
ஒரு முறை என் பணக்கார நண்பன் ஒருவனின் அப்பாவிடம் பேசும் பொழுது அவர் சொன்னது இதைத்தான் "நம்முடைய பணத்தை அனுபவமாக மாற்றுவதற்கு தான் நாம் சம்பாதிக்க வேண்டும்" என்றார்..
நான் அப்பொழுது எட்டாவது படித்து கொண்டு இருந்தேன்."சார் புரியலை" என்றேன்.
"இப்ப புரியாதுபா..நீ சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது புரியணும்கரதுக்காக தான் இதை சொன்னேன்" என்றார்.
"போங்க அங்கிள்.நீங்க வேற..அதுக்கு இன்னும் பத்து வருசமாவது இருக்கும்.அதுக்குள்ள நீங்க சொன்னதே மறந்து போயிடும்" என்றேன்.
"சரி சிம்பிள்ஆ சொல்றேன்.நாம சம்பாதிக்கறத அனுபவிச்சிட்டு சாகணும்.போதுமா" என்றார்.
அப்பொழுதும் அவர் சொன்னதன் அர்த்தம் முழுமையாக புரியவில்லை.நான் அவரிடம் மேலும் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன்.
ஆனால் இன்று கார்பரேட் உலகுக்குள் வந்த பின் அவர் சொன்னதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்திருக்கிறது.
முதலில் எனக்கு தெரிந்தவர் பத்தி இங்க சொல்லணும்.பதினேழு வயதிலேயே தன் தந்தையை இழந்தவர்.சேலத்தில் ஏதோ சின்ன சின்ன வேலைகள் பார்த்து வந்தவர்.பிறகு தன் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி சென்னை வந்தார்.
அப்படி இப்படி கஷ்டப்பட்டு பேங்க் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த அவர்.இன்று ஒரு கோடி ருபாய் மதிப்புள்ள வீட்டை தன் சொத்தாக விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் அவர் சம்பாதித்ததை ஒரு நாளும் அனுபவித்ததே இல்லை.வெயில்ல வெளில போனா ஒரு ஜூஸ் குடிக்க மாட்டார்.இளநீர் குடிக்க மாட்டார்.ஏன் ஆட்டோ ல கூட போக மாட்டார்.அவர் போன வெளியூர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் தமிழ்நாட்டில் மட்டும்.
அறை எண் 305 ல் கடவுள் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியரை பார்த்து கேட்பார் "சார் என்னிக்காவது எதாவது ஒரு ஊருக்கு தனியா பஸ் எடுத்துட்டு போய் அந்த ஊர்ல இருக்கற கண்ணுக்கு தெரியாத நாலு ஏழைங்களுக்கு சாப்பாடு போட்டுருகீங்களா?" என்று கேட்பார்.
இவை எல்லாமே ஒரு சுவாரஸ்யமான அனுபவங்கள்.
ஒருமுறை திருச்சியில் நான் மேன்சன்னில் தங்கி இருந்த போது நானும் ரூம்நண்பரும் சேர்ந்து உப்புமா பண்ணலாம் னு பிளான் பண்ணோம்.அரைகிலோ ரவை வாங்கி தண்ணி ஊத்தி, தக்காளி,வெங்காயம்,மிளகாலாம் போட்டு,காரபொடி லாம் போட்டு பண்ணோம்.கமகம னு வாசனைலாம் வந்துது.
ஆனா பாருங்க எல்லாரும் பண்ற அதே தப்ப தான் நாங்களும் பண்ணோம்.உப்புமால உப்பு இல்லை.
நண்பர் சொன்னார் "போடா வெண்ண..முப்பத்தஞ்சி ரூபா வேஸ்ட் டா".
நான் இதைத்தான் சொன்னேன் "இப்பொழுது கிடைத்த இந்த அனுபவத்தை வேறு எந்த முத்தஞ்சி ரூபாயும் நிறைவு செய்ய முடியாது" என்று நிச்சயமாக.
ஆனால் பண்பாக வளர வேண்டும் என்று எண்ணியே சேர்க்கபட்ட அந்த பணக்கார நண்பர்களை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எல்லோருக்கும் ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருத்தது.ஒவ்வொருவரும் தண்ணி,சிகரெட் என்று மாறி இருந்தார்கள்.ரொம்ப வேதனையாக இருந்தது.
No comments:
Post a Comment