Monday, August 10, 2015

கூகிளின் புதிய CEO ஒரு தமிழன் - சுந்தர் பிச்சை

கூகிளின் புதிய CEOவாக சுந்தர் பிச்சையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஜவஹர் வித்யாலயாவில் படித்தவர். பின் ஐஐடி காரக்பூரில் பொறீயியல் முடித்து பின் ஸ்டான்ஃபோர்டில் எம்.எஸ் படித்தார்!

முன்பு மைக்ரோசாஃப்ட் CEO போட்டியில் சத்யாவோடு மோதினார். கூகிளில் 2004ல் வேலைக்கு சேர்ந்தார். கூகிள் க்ரோம் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.

”2008 சமயத்தில் ஒரு alternative browser எல்லோருக்கும் தேவைப்பட்டது. அப்போது google chrome ஐ மிகச்சிறப்பாக வடிவமைத்து. இன்று ஒரு மில்லியன் பயனாளர்களுக்கும் மேல் பயன்படுத்துவதற்கு முக்கியக்காரணம் சுந்தர் தான்” என கூகிளின் முந்தைய CEOவான லேர்ரி பேஜ் இவரை பற்றி தன் வலைதளத்தில் குறிப்பிடுகிறார்!

2011ல் டிவிட்டர் இவரை உற்று நோக்கி எங்க கம்பெனிக்கு வைஸ் பிரெசிடெண்டா வர்றீங்களா என கேட்டுக்கொண்டது.. ஆனால் அப்போது கூகிளிலேயே இருக்கப்போவதாக தெரிவித்தார். அது மிகச்சிறப்பான முடிவு. அதனால் தான் இன்று CEO அளவுக்கு உயர்ந்திருக்கிறார்!

தமிழன் ஒருவன் உலகின் தலைசிறந்த தேடுபொறி நிறுவனத்தில் CEO ஆகியிருப்பது தமிழர்களுக்கு பெருமை.. அவருக்கு வாழ்த்துக்கள்! 

Sunday, May 31, 2015

க.சீ.சிவகுமார் பற்றி

நேற்று வித்தியாசமான நாள். ஒரு இலக்கியக்கூட்டம்.. என்னை பேச அழைத்திருந்தார்கள்.. “க.சீ.சிவகுமார் படைப்புகள் ஒரு பார்வை” என்ற தலைப்பு.
ஆதிமங்கலத்து விஷேசங்கள் பற்றி நான் பேசியபோது
எனக்கு அவர் யாருண்ணே தெரியாதே.. என்ன பேசுவேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இணையத்தில் அவர் யாரென தேடிப்பார்த்த போது ஒரு முறை அவரை நீயா நானாவில் பார்த்ததாக நினைவு.. விகடனில் அவர் பெயரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்!
“ஆதிமங்கலத்து விஷேசங்கள்” என்ற அவரின் புத்தகம் பற்றி பேச சொல்லியிருந்தார்கள்..
அந்த புத்தகம் ஜூ.வியில் தொடராக வந்த ஒன்று. ஜாலியான புத்தகம். பஸ்,கார்,கரண்ட்,டார்ச் லைட், டிவி, சினிமா கொட்டாய் இதெல்லாம் இல்லாத ஊர்களில் இவை முதல் முதலில் நுழைந்த போது, ஊர்காரர்கள் அதை அணுகிய விதத்தை நகைச்சுவையாக பதிவு செய்திருந்தார்!
கவித்துவமான எழுத்து..இலக்கிய ஆசாமியாக இருப்பார் போல.. எதாவது பேசி தேத்திடுவோம் என்று தான் நிகழ்வுக்கு சென்றேன்! அவர் மொத்தமே 7 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அவற்றின் பிரதிகள் இப்போது எந்த அச்சிலேயும் இல்லை. எப்போதோ முதல் பதிப்பு கண்டவை. சமீபகாலமாக அவர் எழுதுவதே இல்லையாம். மன உளைச்சலுக்கு ஆளாகி நிறுத்திக்கொண்டாராம்.
க.சீ.சிவகுமார்
அவருடைய பல கதைகள் அரங்கில் பேசப்பட்டது. நல்ல நகைச்சுவை, கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அரங்கமே சிரித்துக்கொண்டிருந்தது! அவர் காலத்து எழுத்தாளர்களெல்லாம் சினிமாவில், சீரியலில் எழுதி காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். “நீங்க ஏன் எதுவுமே பண்ணல” என்ற கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் சுருக்குன்னு இருக்கு! என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாக சிரித்தார்!
அவர் அவரை பற்றி பேசியதை கூட சிரித்துக்கொண்டே, நைய்யாண்டியோடே பேசினார். அவரின் சிரிப்புக்குப்பின் ஒரு மெல்லிய சோகம் இருப்பதை பார்க்க முடிந்தது!
விழா முடிந்து தூரத்தில் நண்பர்களோடு டீ கடையில் தம்மடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்!
யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளன் என் மனதில் ரொம்பநாள் நிற்கப்போவதற்கான அறிகுறி தென்பட்டது!

