Friday, June 29, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை (காதலில் விழுந்தேன்)


பல சந்தர்ப்பங்களில் ஆறுதலளிக்கும் ஃபேஸ்புக், சில சமயம் அதிர்ச்சியளிக்கவும் தயங்குவதில்லை.

ஃபேஸ்புக்கில் பெண்ணாசையால் வலையில் சிக்கிய ஆசாமி பற்றிய கதை..
சென்னையில் வீடெடுத்து தங்கி இருக்கும் ஒருவர்.பெயர் குமார் என வைத்துக்கொள்வோம்.அவர் ஏற்கனவே திருமணமானவர்.ஒரு குழந்தை வேறு இருக்கிறது.தினந்தோறும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட அவருக்கு ஒரு நாள் ஒரு பெண்ணிடமிருந்து ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் வந்திருக்கிறது.இவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார்.

அந்த பெண்மணியின் ப்ரொபைலை மேய்ந்த போது அந்த பெண்ணின் சில ஃபேட்டோக்கள் இருந்திருக்கின்றன.அந்த ஃபோட்டோவால் கவரப்பட்டதால் அந்த பெண்ணின் ரெக்வஸ்டை அக்செப்ட் செய்ததாக கூறுகிறார்.

அக்ஸெப்ட் செய்த சில நிமிடங்களில் அந்த பெண் சேட் செய்கிறார்.சாதாரணமாக துவங்கும் பேச்சு பின் சுவாரசியமாக நகர்கிறது.இவ்வாறு நாள் முழுதும் சேட்டுகிறார்கள்.
மறுநாளும் தொடர்கிறது.குமார் ஆபீஸில் இருக்கும் பொழுதெல்லாம் சேட்டுகிறார்.தன் நம்பரை பகிர்கிறார். இதுவரை ஃபேஸ்புக்கில் மட்டுமே நடந்த சேட் பின் கால் ஆகிறது. இருவரும் காதலர்கள் போலவே பேசிக்கொள்கிறார்கள்.குமார் தனக்கு திருமணமானதையும்,குழந்தை இருப்பதையும் மறந்து தன் அந்தரங்க விஷயங்களையும் கூட அந்த பெண்ணோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு நாள் குமாரின் வீட்டுக்கு வங்கியிலிருந்து கிரெடிட் கார்ட் ஆசாமிகள் வருகிறார்கள்.ஒரு வருடத்திற்கு முன் குமார் பிரதான வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கிறார்.கணக்குவழக்கில்லாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்த குமார், வங்கியிலிருந்து வந்த ஸ்டேட்மெண்ட் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.75ஆயிரம் ரூபாய் பில் வந்திருக்கிறது.எப்படி கட்ட போகிறோம் என்று கையை பிசைந்துகொண்டிருந்தவரின் கழுத்தை வங்கிக்கார தடியர்கள் நெருக்குகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கட்டுவதாக ஒப்புக்கொள்கிறார் குமார்.ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக குமார் வேலை செய்யும் நிறுவனத்தை இழுத்து மூடவே, வேறு வழியில்லாமல் பெட்டி படுக்கையோடு ஊருக்கு சென்று விடுகிறார். பழைய நம்பரை மாற்றிவிட்டு செட்டிலாகிவிட்ட குமார், கிரெடிட் கார்டு தொடர்பாக வங்கியிலிருந்து யாரும் தொடர்பு கொள்ளாததால் வங்கிக்கு நாமத்தை போட்டுவிட்டு குதூகலமாக இருந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வேறு வேலை தேடி மீண்டும் சென்னை வந்து செட்டிலாகும் குமாருக்கு வந்தது டவுட் “இந்த பேங்க்காரய்ங்க.. இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும் எப்படி கண்டுபிடிச்சாய்ங்கஎன்று தலையை பிய்த்துக்கொண்டார்.

எப்போதோ பேச்சுவாக்கில் வங்கி ஒன்றில் தான் பணிபுரிவதாக அந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.ஃபேஸ்புக்ல வந்த புள்ள காரணமா இருக்குமோ.. என்று யோசித்தவாறே அந்த பெண்ணுக்கு போன் அடித்த குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது வரை ரொமாண்டிக்காக பேசிய அந்த பெண், இப்போது அதிகார தொனியில் “உங்களோட எல்லா தகவலும் எங்ககிட்ட இருக்கு நீங்க தப்பிக்க முடியாதுஎன சினிமாவில் வரும் வில்லியாக அந்த பெண் பேசியது குமாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

