Saturday, May 14, 2011

வானம் - திரை விமர்சனம்(Review)

காதலுக்காக எதையும் செய்ய துணியும் பையனாக "எவண்டி உன்ன பெத்தான்.." என்று ஆரம்பத்தில் ரோமன்டிகாக கதையை நகர்தினாலும் படத்தின் இறுதி வரை கதை ஓட்டத்தை இயக்குனர் கிரீஸ் மிக சரியாகவே நகர்த்தி இருக்கிறார்..

அழகான  பெரிய பணக்கார புள்ளையா பாத்து கரெக்ட் பண்ணி செட்டில் ஆகி விட வேண்டும் என்ற மிக உயரிய லட்சியத்தை கொண்டிருக்கிறார் சிம்பு

மிகப்பெரிய கிடாரிஸ்ட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு போட்டியில் பங்கு பெற சென்னை நோக்கி வருகிறது பரத் தலைமையிலான ஒரு குருப்..

தன் மகன் பாண்டியை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன் கிட்னியை நாற்பதாயிரதிற்கு விற்க துணியும் ஒரு தாய்..

தன்  தம்பியை இழந்து..அவனை தேடிசென்னை வரும் அப்பாவி இஸ்லாமியனாக பிரகாஷ்ராஜ்..

விபச்சாரியாக களம் இறங்கும் அழகு அனுஷ்கா..

இவர்கள்  எல்லோரும் எப்படி ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை..

சிம்பு  தன் யதார்த்தமான நடிப்பை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்..வாங்கற சம்பளத்துக்கு அதிகமாக நடிக்கும் வழக்கமான நடிப்பு அவரிடம் இந்த படத்தில் இல்லை.. மற்ற எல்லா கதாப்பதிரங்களுமே தங்கள் பகுதியை மிகச்சிறந்த நடிப்பின் மூலம் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்கள்..

இயக்குனர்  கிரீஸ் நம்மை ஒரு காட்சியில் அழவைத்து அடுத்த ஷாட்டில் சிரிக்க வைக்கும் மிக நுட்பமான திறனை பயன்படுத்தி இருக்கிறார்..


உதாரணத்திற்கு சிம்பு ஒரு காட்சியில் பையன் படிப்பிற்காக கிட்னி விற்கும் அம்மாவிடம் திருடும் போது அந்த அம்மாவின் தவிப்பையும், சிம்பு அதை உணர்ந்து அந்த பணத்தை திருப்பி கொடுக்கும், அந்த காட்சியில் நம்மை அழ வைக்கிறார்.. ஆனால் அடுத்த ஷாட்டில் சிம்பு அங்கேஇருக்கும் குழந்தையிடம் விளையாடும் போது நம்மை சிரிக்க வைக்கிறார்..

எல்லா முஸ்லிமும் தீவிரவாதி அல்ல என்பதை பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் சொல்லுகிறது..

யுவன்ஷங்கர் ராஜா எவண்டி உன்ன பெதான் பாடலில் நம்மை ஆட வைக்கிறார்.. ஆனால் "தெய்வம் வாழ்வது எங்கே..தவறுகளை உணரும் போது அங்கே" என கிளைமாக்ஸ்இல் எல்லோரையும் அழ வைக்கும் தன் இசை ஆற்றலை ஸ்க்ரீனுக்கு ஸ்க்ரீன் பயன் படுத்தி நம்மை புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்..

"மனிதன் போலி நோட்டை உருவாக்குகிறான்..நோட்டு போலி மனிதனை உருவாக்குகிறது" வசனம் மிக அருமை..

மொத்தத்தில் வானம் - "தொட முடியாத உயரம தான்" என்பதை இப்படம் முடிந்தவுடன் நம்மை உணர வைக்கிறது..

தமிழ் சினிமா தன் அடுத்த தளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.. 














No comments: