Thursday, July 7, 2011

என் ஹாஸ்டல் வாழ்க்கை

காலை அதிஷாவின் பதிவு ஒன்றை படித்தேன்..அதிலிருந்து எனக்கு என் பழைய ஹாஸ்டல் பற்றிய எண்ணமே மனதில் ஓடியது.. இனி தொடர்ந்து ஒரு என் ஹாஸ்டல் சுவாரஸ்யங்களை பற்றி எழுதலாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன்..

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து நான் ஹாஸ்டல்ல தான் இருந்தேன்..அதாவது அஞ்சாவது படிக்கும் போதே அடிச்சி சேத்து விட்டுட்டாங்க..ஹாஸ்டல்க்கு வந்து சேருகிறவர்களுக்கு பின்னால் உள்ள கதை மிகுந்த சுவாரசியமானது..

வீட்ல அடங்காதவன்,சொல் பேச்சு கேக்காத பயல்,உள்ளூரில் சிறந்த கல்வி வாய்க்கப்பெறாதவர்கள்..எல்லோரும் வந்து கூடும் இடம் தான் ஹாஸ்டல்..ஹாஸ்டல் வாழ்க்கையை பற்றி ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு எனக்கு அனுபவம் உண்டு..பத்து வருடங்களுக்கும் மேலாக விடுதியில் தங்கி வளர்ந்தவன் நான்..

என்னை கேட்டால் வீட்ல இருக்கறத விட விடுதி தரும் அனுபவங்கள் சுவையானவை..ஆனால் கெட்டு போவதற்கான வாய்ப்புகள் வீடுகளை  விட விடுதிகளிலேயே அதிகம்.. ஆனாலும்  சுஜாதாவிலிருந்து அப்துல்கலாம்கள் வரை பலரை பெற்றெடுத்த பெருமை விடுதிகளை மட்டுமே சேரும்..
காரணம் இருக்கிறது..வீடுகளில் இருப்பது போல டிவி,ரேடியோ போன்ற பொழுது போக்கு சாதனம் எல்லாம் இங்கு கிடையாது.இங்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு.."புத்தகம்"..வேறு வழியே இல்லை..

சண்டே ஆனால் வாரமலருக்காக நாங்கள் தவம் இருப்போம்..குமுதமும் ஆனந்த விகடனும் தான் எங்களுக்கு குதுகலம் அளிக்கும்..
விடுதியில் இருக்கிறவன் வாழ்க்கை மெஸ்சை சுத்தியே சுழலும்.சப்பாத்திகளுக்காக சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்டது..முட்டைகளுக்காக முட்டி மோதியது..என அத்தனையும் அவ்வளவு சுவாரஸ்யமானவை.. 

நான் ஹொஸ்டல் இல் சேர்ந்த கதை ரொம்ப சுவாரஸ்யமானது..வீட்டுக்கு அடங்காத பிள்ளை நான்...

அப்ப நான் நாலாவது படிச்சிகிட்டு இருந்தேன்.ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்து.. வீட்டு வாசல்ல இருந்தே வீட்டுக்குள்ள பைய்ய விசிரி எரிஞ்சிட்டு போனேன்ன்னா.. வீடு வர  ராத்திரி எட்டு ஒம்போது மணி ஆகும்..  அதுவரைக்கும் ஊரை சுற்றுவது மட்டுமே என் பொழுது போக்கு..
வெளியூர்லேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து எங்க தாத்தா(அம்மாவோட அப்பா) கொஞ்சநாள் எங்க வீட்ல தங்கி இருந்த காலம் அது..

அவருக்கு எட்டு மணிக்கு நியூஸ் பாக்கணும்..எனக்கு வேற சேனல் பாக்கணும்..எங்களுக்குள்ள சண்டை வந்து ரத்த ஆறே ஓடும்.."உனக்கு நியூஸ் பாக்கணும்னா உங்க வீட்ல போய் பாரு..இது எங்க வீடு" - - இது நான்..வாய் ரொம்ப ஜாஸ்தி..

"இவன திருப்பராய்துறைல கொண்டு போய் சேத்தா தான் இவனுக்கு புத்தி வரும்" -- இது அவர்..

திருப்பராய்துறையா? அது எங்க இருக்கு..அங்க என்ன பண்ணுவாங்க நம்மள..அடிப்பாய்ங்களோ!!அடிச்சா சும்மா விட்ட்ருவோமா..என்றவாரெல்லாம் என் மனதில் எண்ண ஓட்டம்..
அவர்கிட்ட திருப்பராய்த்துறை பத்தி கேட்டேன்.."அங்க போனா நல்லா பாடம் சொல்லி தருவாங்க..டெய்லி வடை பாயசத்தோட சாப்பாடு..நல்லா ஜாலியா இருக்கலாம்"..என்றார் அவர்..

அப்படியா? வடை என்றதும் என் வாயிலிருந்து வாட்டர் பால்ல்ஸ் வடிந்ததை அவர் பார்த்திருக்க கூடும்..வடைக்கு ஆசைப்பட்டு வலையில் விழுந்த எலியின் கதையானது என் கதை..
                        ---------அது பற்றி அடுத்த பதிவில் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

2 comments:

அதிஷா said...

நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்க வைத்தி.

Anonymous said...

ஹாஸ்டலில் செய்த ட்யுட்டிகல காமெடியா சொல்ற தெறம உன்ட நரைய இருக்கு. அத பத்தியு வர்ற பதிவுல சொல்லி வாசகர்கள சந்தோசப்படுத்தே ராஜா! =)