Friday, January 2, 2015

நன்றி 2014

2014ல் காதலில் தோற்றேன். அவர் என்னை விட்டு சென்றுவிட்டார், facebookல் ப்ளாக் செய்துவிட்டார், மொபைல் எண்ணை மாற்றிவிட்டார். தொடர்பு முழுக்க துண்டிக்கப்பட்டது.
என்ன செய்வதென தெரியவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. ராத்திரி 2 மணி வரை அவளோடு தான் பேசிக்கொண்டிருந்தேன். அவள் போன பிறகு தூக்கம் வரவில்லை.போர் அடித்தது.

"ஜிம்முக்கு போனா தூக்கம் நல்லா வரும்" என்றார்கள். சென்றேன். தூக்கம் வந்தது.ஆறு கிலோ ஏத்தினேன். ஆனால் எதையோ இழந்த வெறுமை.

உட்கார்ந்து யோசித்து பார்த்ததில் நான் அவளை காதலித்தேன் என்பதை விட அவளுக்கு addict ஆகியிருந்தேன் என்பதே உண்மை. நாள் முழுவதும் அவளோடு பேசுவது, பின் பேசியதை நினைத்து சிலாகிப்பது. உண்மையில் அவளைத்தாண்டி என் சிந்தனையில் எதுவும் இல்லை. நம்மூரில் காதலிக்கிற எல்லோருமே இப்படி தானிருப்பதாக புரிந்துகொள்கிறேன். அதனால் தான் காதலில் தோற்ற உடனேயே எல்லாம் போயிருச்சு என துவண்டுவிடுகிறோம்.

அவள் போன பின் எனக்கு நிறைய நேரம் இருந்தது. ஹார்ட் டிஸ்கில் நிறைய படம் வைத்திருந்தேன். நாள் முழுவதும் அதை பார்த்தேன். இணையத்தில் தேடித்தேடி நிறைய குறும்படங்கள் பார்த்தேன். பேஸ்புக்கில் அவளோடு அதிக நேரம் செலவிட்டேன். அந்த பழக்கத்தால் facebook addict ஆகிவிட்டிருந்தேன். அவள் ப்ளாக் செய்திருந்தாலும் வேறு வேறு ஐடிகளில் சென்று லவ் டார்ச்சர் கொடுத்தேன்.

உண்மையில் நம்மை பிடிக்காதவர்களை நாம் என்ன செய்தும் திரும்ப பெற முடியாது என்பதை புரிந்துகொண்டேன். facebook addictionஐ கட்டுபடுத்த சில நாட்கள் பேஸ்புக்கை விட்டு விலகி இருந்தேன். அது நல்ல பலனளித்தது. அதே நேரம் வண்டலூரில் இருந்து உடனடியாக காலி செய்து சோழிங்கநல்லூருக்கு. இடமாற்றம் நல்ல மனமாற்றமளித்தது.

எனக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதில் நேரம் செலவிட முடிவெடுத்தேன். பல்வேறு இடங்களுக்கு சென்றேன்.நண்பர்களோடு அரட்டை அடித்தேன். எனக்கு பிடித்த விசயங்கள் பற்றி தகவல் சேகரித்தேன். பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று நானும் நண்பர் Bharathi Kannanனும் மக்களை சந்தித்தோம்.

மீத்தேன் ஆவணப்பட திரையிடல்,பாலஸ்தீன எதிர்ப்பு கூட்டம், கல்விக்கான போபால் பயணம், அதையொட்டிய சைக்கிள் பயணம் என பலவற்றில் பங்கெடுத்தேன். போபால் பயணம் என் மனதில் நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அரசியல் ரீதியான பார்வை மாறி இருக்கிறது.
போபால் பயணத்தை ஒட்டி நண்பர்களை அணுகி ப்ரொபைல் போட்டோ, கவர் போட்டோ மாற்ற சொல்லி கேட்டுக்கொண்டேன். நான் யோசித்துக்கூட பார்க்கவில்லை, பெரிய பெரிய பிரபலங்களெல்லாம் ஆதரித்தார்கள். யாருமே என்னை கலாய்க்கவில்லை. இதை என் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்பதாக தான் புரிந்துகொள்கிறேன்.ஏனென்றால் தினம் தினம் நம் chat பாக்ஸில் யார் யாரோ எதெதோ கேட்கிறார்கள். அதையெல்லாம் நாம் கண்டுகொள்கிறோமா என்ன?

இடையில் ஹாக்கிங் தொடர்பாக படிக்கத்துவங்கி இருந்தேன். வெற்றிகரமாக பக்கத்துவீட்டு wifiஐ ஹேக் செய்தேன். அடுத்து இணையதளங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு பற்றி ஆராய்ச்சி செய்தும் படித்தும் வருகிறேன்.அடுத்து என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்பது என் கண் முன்னே தெரிகிறது

உண்மையில் காதலைத்தவிர எவ்வளவோ இருக்கிறது என்று கற்றுகொடுத்த ஆண்டு 2014.
2015ல் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. Because journey is more imporant than destination என்ற புரிதல் வந்திருக்கிறது

No comments: