Wednesday, June 15, 2011

இலவச லேப்டாப் தேவையா?


தமிழக அரசு இலவச லேப்டாப் திட்டம் பற்றி அறிவித்தவுடனே பலதரப்பிலிருந்தும் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளன..
நான் இந்த திட்டத்தை ஆதரிக்கிறேனா இல்லையா என்பதை கடைசியில் சொல்கிறேன்..
முதலில் இலவச லேப்டாப் சாத்தியமா என்பதை பார்ப்போம்..
நிச்சயம் சாத்தியமே.இங்கே சாத்தியமா இல்லையா என்பது முக்கியமே அல்ல..அதன் தரம் தான் முக்கியம்.நிச்சயமாக தரமான லேப்டாப்பாக இது இருக்குமா என்பது சந்தேகமே..

காரணம் அதிகம் செலவு செய்து கொடுக்கும் அளவுக்கு தமிழக அரசிடம் நிதி இல்லை..குறைவான விலைக்கு ஆடர் பண்ணும் போது தரமும் குறையத்தான் செய்யும்.Batteryயின் தரமும் தான்.

நான் நாற்பதாயிரம் செலவு செய்து வாங்கிய லப்டோப்பே பல முறை செலவு வைத்துவிட்டது..அப்படியிருக்க இவர்கள் ஏனோ தானோ என்று கொடுக்கும் லேப்டாப் ஏகப்பட்ட செலவு வைக்க தான் போகிறது..ஆனால் பாவம் இது இலவச கலர் டிவி போல் அல்ல.

டிவி பளுதாகிவிட்டால் “திருமதி செல்வம் பார்த்தேஆக வேண்டும்” என அப்பாவின் சோற்றில் அம்மா கைவைத்த காரணத்தினால் அது பழுது பார்க்கப்பட்டிருக்கலாம்..ஆனால் லேப்டாப் மகன் கணக்கு..எனவே அப்பாக்கள் செலவுக்கு பணம் தர மாட்டார்கள்..இலவச டிவி இருநூறு ரூபாய் செலவு வைக்கும் என்றால்..இலவச லேப்டாப் இரண்டாயிரம் செலவு வைக்கும்.

எனவே செலவு செய்ய யோசிப்பவர்கள் அதை வந்த விலைக்கு விற்கலாம் அல்லது வீட்டில் ஒரு மூலையில் எறிந்து விடலாம்..
இந்த லேப்டாப்ஐ நம்ம பசங்க எப்படி பயன்படுத்துவார்கள்?..
வழக்கம் போல facebook இல் chat பண்ணுவதற்கும் ஆர்குட்டில் அரட்டை அடிப்பதற்கும்..பிட்டு படம் பார்க்கவும்,திருட்டு விசிடி போட்டு படம் பார்க்கவும் அதிகபட்சம் ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கும்..இன்னும் சில ப்ளஆ  ப்ளஆக்களுக்கும் மட்டுமே பயன்படும் என்பது என் தாழ்மையான கருத்து..இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம்..

இவை எல்லாம் வேண்டுமானால் நெட் connection வேண்டும்..கேபிள் connection கொடுக்க தயங்காத அப்பாக்கள் இதற்கு வெடி வைக்க வாய்ப்புகள் அதிகம்..

ஆனாலும் நான் இந்த இலவச லேப்டாப் திட்டத்தை ஆதரிக்கிறேன்.ஏன் என்றால்..கணினி அவசியம் தேவை என்கிற மாணவர்களுக்கு இது நிச்சயம் பயன்படும். 

Facebook செல்லும் தம்பிகள் நிச்சயம் monster.com செல்வார்கள்..இதனால் தேர்வுகள் இணையமயம் ஆகும்.கல்லூரிக்கு நோட்டு புத்தகம் எடுத்து சென்ற மாணவர்கள் மடிக்கணினி எடுத்து செல்வார்கள்.கல்லூரியே wifi இணைப்பு கொடுக்க முன்வரும்.இணையம் கிராமங்களை சென்றடையும்.

நான் என் தம்பிகளை நம்புகிறேன்..
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் பொசியலாம்..அது விதி..நமக்கு நெல் தான் முக்கியம்..  

No comments: