Sunday, May 22, 2011

ப்ளீஸ் இந்த புத்தகத்ததை வாங்காதீங்க Review


புத்தகத்தின் பெயரே நம்மை வாங்க தூண்டுகிறது..நாமாளுங்கள எதையாவது பண்ணாதனு சொன்னா.. அத தான் பண்ணுவாங்க.. இது தான் உளவியல்.. இதை மிக சரியாக தன் புத்தகத்தின் தலைப்பில் பயன்படுத்தி இருக்கிறார் கோபிநாத்..

இந்த புத்தகத்தின் பெயர் காரணத்தை இவர் கூறும் விதம் மிக அருமை.. இந்த புத்தகத்தை படிக்கும் போது கோபிநாத்தே நம் அருகில் உட்கார்ந்து பேசுவது போல உள்ளது..

"கணக்கு பெரிதாகும் போது நமக்கு ஒரு calculator தேவைப்படுகிறது.. இது எழுத்து calculator" என்ற முகவுரை அருமை..

வாழ்க்கையை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதே நம் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கிறது என்பதை மிக சிறந்த உதாரணங்களுடன் மிக அருமையான எழுத்து நடை மூலம் சொல்லி இருக்கிறார்..

"சந்தோசத்தை தனக்குள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டு இருக்க மாட்டான்.." என்ற வரி அருமை..

"மூட்டை தூக்குபவன் எத்தனை மூட்டை தூக்க வேண்டும் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர.. மூட்டை தூக்குவதால் ஏற்படும் வலியை பார்க்க கூடாது" என்பது போன்ற வரிகாளால் பல இடங்களில் நம்மை யோசிக்க வைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் புதிதாக படிப்பதை போன்ற உணர்வே ஏற்படுகிறது.. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு வித சிந்தனையை நமக்குள் தொடர்ந்து இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது.. கோபிநாத் இந்த புத்தகத்தின் மூலம் தன்னால் மிக சிறப்பாக எழுதவும் முடியும் என நிரூபித்து இருக்கிறார்...

மனதுக்கு இருக்கும் அற்புதமான சக்தி பற்றி இவர் கூறும் தகவல் பல சமயங்களில் நான் உணர்ந்ததே...இந்தியன் தொடர்ந்து அடிமையாக வேலை செய்வதை பற்றி கூறி சொந்தமாக பிசினஸ் செய்ய நம்மை தூண்டுகிறார்..

மொத்தத்தில் கோபிநாத் இந்த புத்தகத்தில் புதிதாக எதையும் சொல்ல வில்லை.. புதிய விதத்தில் சொல்லி இருக்கிறார்.. இந்த புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை தாண்டி இன்னும் தொடர்ந்து விற்பனை ஆகிகொண்டிருப்பதே கோபிநாத் எழுத்து இமயம் நோக்கி நகர்கிறார் என்பதை உணர்த்துகிறது...

"தமிழுக்கு ஒரு சிறந்த தன்னம்பிக்கை எழுத்தாளர் கிடைத்துவிட்டார்.." வாழ்த்துக்கள் கோபி..




  

 








No comments: