
அவருக்கு நான் கொடுத்த விளக்கத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..ஓர் ஆண்டுக்கு முன்னர் கல்லூரியை முடித்து வெளியே வந்தவன் நான்..
கல்லூரி மேடையில் இருபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று,பரிசு பெற்ற காரணத்தால் எனக்கு கல்லூரியின் பல்வேறு பாட பிரிவுகளில் பயிலும் மாணவர்களை நண்பர்களாக கிடைக்கும் வாய்ப்பின்னை பெற்றேன்..
நான் ஓராண்டுகள் நாமக்கல் லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவமும் உண்டு..எனக்கு இதனால் பல்வேறு நண்பர்கள் பல வட்டாரங்களில் கிடைத்தார்கள்..
கல்லூரி ஹீரோவாகவே என்னை நான் நினைத்த காலங்கள் உண்டு..எத்தனையோ நண்பர்கள் என்னிடம் பேசும் போது, என்னமோ காதலிகிட்ட சொல்லற மாறி “உனக்காக என் உயிரையே கொடுப்பேன்..நாமல்லாம் அப்டியாடா பழகிட்டோம்,”என்றெலாம் பிட்டு போடுவார்கள்..
இன்று நிலைமையே வேறு.. கல்லூரி முடிந்து அவரவர் மேற்படிப்புக்காக வேறு கல்லூரியில் சேர்ந்து அங்கே நண்பர்களை உருவாக்கி கொண்டார்கள்..நானாக அவர்களுக்கு போன் பேசினால், மெசேஜ் அனுப்பினால் உண்டு..
தினமும் காலையில் தூங்கி எழுந்தால் மெசேஜ்களாலும் மிஸ்ட் கால்களாலும் நிரம்பி வழிகிற என் மொபைல் போனும் என்னை போல வெறுமையாகவே காட்சி அளிக்கிறது..
எனக்கு இப்பொழுது தான் வாழ்கையின் மிக முக்கிய பக்கங்களை எல்லாம் படித்த உணர்வு வருகிறது..நமக்கு எங்கு போனாலும் அங்கு ஒரு நண்பர் தேவைப்படுகிறார்..
கல்லூரியில் நாம் லீவ் என்றால் வகுப்பில் சொல்லவும்,நமக்கு தேர்வு காலங்களில் கூட உட்கார்ந்து படிப்பதற்கும்,படத்திற்கு செல்வதற்கும்,பொழுது போகவில்லை என்றால் அரட்டை அடிப்பதற்கும்..ஒரு நண்பர் எப்பொழுதும் தேவைப்படுகிறார்..
கல்லூரி மாறும் பொழுது இதே தேவைகளுக்காக வேறொரு இடத்தில் நாம் நண்பர்களை உருவாக்கி கொள்ள தயங்குவதே இல்லை..இதில் நீங்களும் நானும் விதி விலக்கல்ல..
தேர்தலில் தோற்ற கலைஞரை போல பழைய நண்பர்கள் படிப்படியாக மறக்கப்படுகிறார்கள்..
லீவு வேண்டும் என்பதற்காக ஒரு கம்பெனியில் இருக்கும் போது ஒரு டீம் லீடரை நண்பராக்கி கொள்ளும் நாம்..வேறு நிறுவனம் மாறும் போது வேறு டீம் லீடரை மாற்ற தயங்கியதே இல்லை..
தேவை மாறும்போது நண்பர்களும் மாறுகிறார்கள்..ஆனால் எப்பொழுதும் நமக்குன்னு ஒரு அடிமை சிக்குகிறார்கள்..நாமும் ஒருவருக்கு அடிமையாக சிக்குகிறோம்..
ஆனால் உண்மையான எதிரி என்று சொன்னாயே..அது என்ன உண்மையான எதிரி..என்று மடக்கினார் என் நண்பர்(அவர் புத்திசாலியாம்)..எதிரியில் உண்மை,போலி என்ற வித்தியாசமெல்லாம் இல்லை..
கல்லூரியில் நம்முடன் ரோட்டில் சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்ட ஒருவன் நம்மை எங்கு எப்பொழுது பார்த்தாலும் கண்டுகொள்வதே இல்லை..பார்த்தும் பார்க்காத மாதிரி போய்விடுகிறான்..
அவன் தான் உண்மையான எதிரி..நம்முடைய நண்பர்களை போல் அவனுக்கு மாற தெரியவில்லை..
"I don’t know the word friend had an end.."
No comments:
Post a Comment