ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் உங்களுக்குமே தொடர்பு இருக்கிறது..நீங்கலுமே கைதுசெய்யப்படவேண்டியவர் தான்..கோவப்படாதீங்க..இந்த கட்டுரையை முழுவதும் படித்துவிட்டு திகார் செல்ல தயார் ஆகுங்கள்..
எனக்கு சமீபகாலமாக பேப்பரில் ஸ்பெக்ட்ரம் ஊழல், அந்த ஊழல் இந்த ஊழல் என்றெல்லாம் பார்க்கும் போது சில கடந்த கால நினைவுகள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்..அந்த நிகழ்வுகள் நடந்த சமயத்தில் பெரிதாக நான் அலட்டிக்கொண்டதே இல்லை.. ஆனால் இப்பொழுதோ அப்படி இல்லை..
அந்த நிகழ்வு...
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..நான் அப்பொழுது பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..எங்கள் வகுப்பு தலைவனுக்கான தேர்தல் நடந்தது..
தேர்தல் என்றால் என்னவோ பெருசா நெனசிடாதீங்க.. வகுப்பாசிரியர் அவர் பாடவேலையின் போது வந்து "தம்பி யாருப்பா கிளாஸ் லீடர் ஆக ஆசை படறீங்க??" அப்டின்னு கேக்கறது தான் எங்க ஸ்கூல்லலாம் தேர்தல்..
முதல்ல வகுப்பாசிரியர் சொன்னதும் எல்லோரும் பண்ணுகிற ஒரு வேலை பின்னாடி திரும்பி பாக்கறது தான்..வேற எதுக்கு..எந்த அடிமை எழுந்திரிக்க போவுதுன்னு பாக்க தான்..
கொஞ்ச நேரம் ஆளாளுக்கு ஒர்த்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துக்குவோம்..ஒரு பயலும் எழுந்திரிக்கல..
தெரியாத்தனமா நான் எழுந்திரிச்சி தொலைச்சிட்டேன்..பசங்கல்லாம் ஒரே சத்தம்..அதுவரைக்கும் நமக்கு போட்டியா ஒருபய இருக்க மாட்டானுங்க..நாம எழுந்திரிச்ச உடனே போட்டிக்கி ஒருத்தன் என்திரிச்சிட்டான்..
உடனே வகுப்பாசிரியர் "யாரெல்லாம் வைத்திக்கு ஆதரவு தர்றீங்களோ..அவங்கல்லாம் கைய தூக்குங்கபா.."னு சொல்ல நம்மள நம்பி எதோ நாலஞ்சி பேர் மட்டும் கை தூக்குனானுங்க..ஒன்ன சொல்ல மறந்துட்டேன்..அப்பல்லாம் கிளாஸ்ல எதாவது பேச்சுபோட்டின்னா நான் தான் கலந்துக்குவேன்..கொஞ்சம் சுமாரா பேசுவேன்..
மொக்கை ஜோக்கா பேசுனாலும் காமெடின்னு நம்புற ஒரு குருப் நமக்கு நண்பர்களானார்கள்..அவனுங்கல்லாம் நமக்கு ஆதரவா கை தூக்குனானுங்க..அப்புரம் அவனுங்கள பாத்து அஞ்சுபேர், அப்புரம் ஒரு அஞ்சுபேர்னு எப்டியோ நமக்கு பெரும்பான்மை கிடைச்சிது..
நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டேன்..(பெரிய அமெரிக்க அதிபர் தேர்தல்)..எனக்கு போட்டியா நின்னவன துணை தலைவனா அறிவிச்சிடானுங்க..எனக்கு ஒரே சந்தோசம்..பார்ரா நம்மளையும் இந்த உலகம் தலைவனா எத்துகுதுன்னு..
