Friday, October 7, 2011

காதலே உன் விலை என்ன?

அவள் அழகாக இருந்ததால்
 எனக்கு தங்கையானாள்
 - - - - நவீன கவிதை 

“அவளுக்கு காதலே பிடிக்காதாம்.வேணாம்டா மாப்புள.ஊர்ல புள்ளைங்களுக்கா பஞ்சம்.நாம பாக்கற பொண்ண விட நம்மள பாக்கற பொண்ண பாத்தா தான் டா லவ் செட் ஆகும்”..என்று என் நண்பனிடம் சொன்னேன்.

அவன் என் உயிர் நண்பன்லாம் கிடையாது.ஆனால் நண்பன் அவ்வளவு தான்.எதையும் கேக்கற மனநிலையில் அவன் இல்லை.என் நண்பன் பெயர் ரமேஸ்(வழக்கம் போல் பெயர் மாற்ற பட்டுள்ளது).நல்ல கலரா இருப்பான்.அவங்க அப்பா அரசு டெண்டரில் ரோடு போடும் பெரிய பார்ட்டி.எனவே பணத்துக்கு பஞ்சம் இல்லை.அவன் எப்பொழுதும் ஆயிரங்களில் புரளுவான்.

இன்றைய கல்லூரி பசங்களின் status சிம்பல்களில் ஒன்று “எனக்கு ஆள் இருக்கு என்பதே”.பொண்ணுங்களும் இதே ரகம் தான்.”என்னை காலேஜ்ல எத்தன பேர் சுத்தி வர்றாங்க தெரியுமா?” என்று சொல்லும் போது அவர்கள் முகத்தில் தெரியும் பெருமிதம், கோல்ட் மெடல் வாங்கும் போது கூட இருக்காது.


அந்த பொண்ணை பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும்.அவளுக்கு அப்பா இல்லை.அம்மா கூலி வேலை.மாமா தான் படிக்க வைக்கிறார்.அவள் திரிசா மாதிரிலாம் இருக்க மாட்டாள்.ஆனால் அவனுக்கு அவள் தான் திரிஷா.நான் அப்படி சொன்னதற்கு அவனது reply… “மாமா..எந்த பொண்ணு லவ்வே புடிக்காதுன்னு சொல்லுதோ,அத நம்மள லவ் பண்ண வைக்கறதுல தான் தான்டா கிக்கே இருக்கு”.என்று சொல்லி வெறித்தனமாக களம் இறங்கினான்.

ஒருவாரம் இருக்கும்.பொழுதுக்கும் செல்லும் கையுமாவே இருந்தான்.”என்னடா” என்ற போது..”ஒரு பத்து நிமிஷம் இரு மச்சி, மெசேஜ் அனுப்பி முடிச்சதும் மேட்டர சொல்றேன் என்றான்”.இது வழக்கம் தான்.அப்பலாம் நாங்க மொரட்டு தனமாக மெசேஜ் அனுப்புவோம்.

மேட்டர்ஐ விசாரித்தால், அவன் அந்த பொண்ணு நம்பர்ஐ வாங்கிட்டானாம்.எப்படிடான்னு கேட்டதுக்கு, “டே எல்லா பொண்ணுங்களுமே, எனக்கு காதலே புடிக்காது, அம்மா திட்டுவாங்க, அப்பாக்கு துரோகம் பண்ண மாட்டேன்,எங்க வீட்டு ஆட்டுக்குட்டி அழுவும்ன்னு  ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க.எல்லாம் நம்ம கைல தான் இருக்கு”.என்று ஞானோபதேசம் அளித்தான்.(கொடுமைடா)

ஆனால் அவன் சொல்வது உண்மை தான்.நான் “கிராமத்து காதலும் நகரத்து காதலும்” என்பது தொடர்பாக நிறைய பேரிடம் பேச்சு கொடுத்ததில் இது உண்மை என்று தான் தோன்றியது.

அதன் பிறகு அவன் பொழுதுக்கும் போன் தான் பேசுவான்.vodafone ல ஒரு ஆபர் இருக்கு 51 ரூபாய்க்கு கார்டு போட்டால் எட்டரை மணிநேரம் addon number உடன் இலவசமாக நம்ம பேசலாம்.ஆனா இவிங்க எப்படி பேசுவானுங்க தெரியுமா? “ம்ம் சொல்லு,சாப்ட்டியா, அப்பொரம்,என்ன பண்ற” நாள் முழுவதும் இது தான்.

ஒரு நாள் அவன் recharge பண்ண கார்டை நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து எண்ணிய போது அதன் மதிப்பு எவ்வளவு வந்தது தெரியுமா? கடைசியில் சொல்கிறேன்.நல்ல தான் போச்சி இவங்க காதல்.வாரம் ஒரு முறை ப்ரொவ்சிங் சென்டர்..ப்ரொவ்சிங் சென்டர் கதவை மூடி விட்டு இவர்கள் காதலை திறந்தார்கள்.வானத்தில் பறந்தார்கள்.காலை எழுந்தவுடன் பேச்சு பின்னர் கனிவை கெடுக்கும் நல்ல சண்டை,மாலை முழுதும் மெசேஜ் என்று வழக்க படுத்தி கொண்டார்கள்.

ஒரு நாள் அந்த பெண்ணின் வீட்டில் லேசாக சந்தேகப்பட்டு, செல்லை பிடுங்கி வைத்து அவளை கொஞ்சு கொஞ்சு என்று கொஞ்சினார்கள்.அவள் “நான் கட்டுனா அவன தான் கட்டுவேன்” என்று சொன்னாள்.வழக்கம் போல அவங்க அம்மா “ஏற்கனவே உனக்கு அப்பா இல்லை.அம்மா நான் தான் கஷ்டப்பட்டு வளர்த்தறேன்.அம்மா வளத்ததால தான் இப்டி வீணா போயிட்டான்னு எல்லாரும் சொல்ல வச்சிடாத” என்ற பாசுபதாஸ்திரத்தை வீசினார்.அந்த அஸ்திரம் இவர்கள் காதலின் அச்சாணியை அட்டாக் செய்துவிட்டது.

மறுநாள் கல்லூரி வந்த அவள் அவனை கண்டுக்கவே இல்லை.அவன் பேசியும் பேசவில்லை.ஏன் என்று கேட்டாலும் காரணம் சொல்லவில்லை.மந்திரிச்சி விட்டா எப்டி இருப்பாங்களோ அப்படியே இருந்தாள்.அவன் “காலில் விழுகிறேன்” என்று கெஞ்சினான்.No response.
அவள் ஒரே வார்த்தை தான் சொன்னாள். “இப்டியே பண்ண..நான் போலீஸ்ல சொல்லிடுவேன்”..அதன் பிறகு அவன் ரொம்பவே மாறிட்டான்.”மாப்ள இனிமே அழகான பொண்ணுங்களா பாத்து செட் பண்றோம்.பாக்க வேண்டியதபாக்கறோம் கலட்டி விடறோம்” என்பதை வாழ்கையின் உயரிய லச்சியமாக உயர்த்தி பிடித்தான்.

நாங்க எண்ணிய அந்த recharge கார்டுகளின் மொத்த மதிப்பு இருபதாயிரம் ரூபாய்..

இது தான் காதலின் விலையோ..

1 comment:

விஸ்வப்ரியா said...

ரீசார்ஜ் கார்ட் அமௌன்டை வைத்து ஒரு உறவைத் தீர்மானிக்க முடியும் என்றால் அதன் பெயர் காதலே இல்லை :) காதலை உணர மனப்பக்குவம் வேண்டும் :)