தொழிலதிபரை குழந்தையும் அம்மாவும் கார்னர் செய்துவிட்டார்கள்!! ” ஞாயித்துக்கிழமை கூட அப்டி என்ன ஆபீஸ்” என மனைவி மடக்கி மடக்கி சண்டை போட.. “போப்பா உன்கூட டூக்கா” என பாப்பா தன் பங்குக்கு ஜாயிண்ட் அடித்தது!!

”இப்டியே ஆபீஸ் ஆபீஸ்னு இருந்தீங்கன்னா.. நாளைக்க்கி வயசாகி சோர்ந்து போய் உட்கார்ந்ததும் திரும்பி பாத்தா உங்க கூட யாருமே இருக்க மாட்டாங்க.. அப்ப உக்காந்து ஃபீல் பண்ண வேண்டி தான்.. ஆனா அப்ப ஃபீல் பண்ணாலும் சாய்ந்து அழ தோள் இருக்காது” என மனைவியானவர் சொன்ன போது.. கணவர் ரொம்ப ஃபீல் பண்ணி, மனம் திருந்தி “இனிமே நான் ஆபீஸ் போகப்போறதில்ல..உங்களோடயே வீட்ல இருந்து டைம் ஸ்பெண்ட் பண்ண போறேன்” என தொழிலதிபர் வீட்டிலேயே செட்டிலாகிவிட்டாராம்!!

மனைவிக்கும் குழந்தைக்கும் செம்ம ஹாப்பி.. அந்த நாள் முழுதும் தொழிலதிபரை கொஞ்சி தீர்த்துவிட்டார்கள்! ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஓடியது!!

திங்கள்கிழமையிலிருந்து தொழிலதிபர் நல்ல அப்பாவாக குழந்தையை ஸ்கூலுக்கு கொண்டு போய்விட்டார்! மனைவிக்கு காய்கறி வாங்கிகொடுத்து நாள் முழுதும் கொஞ்சினார்! இப்படியே நாள் ஓடியது!!

மாசக்கடைசி கையை கடிக்கத்துவங்கியது.. ” நீங்க என்னங்க பொறுப்பேயில்லாம வீட்டுல உகாந்து இருக்கீங்க..” என மனைவி கணவன் மீது பாய்ந்தார்..”போப்பா நீ மோசம்.. வீட்ல வெட்டியா உகாந்து இருக்க” என பாப்பாவும் மாரில் எட்டி உதைக்க!! அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு ஆபீஸ் புறப்பட்டார்!!

”இனி எவனாவது நேரம் ஒதுக்கலன்னு சொன்னீங்க.. வாய்லயே மிதிப்பேன்!!” என புதிய சபதமேற்றிருந்தார்!!