Saturday, March 1, 2014

200 ரூபாயில் வெப்சைட் துவங்குவது எப்படி?


”மச்சி எனக்கொரு வெப்சைட் ஓபன் பண்ணனும்.. யாரை போய் கேட்டாலும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரேட் சொல்றான்.. ஒருத்தர் 1000ரூபாய்க்கி சொன்னா இன்னொருத்தர் 5000 சொல்றான், வேற ஒருத்தர்கிட்ட கேட்டா பத்தாயிரமாம்.யார்கிட்ட வாங்கறதுன்னே தெரியல” என்றார்.

துணி வாங்க கடைக்கு போகிறோம்.ரோட்டுக்கடையில் வாங்கினால் ஒரு ரேட்.ஷோரூமில் வாங்கினால் ஒரு ரேட், அதுவே ஷாப்பிங்க் மாலில் ஒருரேட்.தரத்துக்கேற்ப தான் விலை இருக்கும்.எல்லாமே வியாபாரம், லாப நஷ்ட அடிப்படையிலானது.டிசைனுக்கேற்ப விலை மாறும்.அவங்களும் ஆபீஸ் வாடகை குடுக்கணும்.கரண்ட் பில் கட்டணும், நாலு பேர்க்கு சம்பளம் போக அவங்களுக்குன்னு ஒரு லாபம் வைப்பதால் விலை அதற்கேற்ப தான் இருக்கும்.

ரொம்ப செலவு செய்யாமலே  நாமே வெப்சைட் துவங்க முடியும்.அதற்கு முன் சில அடிப்படை தகவல்களை பார்ப்போம்.
டொமைன் (domain) என ஒன்றிருக்கிறது. .com,.in என முடியும். பல வகைகளில் இருக்கிறது! இது தான் அட்ரஸ். இதற்கு ஆண்டுக்கு 500ரூபாய் கட்ட வேண்டும். godaddy.com போன்ற நிறுவனங்கள் 200ரூபாய்க்கு கூட தருகிறார்கள்.டொமைன் வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. 

ஹாஸ்டிங்க்(hosting) என ஒன்று இருக்கிறது.அதற்கு வருடத்திற்கு 1000ரூபாய் வரை கட்ட வேண்டும். வீடு வாங்கினால் மாதம் மாதம் கரண்ட் பில் கட்டுகிறோமே. அது போல வெப்சைட் வாங்கினாலும் சில அடிப்படை விசயங்களுக்காக செலவு செய்ய வேண்டும்.
ஆனால் blogger.comல் உங்களுக்கான வலைப்பதிவு ஒன்றை துவங்கி, இலவசம் தான்.பின் godaddyல் 200ரூபாய் கட்டி .com ஆக்கினால் முடிந்தது வேலை.வெறும் 200ரூபாயில் வெப்சைட்.

blogger கணக்கு துவங்குவது எப்படி?

ப்ளாக்கர் கணக்கு துவங்குவது எப்படி என தெரிந்துகொள்ள மேலே உள்ள லிங்கிற்கு செல்லவும்! அதன் பிறகு ப்ளாக்கரை டொமைனாக்கினால் வேலை முடிந்தது. அது பற்றி அடுத்த பதிவில்! (காத்திருங்கள்) 


1 comment:

INFOTECH SOLUTIONS said...

கோ டாடியில் ஹோஸ்டிங் வாங்கிவிட்டு வெப்சைட் சரியாக டிசைன் செய்யத் தெரியாமல் இருப்போர் எங்களைத் தொடர்பு கொண்டால் சிறிய தொகையில் டிசைன் செய்த் தருகிறோம். இன்போடெக் சொலுஷன்ஸ், ஈரோடு. www.infotechwebs.com 9578761657