
என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை..நான் புதியதலைமுறையின் மூலம் பத்திரிக்கையாளன் ஆனேன் என்பதை..ஜூனியர் விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்துக்கு இரண்டு முறை விண்ணப்பித்து வெற்றி வாய்ப்பை இழந்தவன் நான்..
(குறிப்பு:முதல் சுற்றுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை)
புதிய தலைமுறை மாணவ பத்திரிகையாளர் திட்டம் 2010ஆம் ஆண்டு அறிவிக்க பட்ட போது அதில் பங்குகொள்ளும் தகுதிகூட எனக்கு இல்லை..
ஆச்சரியமான விஷயம் இதுவரை நான் எழுதிய எந்த கவிதை,கட்டுரை,கதையும் எந்த நாளிதழிலோ,வார,மாத இதழ்களிலோ வந்தது கூட இல்லை.ஏன் நான் எழுதிய வாசகர் கடிதம் கூட பிரசுரம் ஆனதில்லை...
ஒரே ஒரு முறை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கட்டுரைபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன் (அதுவும் இரண்டே பேர் கலந்துகொண்டதில்..என்று யாரும் கலாய்க்க வேண்டாம்..அது 30பேர் கலந்துகொண்ட போட்டி)
இது மட்டுமே என் எழுத்துக்கு இது வரை கிடைத்த வெற்றி..நான் நன்றாக எழுதுவேன் என்ற நம்பிக்கை அந்த பரிசு வாங்கும் வரை எனக்கு இல்லை.
புதியதலைமுறையில் பயிற்சி பத்திரிகையாளருக்கான விண்ணப்பம் வெளியாகி நான் அதற்கு விண்ணப்பித்த போது.. என் அம்மா “உன்ன விட ரொம்ப நல்லா எழுதரவங்கல்லாம் இதுல கலந்துக்குவாங்க..அவங்களலாம் விட நீ நல்லா எழுதிடுவையா” என்று தர்க்கம் பண்ணினார்.. நல்ல சகுனம்.ஆனா நாம என்னிக்கி அம்மா அப்பா பேச்சலாம் கேட்ருக்கோம்..
ஆனா முதல்சுற்றில் வெற்றி பெற்றேன்..இரண்டாம் கட்ட தேர்வில் மனதுக்கு தோன்றியதை எல்லாம் கட்டுரையில் எழுதிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்.
அடுத்து நேர்முக தேர்வு..
நேர்முக தேர்வுக்கான கடிதமே எனக்கு வரவில்லை.போன் பண்ணேன்..”அதனால் என்ன?.. சொன்ன தேதிக்கு ஆபீஸ்கு வந்து கலந்துகொள்ளுங்கள்” என்றது போனை எடுத்த குரல்..9 மணிக்கு நேர்முக தேர்வாம்..ஆனால் பாருங்கள் நேர்முக தேர்வு நடந்த அன்று நான் இரவு நேர பணி முடித்து காலை வந்து அலாரம் வைத்துவிட்டு குட்டி தூக்கம் போட்டேன்..
ஆனால் என் அதிர்ஷ்டம் நான் வைத்த அலாரம் அடிக்கவே இல்லை நானே 10 மணிக்கு தான் எழுந்தேன்..பிறகு அவசர அவசரமாக ஆபீஸ்கு போன் பண்ணி..11.30க்கு நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன்..நல்லவேலை நிறைய பேருக்கு ஒரு மணிக்கு நேர்முக தேர்வு என்று கேள்விபட்டேன்.
நேர்முக தேர்விலும் எனக்கு மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசினேன்.ஆனால் தேர்வாகி விட்டேன்.
இரண்டு நாள் பயிற்சி நடந்தது..அதிஷா,யுவகிருஷ்ணா,மாலன்,பத்ரி சேஷாத்ரி போன்ற பலரை பார்த்தேன்.
கம்பெனிஇல் பொழுது போகாததால் சமீப காலமாக தான் வலைத்தளத்தில் அதிஷா,யுவகிருஷ்ணா தளங்களை மேய்ந்தேன்.
அதிஷாவின் சமீப பதிவுகளை பற்றி, குறிப்பாக எனக்கு பிடித்த “மதில் மேல் காமம்”,”சம கால பிட்டுகள்”, “ரஜினி என்னும் அசுரன்” ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்..
எங்கள் கம்பெனிஇல் யுவகிருஷ்ணா தளத்தை பிளாக் செய்துவிட்டதால் அவர் பதிவுகளை அதிகம் படித்ததில்லை.ஆனாலும் புதிய தலைமுறையில் அவர் எழுதிய அணைத்து கட்டுரைகளையும் படித்து இருக்கிறேன். இப்பொழுது தான் அவர் வலை தளம் பார்வை இட ஆரம்பித்து இருக்கிறேன்..
புதிய தலைமுறை வழங்கிய பயிற்சி மிக அற்புதமாக இருந்தது.என் எழுத்து நடையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை முதல் நாள் பயிற்சி முடிந்தவுடனே எடுத்து விட்டேன்..நிறைய கற்றுகொண்டேன்.பேட்டி எப்படி எடுப்பது..எழுதுவது எப்படி என்பதிலிருந்து நிறைய..
முக்கியமாக நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.புதிய தலைமுறை உபசரித்த விதம் மிகவும் பிடித்திருந்தது.பயிற்சி நடந்த இடத்திற்கு முதல் நாள் நான் வந்த போது என்னை பார்த்தவுடனே “தம்பிக்கு ஒரு டீ சொல்லு” என்றார் எடிட்டர்..ரொம்ப பெரிய சந்தோசம்.(ஆனால் கடைசிவரை டீ வர வில்லை).
முக்கியமாக ஒரு விஷயம்.என் போட்டோ இந்தவார புதிய தலைமுறையில் வந்திருக்கிறது..பாருங்கள்.அதில் அழகாக இருப்பேன்(சிரிக்க வேண்டாம்)
இரண்டாம் நாள் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி வந்திருந்தார்.அவரிடம் ஒரு கேள்வி கேட்டுவிட்டேன்..
“பத்தே நாளில் oracle என்று சமீப காலமாக கணினி தொடர்பாக தமிழில் வருகிற புத்தகங்கள் தரமானதாக இல்லையே” என்றேன்..
“தரமானவர்கள் எழுதாததால்” என்றார் ஒரே வரியில்..
மொத்தத்தில் புதிய தலைமுறை நடத்திய பயிற்சி முடிந்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம் ஒன்று தான்..
“மிக சரியான இடத்தில் தான் இருக்கிறேன்”
7 comments:
congrats vaithee
நன்றி யுவா..
/////என் போட்டோ இந்தவார புதிய தலைமுறையில் வந்திருக்கிறது..////
வாழ்த்தக்கள் சகோதரம் தொடர்ந்து முன்னேறுங்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
சகொதரம் word verification எடுத்து விட்டால கருத்திடுவொருக்கு இலகுவானதாய் இருக்குமே....
நன்றி நண்பரே..இப்பொழுது word verificationஐ எடுத்துவிட்டேன்..
சகோதரம் என்று ஒரு சொல் தமிழில் இல்லை. நீங்கள் எண்ணுவது சகோதரத்துவம் ஆகும். =)
1000 தடவை வாழ்த்துகள்......
இல்லை..இல்லை... 10000000000000000000 தடவை வாழ்த்துகள்!
Post a Comment