Saturday, July 9, 2011

என் ஹாஸ்டல் வாழ்க்கை - 2

நான் திருப்பராய்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் சேர்ந்த கதை ரொம்ப சுவாரஸ்யமானது.முதலில் அந்த ஹாஸ்டல் பற்றி அறிந்து கொண்டால் தான் உங்களுக்கு திஹார் ஜெயிலின் உண்மை முகம் தெரியும்.நான் செத்து போன எங்க பாட்டி மீது ஆணையாக கூறுகிறேன் எந்த பயலையும் போட்டு தள்ளல..


அது ஒரு விசித்திரமான பள்ளி.தமிழகத்திலேயே ஞாயிற்று கிழமை பள்ளி நடத்தும் ஒரே பள்ளி அது தான்.(விசித்திரம் புரிந்துருக்குமே!!)

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகில் இருக்கிறது அந்த ஜெயில் சாரி ஸ்கூல்..காவிரி ஆற்றங்கரை ஓரமாக அமைந்து இருக்கிற வித்யாவன தாய்(அப்டி தான் ஒவ்வொரு ஆண்டுவிழா அன்றும் சொல்வார்கள்)..
காலைல நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுவாங்க..

உடனே போய் பல்லு வழக்கணும்..பேஸ்ட் பிரஷ்லாம் வச்சிக்க கூடாதுனு ஒரு கண்டிஷன் வேற.ஆனா பல் பொடி வச்சிக்கலாம்..பல்லு துலக்கி முடிச்ச கையோட ஸ்டடி வச்சிடுவானுங்க..படிக்கனுமாம்..எல்லா பயலும் தூங்குவானுங்க..

தூங்குனா மிதி உண்டு.டம் டிம் என்று சத்தத்தில் முழிச்சி பாத்தா அடி நமக்கு தான் விழுந்திருக்கும்..இங்கே முக்கியமான கண்டிஷன் யாரும் கையில் பணம் வச்சிக்க கூடாது.பேஸ்ட் பிரஷ் அறவே கூடாது.போட்டுக்க கலர் டிரஸ் வச்சிக்க கூடாது..முக்கியமானது   எல்லோருமே விடுதியில் தான் தங்க வேண்டும்..

போனா போகுதுன்னு மூணு மாசத்துக்கு ஒரு தடவ தீபாவளி பொங்கலுக்கு லீவ் உடுவாங்க.அவ்ளோ தான்.எதாவது தப்பு பண்ணி மாட்டுனா அதுவும் கிடையாது..ஆனா சாப்பாடு விசயத்துல ஒரு பய அடிச்சிக்க முடியாது..
கை குத்தல் அரிசி.தான்..களி மாறியே இருக்கும்..ஒரு உதாரணம்..

ஒரு தடவ பையன பாக்க வந்த அப்பா மத்தியானம் சாப்பாடு சாப்பட வந்துருகாரு..அவருக்கு சாதம் பரிமாரிட்டு சாம்பார் எடுத்துவர உள்ளே போனவங்க வந்து பாத்த அப்ப ஒரே ஆச்சர்யம்.அவர் இலை காலியாக இருந்தது..கேட்டா "பொங்கல் அருமையா இருந்துது பா" என்கிறார்..(அட எரும!!அது சாதம் யா..நல்லா கெலப்பராய்ங்க பீதிய!!)

வாரம் ஆனா சனிக்கிழமை விடுமுறை.சண்டே பள்ளி உண்டே!!ஆங்கிலேய எதிர்ப்பை இப்படி வெளிப்படுத்தராய்ங்கலாம்..முக்கியமான ஒன்று பசங்க தான் கூட்டணும் பெருக்கணும் எல்லாம்..

எந்த திகார் ஜெயிலிலும் இல்லாத வாழ்க்கை..நமக்கு நாமே திட்டம்..பேன் கிடையாது.டிவி கிடையாது.ஏன் மூஞ்சிக்கி பவுடர் கூட போட கூடாது.இப்படிப்பட்ட ஒரு வாழ்கையை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியுமா உங்களால்?

