Monday, May 30, 2011

நீயா நானா (29-05-2011)(திருமண வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வருங்கால வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும்) Review

நீயா நானா(29-05-2011) ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சி குறித்த என்னுடைய கருத்துகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..தனக்கு வரப்போகும் வரன் இப்படி தான் இருக்கவேண்டும் என்ற கனவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பது வழக்கம்..

இதை  பற்றி தான்இந்த வார நீயா நானாவில் கோபி அலசினார்.. ஏற்கனவே இந்த தலைப்போடு தொடர்புடைய பல தலைப்புகளில் இதைப்பற்றி அலசி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியும் நமக்கு பல புதிய படிப்பினைகளை கற்று கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்..

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பெண்கள் தரப்பில் பொதுவாக சொல்லப்பட்ட சில கருத்துக்கள் இவை தான்.. தனக்குவரப்போகும் கணவன் தன்னை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும், அதிகம் படித்திருக்க வேண்டும்.. ரொம்ப வெள்ளையா இல்லன்னாலும் பரவாயில்லை.. என்பது போன்ற பொதுவான எதிர்பார்ப்புகளையே  வைத்திருந்தனர்..

வழக்கம்  போல ஆண்கள்.. தங்கள் மனைவி கலராக இருக்க வேண்டும்(இவர் அட்ட கரியா  இருப்பாரு)..பெரிய அளவில் வரதட்சணை எதிர்பார்க்கவில்லை என்றாலும் ஒருத்தர் உண்மை பேசினார்..வேற என்ன அவங்க ஜாதில 100 பௌன் போடுவாங்கலாம்..(நாங்க பாக்க தானே போறோம்)..ஒருத்தர் பொண்ணு கெடச்சா போதும்கரமாறி பேசுனாரு..(ரொம்ப நல்லவர்..வரவேற்கிறேன்)..

மொத்ததுல எல்லோருக்கும்அவங்கவங்க ஜாதிலையே வரன் வேணுமாம்..ஜாதி ஒழியாது..வாழ்க ஜாதியம்.. ஆளாளுக்கு ரொம்ப அதிகமா தான் ஆசைபடரானுங்க.. 

ஒரு  பொண்ணு குருக்கள கட்டிக்க மாட்டேன் னு சொன்னாங்க..பாவம் அது அவர் உத்தியோகம்..இன்னொருதவங்க பிசினஸ்மானே வேணாம் னு சொல்லறாங்க(ஆனா வர போற புருசன்ட தீபாவளி பொங்கலுக்கு பட்டு பொடவ, தங்க நகை கேளுங்க..)

பெண்  வீட்டு காரர்கள் யாரும் பெண்பார்க்கும் படலத்தின் போது தங்கள் பெண்ணை பையனோட பேச அனுமதிக்க தயாராக இல்லை என்பது ஒருவரின் குற்றச்சாட்டின் போதும் கோபி இது சம்பந்தமாக கை உயர்த்த சொன்ன போதும் தெரிந்து கொண்டோம்..(ஸ்கூல் காலேஜ்அ விட கேவலமா இருக்குய்யா..இன்னுமா நீங்க திருந்தல..)

ஏன்னு கேட்டா அந்த பையன்ட பேசுனா அவள் அவனையே கணவனாக நினைத்து விடுவாளாம்..(இன்னுமா இத இந்த உலகம் நம்புது..??)

அப்புறம் எதுக்கு பல வருடம் காதலித்தவனை மிக எளிதாக மறந்து அப்பா அம்மா பாக்கற பையன கல்யாணம் பண்ணிகறாங்க..பீச் பார்க்குகளில் குடும்பம் நடத்தியும் கூட..(Note this point your honer நான் எல்லோரையும் இங்கே சொல்லவில்லை)

ஒருத்தர் பெரிய குண்டா தூக்கி போட்டாரு..பெண் வீட்டார் "கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அம்மா உங்க கூடவே இருப்பங்கலானுலாம் கேகராங்கலாம்".. (பாவிங்களா பொண்ணு குடுகரதுக்கு முன்னாடியே குடும்பத்த பிரிக்கரத பத்தி எவ்ளோ யோசிகரானுங்க..)

இன்னொரு  குரூப் கூட்டு குடும்பம்னா வேனாம்ன்கறாங்க..(குடும்பம் அழிஞ்சி போனதுக்கு இவர்களே காரணம்..இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..).. 

சிறப்பு விருந்தினர் சொன்னது அருமை.."வரன் பற்றிய விசாரனை நலன் விசாரணை போல் இருக்க வேண்டும்...புலன்விசாரணை போல் இருக்க கூடாது.."     அற்புதமான கருத்து..

கோபி சொன்னது தான் உச்ச கட்டம்.. "உலகத்தில் நூறு சதவிதம் உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணுகிற வரன் பிறக்கவில்லை..அப்படியே நீங்கள் உலகிலேயே பெஸ்ட் தம்பதிகளாக இணைந்தாலும்  நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.."

நிம்மதியான வாழ்க்கை  உங்களுக்கு அமைகிற வரனிலோ, நீங்கள் அமைத்து கொள்கிற வரனிலோ இல்லை..அது உங்கள் இரு மனம் புரிந்து கொள்கிற அற்புதமான வாழ்கையில் இருக்கிறது.."கலர் டிவி பரிசு பெற்ற நண்பர் நமக்கு உணர்த்தியது இதை தான்"


















No comments: