Friday, January 3, 2014

ஒரு ஊர்ல ஒரு தொழிலதிபராம்!

ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தாராம்.. அவர் எப்பவுமே பயங்கர பிஸி..வீட்டிலேயே இருக்க மாட்டார்.. எப்ப பாத்தாலும் ஆபீஸ்.. எங்காவாது க்ளையண்ட் மீட்டிங்க் அல்லது க்ளப்.. பார்ட்டி என்றே இருப்பார்.. 

ஒரு வேளை வீட்டில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், அவருடைய ப்ரத்யேக ரூமில் உட்கார்ந்து அலுவலக வேலையை பார்ப்பார்! work from home தான்!! 

அவருக்கு ஒரு மனைவி.. ஒரு குழந்தை!! மனைவிக்கு தொழிலதிபர் மீது செம்ம காண்டு.. இந்தாள கல்யாணம் பண்ணிகிட்டு என்னத்த கண்டேன் என்பதாக.. என்னத்த என்ற இடத்தில் 18+ ஐ யோசித்துக்கொள்ளவும்!

”என்னடா ஞாயித்துகிழம கூட அப்பா வீட்டுல இருக்க மாட்டேங்குறே.. நம்ம கூட வெளாட மாட்ராறே” என அந்த குட்டிப்பாப்பாவுக்கும் செம்ம காண்டு!

ஒரு ஞாயிற்றுக்கிழமை அர்ஜண்டா ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருந்த தொழிலதிபரை குழந்தையும் அம்மாவும் கார்னர் செய்துவிட்டார்கள்!! ” ஞாயித்துக்கிழமை கூட அப்டி என்ன ஆபீஸ்” என மனைவி மடக்கி மடக்கி சண்டை போட.. “போப்பா உன்கூட டூக்கா” என பாப்பா தன் பங்குக்கு ஜாயிண்ட் அடித்தது!!

”இப்டியே ஆபீஸ் ஆபீஸ்னு இருந்தீங்கன்னா.. நாளைக்க்கி வயசாகி சோர்ந்து போய் உட்கார்ந்ததும் திரும்பி பாத்தா உங்க கூட யாருமே இருக்க மாட்டாங்க.. அப்ப உக்காந்து ஃபீல் பண்ண வேண்டி தான்.. ஆனா அப்ப ஃபீல் பண்ணாலும் சாய்ந்து அழ தோள் இருக்காது” என மனைவியானவர் சொன்ன போது.. கணவர் ரொம்ப ஃபீல் பண்ணி, மனம் திருந்தி “இனிமே நான் ஆபீஸ் போகப்போறதில்ல..உங்களோடயே வீட்ல இருந்து டைம் ஸ்பெண்ட் பண்ண போறேன்” என தொழிலதிபர் வீட்டிலேயே செட்டிலாகிவிட்டாராம்!!

மனைவிக்கும் குழந்தைக்கும் செம்ம ஹாப்பி.. அந்த நாள் முழுதும் தொழிலதிபரை கொஞ்சி தீர்த்துவிட்டார்கள்! ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஓடியது!!

திங்கள்கிழமையிலிருந்து தொழிலதிபர் நல்ல அப்பாவாக குழந்தையை ஸ்கூலுக்கு கொண்டு போய்விட்டார்! மனைவிக்கு காய்கறி வாங்கிகொடுத்து நாள் முழுதும் கொஞ்சினார்! இப்படியே நாள் ஓடியது!!

மாசக்கடைசி கையை கடிக்கத்துவங்கியது.. ” நீங்க என்னங்க பொறுப்பேயில்லாம வீட்டுல உகாந்து இருக்கீங்க..” என மனைவி கணவன் மீது பாய்ந்தார்..”போப்பா நீ மோசம்.. வீட்ல வெட்டியா உகாந்து இருக்க” என பாப்பாவும் மாரில் எட்டி உதைக்க!! அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு ஆபீஸ் புறப்பட்டார்!!

”இனி எவனாவது நேரம் ஒதுக்கலன்னு சொன்னீங்க.. வாய்லயே மிதிப்பேன்!!” என புதிய சபதமேற்றிருந்தார்!!

No comments: