உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் கூட தேர்வாகாமல் ஒவ்வொரு முறையும் நம் இந்திய அணி திரும்பி விடுவது ஏன்?பதில் சொல்கிறார் ஒரு தமிழக கால்பந்து வீரர்.
ஒவ்வொரு முறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான அறிவிப்பு வெளியாகும் போதும் தேர்வாகும் அணியில் நம்ம அணி இருக்கிறதா என ஆர்வத்துடன் தேடாத இந்தியன் இருக்கவே முடியாது.இரண்டு முறை கிரிக்கெட்டில் உலககோப்பையை வென்றுவிட்டோம் ஒலிம்பிக் பதக்கமும் பார்த்து விட்டோம்.உலககோப்பைகால்பந்தில் மட்டும் தகுதிச் சுற்றிலேயே திரும்பி விடுகிறோம..
ஏன் ஏன் ஏன்?
இதற்கு பதில் சொல்கிறார் கால்பந்து வீரர் மோகன்ராஜ்.பல்வேறு வெளிநாடுகளில் சென்று விளையாடிய அனுபவமுள்ள இவர்,
இன்று இந்திய கால்பந்து அணியில் விளையாடி வருபவர்.முதலில் இவர் பற்றி ஒரு சிறு அறிமுகம்.நாமக்கல் பக்கத்தில் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன் ராஜ் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.அம்மாவும் விவசாயம் தான்.இரண்டு அக்கா.மாமா தான் இவருடைய கால்பந்து ஆர்வத்துக்கு தோள் கொடுத்தவர்.
முதலில் தெருவோரத்தில் தான் துவங்கியது இவர் விளையாட்டு.பிறகு மதுரையில் இருக்கும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான உடற்தேர்வில் தேர்வானார்.
"முதல்ல இலவசமா சாப்பாடு கிடைக்குது,தங்க இடமும் தர்றாங்க.படிக்க அப்பப்ப ஆயிரம் ஐநூறு மட்டும் செலவு செய்தால் போதும் என எண்ணி தான் இங்க சேர்ந்தேன்.காரணம் வீட்ல வறுமை.மாமா தான் உன்னால முடியும்..நல்லா பண்ணுவன்னு சொல்லிகிட்டே இருப்பார்.இங்க சேர்ந்ததும் எல்லாமே மாறிடுச்சி" என்கிறார்.
2007 ஆம் ஆண்டு ஜூனியர் இந்தியா டீம் காப்டனாக இருந்தவர்.. "நான் மாநில, மாவட்ட அளவில் நடந்த எந்த போட்டியிலும் ஜெயிச்சிலாம் மேல வரல பாஸ்.நேராவே இந்தியா டீமுக்கு தேர்வாகிட்டேன்.முதல் முதல்ல இந்தியா லீக் போட்டில தான் விளையாடினேன்" என்கிறார்..
காரணம் ஆரம்பத்துல இவரை எந்த உள்ளூர் விளையாட்டு போட்டியிலும் தேர்ந்தெடுக்கவில்லை.மாநில மாவட்ட அளவிலும் தேர்ந்தெடுக்க படவில்லை.இன்று கூட தமிழ்நாடு கால்பந்து ஆணையத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவர் எப்படி இருப்பார் என்பதே தெரியாது..
சில கிளப்களில் விளையாடிய பிறகு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
"நாம இன்னும் உலக கோப்பைக்கு போகாததுக்கு காரணம் இங்க புட்பால் விளையாடினா வேலை கிடைக்காது.பத்து வருடத்துக்கு முன்னாடியே அரசு வேலையில் இட ஒதுக்கீட்டை நிறுத்திட்டாங்க.ஏதாவது கிளப்ல விளையாடி சம்பாதிச்சா தான் உண்டு..மத்தபடி நிறைய சம்பாதிக்க இந்த விளையாட்டுலாம் ஒத்து வராது" என்கிறார்.
"கொஞ்சநாள் முன்னாடி போர்ச்சுகல்லில் இருக்கும் ஸ்போர்டிங் லிஸ்பெர்க் என்னும் விளையாட்டு பயிற்சி மையத்துக்கு சென்றிருந்தேன்.அங்க தான் ரொனால்டோ,நானி இவங்கல்லாம் சின்ன வயதில் விளையாட்டு பயிற்சி எடுத்து கிட்டாங்க.அங்கல்லாம் மூணு நாலு வயசுலேயே இந்த பயிற்சி மையத்துக்கு கொண்டு வந்து விட்டுடுவாங்க.