நன்றி – விஜய் டிவி – நடந்த்து என்ன டீம்

வங்கி ஆசாமிகள் இது போல களம் இறங்கி இருப்பது சமீபகாலமாக அதிர்ச்சியளித்திருக்கிறது.கிரெடிட் கார்டில் பணம் வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் தலைமறைவான குமாரை இங்கே நியாயப்படுத்துவதற்கில்லை.ஆனால் வங்கி கணக்கு துவங்கவே இதை கொண்டுவா..அதை கொண்டுவா என சாதாரண மக்களை அலைகழிக்கும் வங்கிகள்.. கார்பரேட் ஆசாமிகளுக்கு நிறுவனத்திற்கே வந்து இலவசமாக சேலரி அக்கவுண்ட் வழங்கி விடுகின்றன. கூடவே கிரெடிட் கார்டு வேறு.ஒரு காலத்தில் லோன் வழங்குவதற்கான மொத்த அதிகாரமும் மேனேஜரின் கையில் தான் இருக்கும்.

இப்பொழுதோ லோனுக்கு ஆள்பிடிக்க ஒரு டீம், லோன் கட்டாதவனின் கழுத்தை பிடிக்க இன்னோரு டீம் என வேலை பிரிக்க பட்டிருப்பதில் தான் பிரச்சினை துவங்குகிறது.
லோன் கொடுக்கிற டீமுக்கு எப்படி கட்டுவான் என்ற கவலையெல்லாம் இல்லை.எவன் தலையிலாவது மிளகாய் அரைத்தால் டார்கெட்டை அடைந்துவிடலாம் என்ற நெருக்கடி, லோன் கட்டாதவனை சிபிஐ போல குறுக்குவழியில் பிடித்து தங்கள் டார்கெட்டை முடிக்க முயல்கிறது இன்னொரு டீம். வங்கியின் இந்த செயல்பாட்டை பற்றி மற்றொரு சமயம் பேசுவோம்.

ஃபேஸ்புக்கில் குமார் கோட்டை விட்ட இடங்களை அலசுவோம்.

1)       எப்பொழுதுமே பெண்களிடமிருந்து ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் வரவே வராது.அப்படி வருகிறதென்றால் உள்ளே எதோ சங்கதி இருக்கிறதென்று அர்த்தம்.

2)       ப்ரொஃபைலை அலசி இருக்க வேண்டும்.படிப்பு மற்றும் ஊர் போன்ற தகவல்கள் இல்லையென்றால் அது ஃபேக் ஐடி என்று பொருள்.

3)       மியூச்சுவல் ஃப்ரெண்ட் யாரும் இருக்கிறார்களா என பார்த்திருக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் எப்படி என்னை தெரியும்? எப்படி என்னை கண்டுபிடித்தீர்கள் என்று விசாரித்திருக்க வேண்டும்.

4)       ஒரு கட்டம் வரைக்கும் தான் ஃபேஸ்புக்கில் சேட்டுவதும்,போனில் பேசுவதுமெல்லாம். ஒருவாரம் பேசியதுமே நேரில் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.அவர் உண்மையான ஆசாமிதானா..இது பெண்ணுக்கு மட்டுமல்ல.ஆணுக்கும் தான்.காரணம் பின்னால் எதாவது பிரச்சினை என்றால் போலீஸை அணுகும் போது ஆள் அடையாளம் சொன்னால் உதவும்.

3 comments:

இரவு வானம் said...

உண்மைதான் பெண் ஐடி என்றாலே ஜாக்கிரதை உணர்வு அவசியம்.

priyatamil said...

//ப்ரொஃபைலை அலசி இருக்க வேண்டும்.படிப்பு மற்றும் ஊர் போன்ற தகவல்கள் இல்லையென்றால் அது ஃபேக் ஐடி என்று பொருள்//

இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. என்னோட FB profile நான் இந்த விசயங்களை ஷேர் செய்வது கிடையாது அதனால் என்ன ID fake என்று சொல்ல முடியாது.

Swara Vaithee said...

பிரியா நான் சொன்னதெல்லாம் ஒரு ஜாக்கிரதை உணர்வுக்காக தான். பெரும்பாலும் பெண்கள் யாரும் ஃபேஸ்புக்கில் சொந்த தகவல்களை பகிர்வதில்லை. சினிமா ஹீரோயின் போட்டோக்களையோ சின்ன குழந்தைகள் போட்டோக்களையோ தான் ப்ரொஃபைல் பிக்சராக பதிவார்கள்.

ஆனால் அவர்களின் பதிவுகளை அலசும்போதோ, அவர்களின் ப்ரொஃபைலை அலசும் போதோ அவர்கள் பெண்கள் தான் என்பதை சில விசயங்கள் காட்டிக்கொடுத்துவிடும்.