அம்மா அப்பா வருஷத்துக்கு  இரண்டே முறை தான் வந்து பசங்கள பார்க்க முடியும்..சாமியார்களால் நடத்தப்படும் பள்ளி..அம்மா அப்பா வந்து பார்த்தால் பசங்களுக்கு பாசம் வந்து..அம்மா நியாபகம் வந்து அழுவார்கள்..அது கூடாது என்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடு..

இங்கு தான் ஒரு சிங்கம் சிக்கியது..வேற யாரு நான்தே! ஆத்தி..இங்க அடிக்கறது எப்படி னு சொல்லலையே நாலு பேரு தெனற தெனற அடிப்பாய்ங்க..சத்தமே வர கூடாது வந்தா அதுக்கு தனி கவனிப்புகள்..
என்ன மாரி பல பச்சை பிள்ளைகளை இல்லாததும் பொல்லாததும் சொல்லி..சனியன் ஒளிஞ்சா சரி னு.."திருவிழா கடைல புள்ளய தொலைக்கற மாறி" கொண்டாந்து சேத்து விட்டுட்டு அம்மா அப்பா அவர்கள் பாட்டுக்கு போய்டுவாங்க..

இங்கே சேருவது கூட அவ்வளவு லேசுபட்ட காரியம்  அல்ல..என்ட்ரன்ஸ் எழுதணும் பாஸ்.இங்கே சேரவும் முட்டி மோதும் கூட்டங்களை பார்க்க வேண்டுமா?நான் காட்டறேன்..

நான் நுழைவு தேர்வு எழுதும் முன்பே எங்க அப்பா  ஒன்றை  சொல்லி என்னை  தயார் படுத்தி இருந்தார்..அவை பின் வருமாறு

"நம்ம ஊர்ல நல்ல ஸ்கூலலே இல்ல..ஹை ஸ்கூல் ல சேரர பயலாம் ஸ்கூல்லேயே உக்காந்து சிகரெட் குடிப்பனுங்க..தண்ணி அடிப்பானுங்க.கெட்ட வார்த்த பேசுவானுங்க..இந்த நுழைவு தேர்வுல நுழையலனா நீ டீ ஆத்த தான் போகணும்.எனக்கு தெரிஞ்ச டீ கடைல சேத்து விட்டுடுவேன்.."
(அடப்பாவிங்களா..யார் வம்பு தும்புகாச்சும் போயிருப்பேன்!)

இங்கே நடக்கும் நுழைவு தேர்வு எந்த பத்திரிக்கையிலும் வந்திருக்காது..இந்த பள்ளி பற்றி எந்த  செய்தித்தாளிலும் நீங்கள் படித்திருக்க முடியாது..இவர்களுக்கு விளம்பரம் பிடிக்காது..

காரணம்  -- எந்த மலரும் விளம்பரம் செய்வதில்லை..வண்டுகள் தான் நாடி வர வேண்டும்..என்பதாம்

வேறு எங்கும் இல்லாத விசேசம் இங்கு இருக்கிறது..இங்கு சேரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பெரிய பெரிய பணக்காரர்களின் பிள்ளைகள்..

இவர்கள் இங்கு சேர முட்டி மோத காரணம் நிச்சயம் இருக்கிறது..
                                                                                             
-----------அவை அடுத்த பதிவில்.. 

1 comment:

Anonymous said...

இங்கு தான் ஒரு சிங்கம் சிக்கியது..வேற யாரு நான்தே! -- சிங்கம் னு சொன்ன பின்ன அடிக்காம? =)

வித்யாவன தாய் காலைல நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுவாங்க -- தம்பி, உன்ன எழுபினது வித்யாவன தாய் இல்ல. விடிய காலேல ஜாமம் பாத்தவனுங்க. =]