அந்த பசங்களுக்கு முதல்ல கால்பந்து மேல ஆர்வத்த உண்டாக்குவாங்க.பத்து பன்னிரண்டு வயசுக்குள்ள அவங்களுக்கு கால்பந்த்தின் அத்தனை நுணுக்கங்களும் அத்துபடி ஆகிடும்.எனக்கு இருபத்து மூன்று வயதில் கிடைத்த வாய்ப்பு அவங்களுக்கு அங்கே வெறும் மூணு வயசுலேயே கிடைக்குது."என்றவர்.
"இங்க நம்ம ஊர்ல தொண்ணூறு சதவீத பள்ளிகளில் கிரவுண்ட்டே இல்லை.அந்த விளையாட்டு பயிற்சி மையத்துல ஏழு க்ராவுண்டுகள் இருக்கு.அங்க நான் ஒரு மாதம் பயிற்சி பெற்றேன்.உள்ளே நீச்சல் குளம்,உடற்பயிற்சி மையம்.நமக்கு அடிபட்டா பாத்துக்க மருத்துவர்கள்,பயிற்சியாளர்கள் என சகல வசதியும் இருக்கு"
"நாம புட்பால்ல மிகவும் பின்தங்கிய நிலைல தான் இருக்கோம்.அவங்க பயிற்சியாளர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு.நிறைய தொழில்நுட்பம் பயன்படுத்தறாங்க.ஒரே மாசத்துல பயிற்சி மூலமா நமக்கு கால்பந்துக்கு தேவையான பிட்னெஸ் கொண்டு வருவது எப்படி என்பது பற்றி எல்லாம் கற்று கொடுக்கிறார்கள்."
"நான் நிறைய நாடுகளுக்கு சென்று விளையாடி இருக்கிறேன்.ஒரு முறை துபாய் சென்ற பொழுது நம்ம இந்திய அணி அங்கே இருக்கும் இரண்டாம் தர அணியோடு விளையாடும் நிலை தான் இங்கே இருக்கு.காரணம் அங்கே இரண்டாம் தர அணியே அவ்வளவு சிறப்பா விளையாடறாங்க.
முதலில் நம்ம ஊர் பசங்களுக்கு பத்தாவது படிப்பு முடியும் பொழுது அது வரை விளையாடிய விளையாட்டை விட்டுட்டு தான் பதினோராம் வகுப்பே வர்றாங்க.கிராமத்துல இருந்து வர்ற மாணவர்களுக்கு அடுத்ததா யார போய் பாக்கணும் என்ன பண்ணனும் என்பதே தெரியாது.
"எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் எல்லாம் என்னை விட ரொம்ப நல்லா விளையாடியவர்கள் எல்லாம் ஒரு கட்டத்துல கிடைச்ச வேலைல போய் ஒட்டிகிட்டாங்க.புட்பால் ஏழைகளுக்கான விளையாட்டு.ஒரு பந்தும் ஷு வும் இருந்தா யார் வேணும்னாலும் விளையாடலாம்.இந்திய புட்பால் அணி கேப்டன் பைச்சூன் பூட்டே கூட ஊறுகாய் விற்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர் தான்."என்றவர்.
இங்கே கிரிக்கெட் டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் கால்பங்கு கொடுத்தால் கூட கால்பந்து எங்கேயோ போய்விடும்.இதை நினைக்கும் பொழுதெல்லாம் இந்திய மீடியாக்கள் மீது கோபம் தான் வருகிறது. பதினேழு வருடமாக கால்பந்தில் இருக்கும் என் நண்பர்கள் சம்பாதிக்க முடியாததை மூன்று மாத ஐபிஎல் இல் சம்பாதிக்கிறார்கள்.
"அவ்வளவு வறுமையிலும் சமாளித்து வந்திருக்கிறீர்களே.. நீங்களும் உங்கள் நண்பர்கள் போல எதாவது வேலை தேடி இருக்கலாமே" என்றால் "கனவுக்காக வாழணும் பாஸ்.எனக்கு உலககோப்பை கால்பந்தில் ஆடணும் அது தான் கனவு" என்கிறார் நம்பிக்கையுடன்..
(நன்றி : புதியதலைமுறை )

1 comment:
இந்திய கிறிகற் பல விளையாட்டுக்களை முழுங்கி வளர்ந்து விட்டது:
Post a Comment