எப்படியோ அந்த பாடவேளை முடிந்தது..எல்லோரும் வெற்றிகரமாக படை பரிவாரங்களோடு கான்டீன் நோக்கி புறப்பட்டோம்..என்னுடன் வந்த ஒரு அடிமை வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காம "நாங்கல்லாம் உனக்கு ஒட்டு போட்டு உன்ன கிளாஸ் லீடர் ஆக்குனதுக்கு, நீ கேண்டீன்ல எங்களுக்கு பஜ்ஜி போண்டா வாங்கி தரனும் என்றான்"..
இங்கு தான் நாம் யோசிக்க வேண்டும் நம்ம பொது தேர்தலிலும் இதே தான் நடக்கிறது..நாம் தேர்தலுக்கு முன்னாலேயே அவர்களிடம் பெரிதாக எதிர்பார்க்கிறோம்..தேர்தலில் பணம் கொடுக்கும் முறையை என்னமோ அழகிரியே ரூம் போட்டு யோசித்து கண்டுபிடித்ததாக எண்ணி விட வேண்டாம்..
நாம் நம் வீட்டுக்கு மளிகை சாமான் வர வேண்டும் என்றால் எனக்கு எதாவது நான் தீனி வாங்கிப்பேன் என்று அம்மாவிடம் மூணாம் கிளாஸ் படிக்கும் போது சொன்னதிலிருந்தே துவங்கிய ஒன்று தான்.. இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது..
விளைவு..நீங்கள் உங்கள் தகுதியான பத்து ரூபாய் தீனியை லஞ்சமாக பெறுகிறீர்கள்..உங்கள் ஊர் கவுன்சிலர் பத்தாயிரம் எதிர் பார்க்கிறார்..அமைச்சர் கோடிகளில் எதிர்பார்க்கிறார்..அவ்வளவு தான் தகுதி மாறும்போது எல்லாமுமே மாறுகிறது..லஞ்சம் மட்டும் மாறாமல் அப்படியே!!
எனவே லஞ்சம் மூணாம் கிளாஸ்லையே துவங்கிவிட்டது..நாம் தான் நம்மை மாற்றி கொள்ளவும் நம் தவறை ஒப்புக்கொள்ளவும் தயாராக இருந்ததே இல்லையே..தயாநிதியும்,ராஜாவுமா ஒப்புக்கொள்ள போகிறார்கள்..உங்கள் மகனுக்கு அரசு உத்தியோகம் வாங்கித்தர நினைக்கும் உங்கள் முயற்சி சரியென்றால், கருணாநிதி தன் மகன் அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கி தந்ததும் சரியே..
"சில தவறுகள் இங்கே நியாயப்படுத்தப்படுகிறது.. சில தவறுகள் இங்கே காயப்படுத்தபடுகிறது.."
- பாரதிராஜா
நியாயத்துக்கும் காயத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஸ்பெக்ட்ரம்..இது முடிவு அல்ல..
குறிப்பு: "நான் கருணாநிதியின் கையாள் இல்லை"

4 comments:
execellent comment...
நன்றி நண்பா..தொடர்ந்து நாம் இணைந்து இருப்போம்..
சரியா சொன்னீங்க வைத்தி! சுய ஒழுக்கம் இல்லாத நம்ம எல்லோரும் அவன் ஊழல் பண்ணிட்டான் , இவன் அநியாயம் பண்ணிட்டான்னு கூக்குரல் போடுறோம் ! ரோட்டுல ராங் சைடு வந்துட்டு எதிர்ல வர்றவன திட்டுற நல்லவங்க தான் ஊழல பத்தி ரொம்ப பேசுவாங்க ! நம்ம நாட்டுல உள்ள தமிழனுக்குள்ள ஏற்ற தாழ்வுகளையும் சமூக கொடுமைகளையும் கண்டு எதுவும் சொல்லாம வெளிநாட்டுல உள்ள தமிழனுக்கு "மட்டும் " குரல் கொடுப்பாங்க ! மனசாட்சி இருந்தா ரெண்டையும் பத்தி பேசணும் இல்லியா ! நாம் நம்மளை மாற்றிக்கொள்ளும் வரை எதுவும் மாறாது !!- Bloorockz Ravi
நன்றி நண்பரே
Post a Comment