டிசம்பர் 16. ஞாயிறு.இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில் தனது ஆண் நண்பருடன் மருத்துவக்கல்லூரி மாணவி ஏறினார். அந்த நண்பரை தாக்கி பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்ட 6 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இதில் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்னர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தகவல் ஊடகத்தின் வழியே கசிந்த உடனே நாடு முழுவதும் பற்றி எறிந்தது. பாராளுமன்றத்தில் கடும் அமளி நடந்தது. ஜெயாபச்சன் அழுதார். சோனியாகாந்தி அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆறதல் கூறினார்.
டிரைவர் முகேஷ் சிங்கை போலீஸார் விசாரித்த பொழுது அவர்களுக்கு பாடம் புகட்டவே இவர்கள் அப்படி செய்தார்களாம்.இவர்கள் எந்த கல்லூரியில் லக்சரர்களாக இருந்தார்கள்.அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு.இதற்கிடையே திகார் சிறையில் உள்ள கைதிகள் முகேஷ் சிங்கை அடித்து நொறுக்கி அவரின் சிறுநீர் மற்றும் மலத்தை அவரை சாப்பிட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த கைதிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என நாடு முழுக்க குரலெழுப்புகிறார்கள்.
இது மாதிரியான பிரச்சினைகள் நடக்கும் போது தான் நமக்குள் இருக்கும் நாட்டாமைகள் விழித்துக்கொள்கிறார்கள்.அவர்களுக்கு அர்ஜெண்டாக எதாவது தீர்ப்பு சொல்லியாக வேண்டிய அவசியம் உண்டாகிறது. போகிற போக்கில் அவனை குத்தணும், கொல்லணும் என்பதாக உளறத்துவங்கி விடுகிறார்கள்.
நீங்க சொல்லறத பார்த்தா அவனை மடியில தூக்கி உக்கார வச்சி கொஞ்சணூமா? என்ற கேள்வியே எழும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பதிவாகி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 2.25 லட்சம்.இதில் பதிவு செய்யபடாத வழக்குகள் எத்தனையாக இருக்கும்? இவர்கள் எல்லோருக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் நாடு முழுவதும் பிணக்காடாக காட்சியளிக்கும். போங்க பாஸ். ஆறு பேர் சேர்ந்து ஒரு பொண்ணை கற்பழிக்கறதும். இதுவும் ஒண்ணா? எப்படியோ கற்பழிப்பு கற்பழிப்பு தானே.
ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் பெண்களுக்கெதிரான அத்துமீறல் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிடுவோமா? டெல்லியில் நடப்பதற்கு பதிலாக தமிழகத்தில் நடந்திருந்தால் இன்னேரம் அந்த குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்து என்கவுண்டரில் கொல்லப்பட்டிருப்பார்கள். நாமெல்லாம் ஸ்வீட் எடுத்து கொண்டாடி இருப்போம்.
”இதுவே உங்க அக்காவோ தங்கச்சியாவோ இருந்தா இப்படி பேசுவீங்களா பாஸ்?” என ஆக்ரோசமாக கேள்வி எழுப்புவதற்கு முன்னால் சிலவற்றை யோசியுங்கள்.
கடந்த ஜூலை மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் குவாஹாத்தி போன்ற ஒரு நகரத்தில், பரபரப்பான சாலையில், ஓர் இளம் பெண் இருபதுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் துரத்தித் துரத்தி மானபங்கப் படுத்தப்படு-கிறார். பொதுமக்கள் பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றத்துளி யும் முயற்சிக்காமல், தன்னுடைய நிறுவனத் தைத் தொடர்புகொண்டு, குழுவினரை அழைத்து அணுஅணுவாக அதைப் படம் பிடிக்கிறார். அது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகிறது. இவ்வளவு பேர் பார்க்க நடக்கும் ஒரு சம்பவ இடத்துக்குக் காவல் துறை வந்து சேர அரை மணி நேரம் ஆகிறது. ‘‘என்பணி செய்தி சேகரிப்பது. அதை மட்டும்தான் நான் செய்ய முடியும்’’ என்கிறார் நிருபர். ‘‘குற்றம் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்த நிமிஷமே வர காவல் துறை ஒன்றும் ஏ.டி.எம். அல்ல’’ என்கிறார் மாநிலத் தின் காவல் துறை இயக்குநர்.
இந்த சம்பவத்தை நாம் மறந்துவிடவில்லையா? அதே போல் இன்னும் இரண்டு மாதத்தில் டெல்லி சம்பவத்தையும் மறக்க தான் போகிறீர்கள். இப்பொழுதே மாயன் சொன்னானே. உலகம் அழியலையே என்ற கவலையில் நீங்கள் இருக்கக்கூடும். பாத்ரூம் போகிற கேப்பில் டிவியில் ”பெண் கற்பழிப்பு “ என தலைப்பு செய்தியை பார்த்து “ இவனுங்கள நிக்க வச்சி சுடணும்” என தீர்ப்பு எழுதுகிறவர்கள் தானே நாம்.
பிரச்சினையின் முழுபரிமாணம் தேவையில்லை. அதை வேரோடு பிடுங்கி எறிவது பற்றி அக்கறை இல்லை.அரசியல் வாதிகளை போல நாமும் அரசியல் செய்ய பழகிவிட்டோம். அதன் ஒரு வடிவம் தான் இந்த கொந்தளிப்பு.
”அவர்களுக்கு மரணதண்டனை கொடுங்கள்” என்று போராடத்தெரிந்த நமக்கு “எங்களுக்கு பாலியல் கல்வி கொடுங்கள்” என போராடத்தெரியாதது தான் நம் பலவீனம். காரணம் பாலியல் கல்வி என்றாலே முதலிரவு அறையில் பொண்டாட்டியிடம் எப்படி உடலுறவு வைத்துக்கொள்வது என படம் வரைந்து பாகம் குறித்து சொல்லித்தருவார்களாயிருக்கும் என்ற நம்முடைய கேணத்தனமான கற்பனை.இந்த பலவீனத்தை போக்குவது பற்றி நமக்கு அக்கறையில்லை.
இது மாதிரியான ஜூஜிலிப்பா கோரிக்கையை முன்னிறுத்தி போராடினால் ஊர்ல நம்மள ஒரு பயலும் மதிக்க மாட்டான் என்ற நம்பிக்கை. அரசியல் வாதிகளின் கபடத்தனமான கண்ணீரையும் ஆக்ரோசமான மேடை பேச்சுக்களையும் நம்பி வீணாய் போகிறோம் என்பது நமக்கும் தெரியும். இலங்கையில் அத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், காஷ்மீரில் தினம் தினம் நம் ராணுவம் நடத்தும் பாலியல் ஒத்திகையின் போதும் வராத கண்ணீர் ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்கும் போது வருகிறதென்றால் அதற்கு பெயர் கண்ணீரல்ல. கானல்நீர்
அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்டபோது சொன்னீர்களே.. இப்படி பண்ணாதான் தப்பு குறையும் என்று. அவனை தூக்கில் போட்டு இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. குறைந்ததா?
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் எதையுமே புரிந்துகொள்ள திராணி அற்றவர்களாயிருப்பார்கள் என்பது நம் விசயத்தில் உண்மைதானே.

No comments:
Post a Comment