Wednesday, February 25, 2015

consumercomplaint.in பக்கத்தில் இருந்து புகாரை நீக்குவது எப்படி?

நண்பரின் நண்பர் ஒருவர் சென்னை அரும்பாக்கத்தில் நிறுவனம் வைத்திருக்கிறார். அவரின் நிறுவனத்தை பற்றி consumercomplaints.inல் யாரோ புகார் எழுதியிருக்கிறார். நண்பரின் நிறுவனப்பெயரை கூகிளில் அடித்தாலே consumercomplaints பக்கம் தான் முதலில் வருகிறதாம். அதனால் பிசினஸ் ஹெவியா அடி வாங்கிருச்சி. எங்ககிட்ட business பேசற பூரா பயலும் “உங்கள பத்தி ஒரு கம்ப்ளெயிண்ட் ஒண்ணு கேள்வி பட்டோம்? அதை பத்தி என்ன நினைக்கறீங்க?”ன்னு எதோ குங்குமம்ல பேட்டி எடுக்கறவன் மாதிரி எடுத்துருக்காய்ங்க

நண்பர் அந்த தளத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.. பதிலில்லை. அந்த போஸ்டை போட்டவன் பத்தி எந்த விபரமும் தெரியாது. நீங்க எதாவது பண்ணி அதை கூகிள்லேர்ந்து தூக்க முடியுமா? என்றார்!

அந்த consumercomplaints தளத்தை நடத்துபவன் அமெரிக்காவில் இருக்கிறான். ஏற்கனவே அவன் பெயரில் மும்பை சைபர் செல்லில் கம்ப்ளெயிண்ட் இருக்கு. consumercomplaintsல் யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் எந்த அவதூறையும் எழுதலாம்.. உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களும் எழுதியிருக்கிறார்கள். எனவே எது உண்மை எது பொய் என தெரியாது. இது மாதிரியான பிரச்சினைகளை கையாள்வதற்கு பெயர் reputation management services என்பார்கள்.

யார் புகார் கொடுத்தாரோ அவரிடம் பேசி அவருக்கு இழப்பீடு பெற்று தந்து, அந்த பதிவை நீக்க செய்வோம். அல்லது அந்த தளத்தின் webmaster உடன் பேசி ரிமூவ் செய்யலாம். இரண்டுக்குமே கணிசமான பணம் செலவாகும்.எரியற வீட்டுல புடுங்குனது லாபம்னு நடந்துக்குவாய்ங்க.

ஆனால் இந்த consumercomplaints ஆசாமியை தொடர்புகொள்ளவே முடியாது. பலரும் முயற்சித்து பார்த்திருக்கிறார்கள். 

இன்னொரு உத்தி இருக்கு. கூகிளின் முதல் பக்கத்தில் இருந்து consumercomplaintஐ தூக்கி 3வது 4வது பக்கத்தில் தள்ளிவிட்டால் போதும். பெரிய அளவில் அடி இருக்காது. மற்றவற்றை ஒப்பிடும்போது இதற்கு செலவு குறைவு. பெரு நிறுவனங்கள் இதைத்தான் செய்கிறார்கள்.